Advertisment

கோத்தபய ராஜபக்ச : உலக நாடுகளின் கவனம் முழுவதும் இலங்கையின் மீது திரும்ப காரணம் என்ன?

இந்தியாவுக்கு எதிராக செயல்பட எந்த நாட்டுக்கும் இலங்கை மண் ஒரு போதும் உதவாது - கோத்தபய ராஜபக்ச

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka's New President Gotabaya Rajapaksa

Sri Lanka's New President Gotabaya Rajapaksa

Arun Janardhanan

Advertisment

Sri Lanka's New President Gotabaya Rajapaksa : திங்கள் கிழமை காலை இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார் கோத்தபய ராஜபக்‌ச. அவருடைய பதவியேற்பை தொடர்ந்து அவரின் செயல்பாடுகள் உலக நாடுகளில் அதிக அளவில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். 2005 முதல் 2015ம் ஆண்டு வரை இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்‌ச பதவி வகித்துக் கொண்டிருந்த போது இவர் இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியாற்றினார். தமிழ் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஒடுக்கியதில் மிக முக்கிய பங்கு வகித்தார் இவர். மேலும் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இந்த காரணங்களால் உலக நாடுகள் இவரின் தலைமையை உற்று நோக்குகிறது. இந்தியாவோ “இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவை இவர் எவ்வாறு மேம்படுத்த உள்ளார்” என்பதை கவனிக்க உள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ராஜபக்‌ச சகோதரர்கள்

ராஜபக்‌சகுடும்பத்தில் பிறந்த நான்கு சகோதரர்களும் அரசியலில் ஈடுபட்டவர்கள். இவர்கள் தென் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள். மகிந்த மற்றும் கோத்தபய தவிர்த்து பாசில் ராஜபக்‌ச அதிபரின் ஆலோசகராக 2007 - 2015 காலக்கட்டங்களில் பணியாற்றினார். சமல் ராஜபக்‌ச பாராளுமன்ற சபாநாயகராக 2010 - 2015 ஆண்டுகளில் பணியாற்றினார். தற்போது அவர் அரசியலில் பெரிதும் ஈடுபடுவதில்லை. கோத்தபயவின் இரத்தத்தில் அரசியல் இருக்கிறது என்று அவருடைய சகோதரர் பாஸில் அறிவித்தார். இவர்களுடைய அப்பாவும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபய ராஜபக்ச

ஃபார்மர் லெஃப்டினண்ட் கர்னலாக 20 வருடங்கள் பணியாற்றிய கோத்தபய ராஜபக்ச 1992 முதல் 2005 வரையான கால கட்டங்களில் அமெரிக்காவில் பணியாற்றினார். பிறகு தாயகம் திரும்பிய அவர் பாதுகாப்புத்துறை செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவுக்கு வராமல் இருந்த இலங்கை உள்நாட்டு போரினை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு திட்டங்களை இவர் தீட்டினார். 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஒடுக்க இந்திய மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் இலங்கைக்கு உதவின. இறுதிகட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் ராணுவத்துறையினரும் கொல்லப்பட்டன்னர். சமாதானம் என்று வெள்ளைக்கொடியுடன் வந்த இலங்கைப் புலிகளை இலங்கை ராணுவத்தினர் கொன்றனர். எல்.டி.டி.ஐயை ஒடுக்கும் பொருட்டு இவர் எடுத்த முயற்சிகள் இவருக்கு இலங்கை சிங்களர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கொழும்பு நகரை சீர்படுத்தியத்தும் நகர மேம்பாட்டுக்காக உழைத்ததற்காகவும் இவர் பெரிதும் பாராட்டப்பட்டவர்.

போர் குறித்து கோத்தபயவின் கருத்து

போர்குற்றங்கள் குறித்து இவரிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்ட போது, கடந்த காலத்தை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வதற்கான நேரம் இது என்று கூறினார். 2018ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பேட்டியின் போது “போர் நல்ல விசயமில்லை. ஆனால் இலங்கையில் நான் போரை துவங்கவில்லை. மாறாக போரை முடித்து தான் வைத்தேன். எல்.டி.டி.இ இல்லாமல் எங்களின் நாடு நன்றாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

போர் காலங்களில் பலர் மரணங்களை பார்த்த நீங்கள் எப்படி தூங்கினீர்கள் என்று கேள்வி கேட்ட போது, தீவிரவாத செயல்களால் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் உயிரிழக்கத்தான் செய்தனர். குண்டுகளுக்கு நண்பன் யார் பகைவன் யார் என்றெல்லாம் தெரியாது. எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. நான் போரின் ஒவ்வொரு நாள் இரவிலும் நன்றாக தான் தூங்கினேன் என்றார்.

எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் கோத்தபய?

தன்னுடைய பதவி ஏற்பு நிகழ்வின் போது உரையாற்றிய கோத்தபய “இந்நாட்டின் பாதுகாப்பினை பற்றி நான் அதிகம் பொறுப்பெடுத்துக் கொள்கின்றேன். என்னுடைய அரசு இந்த நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யும். தீவிரவாதம், கொள்ளை, நிழல்உலக நடவடிக்கைகளில் இருந்து இந்த நாட்டினை காக்க பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும்” என்று கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் 250க்கும் மேற்பட்டோர் புனித ஞாயிறு அன்று தேவாலய தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கலைக்கப்படுமா இலங்கை நாடாளுமன்றம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆட்சியை கலைக்கும் வரை ஆட்சி அமைக்கப்படாது என்று கூறியுள்ளார் கோத்தபய. ரணில் விக்கிரம்சிங்கேவின் ஒருங்கிணைந்த தேசிய கட்சி தற்போது தன்னுடைய ஆட்சியை கலைக்குமா என்பதும் கேள்விக்குறிதான். தற்போது கோத்தபய ராணுவம் மற்றும் முக்கிய அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்ள இயலும். ஆட்சி என்பது பிரதமர் தேர்தல் மார்ச் மாதம் முடிவுற்ற பின்னரே அமைக்க இயலும் அல்லது சொந்தமாக அமைச்சரவையை உருவாக்கிக் கொள்ளலாம். அதிபர் தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்த சஜித் பிரமதாசா கூறுகையில்”தற்போதைய நாடாளுமன்றம் நிறைவடைய நாட்கள் இருக்கின்றது. அதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்படால் நிச்சயம் எதிர்த்து குரல் கொடுப்போம்” என்று அறிவித்திருக்கிறார்.

சீனாவுடனான உறவு

ஒரு வலிமையான இலங்கை அதிபர் நிச்சயமாக இந்தியாவுடன் மிகவும் நெருங்கிய நட்புடன் தான் இருப்பார். ஆனால் அவருடைய சொந்த நாட்டின் சுதந்திரம், சுய அதிகாரம் ஆகியவற்றை பாதுகாக்க தவற மாட்டார் என்று கூறினார். மகிந்த ஆட்சியின் போது சீனாவுடனான இலங்கையின் உறவு இந்தியாவை பெரிதும் யோசிக்க வைத்தது. சீனாவின் போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி கொழும்பு வரை சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது. சீனா அந்த சமயத்தில் இலங்கைக்கு பெரிதும் உதவியது. இலங்கையில் துறைமுகங்கள் கட்டவும்,. சாலைகள் போடவும் பொருளாதார ரீதியாக உதவியது சீனா.

இந்தியாவுக்கு எதிராக செயல்பட எந்த நாட்டுக்கும் இலங்கை மண் உதவாது என்று உத்தரவாதம் அளித்தார் கோத்தபய ராஜபக்ச. ஆனால் தற்போது அவருடைய ஆலோசகர் ஒருவர் இந்தியாவுடன் நட்பு நாடாக நிச்சயம் இலங்கை திகழும். ஆனாலும் சீனாவுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவதில் நிச்சயம் ஆர்வம் காட்டுவோம் என்றும் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கோத்தபயவுக்கு குடியுரிமை இருப்பது குறித்தும் இரட்டைக் குடியுரிமை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர் எதிர்கட்சியினர். ஆனால் கோத்தபய குழு முழுமையாக அதனை மறுத்துள்ளது.

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment