இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்; புர்கா அணிய தடை விதித்த அரசு

இலங்கையில் உள்ள 21 மில்லியன் மக்கள் தொகையில் 10% மக்கள் இஸ்லாமியர்கள். அவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள்.

Sri Lankas war on terror burqa ban draconian Act deradicalisation : சனிக்கிழமை அன்று இலங்கையின் பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா, விரைவில் புர்கா அணிய இலங்கை பெண்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான முன்மொழிவு கையெழுத்திடப்பட்டு நாடாளுமன்ற, அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கின்றோம் என்று கூறினார்.

இந்த மசோதா நிச்சயம் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்‌ஷேவிற்கு தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளது. புர்காவிற்கு தடைவிதித்த ஐரோப்பிய நாடுகள் உட்பட சில நாடுகளில் இலங்கையும் அடங்கும்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு இரண்டாம் ஆண்டு நினைவு தினம்?

இலங்கையில் உள்ள 21 மில்லியன் மக்கள் தொகையில் 10% மக்கள் இஸ்லாமியர்கள். அவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈஸ்டர் குண்டு வெடிப்பு நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் அந்நாட்டு அரசு கொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர்களை புதைக்க தடை விதித்ததை தொடர்ந்து இஸ்லாமிய தலைவர்கள் இது தொடர்பாக நீதி மன்றத்தை நாடினார்கள். அந்த வழக்கில் இஸ்லாமியர்கள் தோல்வியுற்ற போதிலும் கூட, இது இஸ்லாமிய நாடுகளின் மனக்கசப்பிற்கு வழி வகுத்தது. இலங்கைக்கு பயணம் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட இது தொடர்பாக பொதுவெளியில் பேசினார். தமிழ் பிரச்சினையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விமர்சனங்கள் ஏற்பட்ட நிலையில் அரசாங்கம் அடக்கம் செய்ய அனுமதித்துள்ளது

கொழும்பில் தேவாலயங்கள், விடுதிகள் மற்றும் மேலும் இரண்டு இடங்களில் நடைபெற்ற 6 தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக குடியரசு ஆணையம் விசாரணை மேற்கொண்டு அதன் முடிவை குடியரசு தலைவர் கோத்தபய ராஜபக்‌ஷவிடம் ஒப்படைத்தது. தேவாலயங்கள் இந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, கேபினட் அமைச்சர்களை நியமித்து அந்த அறிக்கையை ஆராய குடியரசு தலைவர் முடிவு செய்தார்.

“பாராளுமன்றம், நீதித்துறை, அட்டர்னி ஜெனரல் , பாதுகாப்புப் படைகள், மாநில புலனாய்வு சேவைகள் போன்ற பல்வேறு ஏஜென்சிகள் மற்றும் அதிகாரிகளால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உட்பட ஒட்டுமொத்த செயல்முறையை அடையாளம் காணவும், பிசிஓஐ விதித்தபடி பரிந்துரைகளை அமல்படுத்தவும், இது போன்ற பாரிய அளவில் பேரழிவுகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை ஊடகத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

புர்கா அணிய தடை விதிப்பதுடன், வீரசேகரா அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் 1000 மதராசாக்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத கருத்துகளை பரப்புவதாக கருதப்படும் எந்த ஒரு நபரையும் ஒழுங்குப்படுத்தும் நடைமுறைக்காக இரண்டு ஆண்டுகள் வரை தடுப்பு காவ்வலில் வைக்க கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

புர்கா, ஹிஜாப், மற்றும் தேசிய பாதுகாப்பு

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு பிறகு இலங்கை அரசு நிகாப்பினை தற்காலிகமாக தடை செய்தது. இருப்பினும் தெளிவற்ற வகையில் அனைத்து முக உறைகளையும் தடை செய்வதாக அது கூறியது. புர்கா தடை தேசிய பாதுகாப்பு மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. வீரசேகரா நேரடியாக உங்கள் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் ஒன்றாகும். இது சமீபத்தில் தான் இலங்கைக்கு வந்தது. அது அவர்களின் மத தீவிரவாதத்தின் சின்னமாக இருக்கிறது என்று கூறினார்.

இந்தத் தடை இலங்கை முஸ்லிம்களிடையே சமூகத்தில் ஒரு சிலரின் செயல்களுக்காக அவர்கள் கூட்டாக தண்டிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை அதிகரிக்கும். பயங்கரவாதக் குழுவின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு பொறுப்பேற்றுக் கொண்டார்.

தற்காலிக நிகாப் தடை இரட்டை பாகுபாடாக இருக்கிறது என்றும், மதத்திற்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் இருக்கிறது என்று கூறினார். இலங்கையில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்தே ஆக வேண்டும் என்று கூறும் இஸ்லாமிய ஆணைகள் ஏதும் இல்லை. உண்மையில், நிறைய இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதில்லை. முன்பைக் காட்டிலும் தற்போது பெண்கள் புர்கா அணியும் பழக்கம் அதிகரித்துள்ளது. உலகின் மற்ற இடங்களைப் போன்றே தனி நபர் விருப்பமாகவும் அடையாளமாகவே இது இருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழர்களைக் காட்டிலும் தேசிய மற்றும் பிரதான அரசியல் நீரோட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் அந்த சிறுபான்மை சமூகத்தை விளிம்பில் ஆழ்த்தியுள்ளது., இந்த மோசமான தாக்குதலுக்கு முன்பே பெரும்பானை புத்த பிரதிநிதிகள் போது பாலசேனா, சிங்கள ராவயா, சிங்கள மற்றும் மஹாசன் பாலயா போன்றவர்களால் இஸ்லாமியர்கள் தாக்குதல்களுக்கு ஆளானார்கள்.

இந்த குழுக்களில் பிபிஎஸ் மிகவும் சக்தி வாய்ந்தது, ஏனெனில் ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்திர ராஜபக்ஷ ஆகியோர் அதனுடன் இணைந்தனர். இந்த குழுக்களின் பிரச்சாரங்கள் முஸ்லீம் பெண்களால் ஹிஜாப், புர்கா மற்றும் நிகாப் அணிவது மற்றும் உணவு பேக்கேஜிங் குறித்த ஹலால் லேபிளிங் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன, மேலும் இரு சமூகங்களிடையே குறிப்பாக போருக்குப் பிந்தைய இலங்கையில் பெரும் பதற்றத்திற்கு வழிவகுத்தன. கடந்த தசாப்தத்தில் முஸ்லிம்களை குறிவைத்து பல கலவரங்கள் நடந்துள்ளன.

சுவிட்சர்லாந்தை தொடர்ந்து

சுவிட்சர்லாந்தில் மார்ச் 8ம் தேதி அன்று புர்காவிற்கு தடை விதிக்கப்பட்டது. அதே சமையத்தில் தான் இலங்கையிலும் தடை அறிவிக்கப்பட்டது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் சுவிட்சர்லாந்தின் இந்த தடை அறிவிப்பை பாகுபாடு என்றும் மிகவும் வருந்தக்கூடியது என்றும் அறிவித்தது.

முகம் மறைப்பது எப்படி பாதுகாப்பு, சுகாதாரம் அல்லது பிறரின் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதற்கான தெளிவற்ற நியாயங்களை சுவிஸ் நாடு வெளிப்படுத்தியுள்ளது என்று கண்டனங்களை பதிவு செய்துள்ளது ஐ.நா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sri lankas war on terror burqa ban draconian act deradicalisation

Next Story
முகமூடியோடு 3 அடி சமூக இடைவெளி போதும் – புதிய ஆய்வு முடிவுகள்With masks on gap of 3 feet found as effective as 6 feet Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com