விவசாயக் கடன் தள்ளுபடி: சாதகமா? பாதகமா? ஒரு முழு ஆய்வு

விவசாயக் கடன் தள்ளுபடி- வேறுவிதமாகக் கூறினால்,சந்தையில் இருந்து  கடன் வாங்கும் தொகை உயரும்  அல்லது அரசாங்கம் தனக்கான செலவுகளைக் குறைக்க நேரிடும்.

விவசாயக் கடன் தள்ளுபடிகள் செய்வதன் மூலம் மாநில அரசின் நிதி மேலாண்மையில் எவ்வாறு தாங்கங்களை ஏற்படுத்திகின்றன என்பதை ஆராய்வதற்காக கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்ட இன்டெர்னல் வொர்கிங் குரூப் அறிக்கையை இந்தியா ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளியன்று வெளியிட்டது.

2014-15 முதல், பல மாநில அரசுகள் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்து வருகின்றன. தொடர்ச்சியான வறட்சி மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்றவைகளால் குறைந்த வருமானத்துடன் போராடும் துன்பகரமான விவசாயிகளை விடுவிப்பதற்காக இந்த விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆனால் இது நிரந்தரமில்லாதது என்று  ரிசர்வ் வங்கி உட்பட பொருளாதாரத்தின் பல பார்வையாளர்கள் விவசாயக் கடன் தள்ளுபடியைப் பற்றிய தங்களது கருத்துகளையும் தெரிவித்தனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றிய சாதக பாதங்களை கீழே பார்க்கலாம்.

 

விவசாயக் கடன் தள்ளுபடியால் மாநில நிதி வருவாயில் என்ன பாதிப்பு ஏற்பட்டும்?

பாடம் ஒன்றைப் பார்த்தாலே தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத் தள்ளுபடி கடன் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. 2014-15 முதல் 2018-19 வரையில் பல்வேறு மாநிலங்களால் விவசாயக் கடன் தளுபடி செய்த தொகையின் அளவு 2.36ட்ரில்லியன் ஆகும். இதில், உண்மையாய் கடன் தள்ளுபடி செய்த தொகை 1.5 ட்ரில்லியன் ஆகும். இன்னும், ஆழமாய் சொல்ல வேண்டும் என்றால் 2008-09 ல் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் மிகப்பெரியு  0.72 ட்ரில்லியன் கடன் தள்ளுபடி அறிவித்தது. இந்த அறிவிப்பில் 2008-09 முதல் 2011-12 வரை வெரும்  0.53 ட்ரில்லியன் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது.

ஆகவே,  கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு சில மாநிலங்கள் ஏற்கனவே 2008-09ல் மத்திய அரசு தள்ளுபடி செய்த தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகவே தள்ளுபடி செய்துள்ளன. இதில், அதிகப்படியான கடன் தள்ளுபடி 2017-18 பணமதிப்பு  நீக்கம் செய்யப்பட்ட போதுதான் நடைமுறை படுத்தப் பட்டது . பணமதிப்பு நீக்கம் விவசாயிகளின் வருவாயில் கைவைத்தது என்பதே இதற்கு பொருள்.

விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதினால்  பொருளாதார வளர்ச்சியில் வரும்  தாக்கங்கள் என்னென்ன ?

அடிப்படை சாராம்சத்தில் பார்த்தால் , விவசாயக் கடன் தள்ளுபடி  என்பது ஒரு விவசாயி வங்கிக்கு செலுத்த வேண்டிய தனியார் கடனை அரசாங்கம் தீர்த்து வைப்பதாகும். ஆனால் அவ்வாறு செய்வதினால் அரசாங்கத்தின் வளங்கள் சமரசம் செய்ய ப் படுகிறது. இதன் விளைவாய் பின்வரும் இரண்டு விஷயங்களில் ஒன்றிற்கு வழிவகுக்கிறது:

விவசாயக் கடன் தள்ளுபடியால்அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை உயர்கிறது

( வேறுவிதமாகக் கூறினால், சந்தையில் இருந்து  கடன் வாங்கும் தொகை உயரும்)

அல்லது

அரசாங்கம் தனக்கான செலவுகளைக் குறைக்க நேரிடும்.

சந்தையிலுள்ள பணங்களை எல்லாம் அரசாங்கம் கடனாக பெற்றால்(அரசுப் பத்திரங்கள் மூலமாக) தனியார் மற்றும் பெரிய வணிகங்களுக்கு சந்தையில் இருந்து கடன் வாங்குவதற்கான பணத்தின் அளவு குறைவாக இருக்கும்.  மேலும், சந்தையில் பணத் தேவை அதிகமாவதால், பணத்திற்கான விலையும் உயரத் தொடங்கும் (அதாவது, வட்டிவிகிதம்). வட்டி விகிதம் உயர்ந்தால் சிறு/பெரிய வணிக நிறுவவணங்கள் முதலீடு செய்யாமல் தொழிலை விரிவாக்கத்தை முடக்குவதால் வேலை வாய்ப்பு அந்த சமூகத்தில் குறையத்  தொடங்குகின்றன.

“சுருங்கச் சொன்னால்:விவசாயக் கடன் தள்ளுபடி—- அரசாங்கம் பணம் செலவு செய்கிறது—– சந்தையில் கடன் வாங்குகிறது—–ஆகையால், சந்தையில் வணிகங்ளுக்கு கடன் வாங்கும் விலை அதிமாகும்(பணத்தின் வட்டி விகுதம்)—— முதலீடு குறையும் —- வேலை வாய்ப்பு குறையும்”.

இரண்டாவதாக, சந்தையில் கடன் வாங்காமல் அரசு தனது செலவீனங்களை குறைக்கலாம். பெரும்பாலும் சாலைகள், கட்டிடங்கள், பள்ளிகள் போன்ற உற்பத்தி சொத்துக்களை உருவாக்கும் மூலதன செலவினங்களைக் குறைக்கும். அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற வருவாய் செலவினங்களை அரசாங்கத்தால் குறைப்பது மிகவும் கடினம்.

எனவே, மூலதன செலவீனங்கள் குறைக்கப்பட்டால் அன்றாட மக்களின் சமூக பாதுகாப்பு கேள்விகுரியாகப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

எனவே, மாநிலங்கள் தங்கள் நிதி பற்றாக்குறையை அதிகரிக்கிறதா அல்லது மூலதன செலவினங்களைக் குறைக்கிறதா?

விளக்கப்படம் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட மாநிலங்களைப் பற்றி எந்தவிதமான பதிலும் இல்லை.  மாநில அரசாங்கத்தின் பட்ஜெட்களை பகுப்பாய்வு செய்த தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் (என்ஐபிஎஃப்.பி) விவசாயக் கடன்  தள்ளுபடிகள் இருந்தபோதிலும், மாநில அரசுகளின் நிதி நிலைமை கவலைக் கொள்ளும் அளவில் இல்லை என்று தெரிவித்திருந்தது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாநில அரசாங்கங்கள் நிதி விவகாரங்களில் சற்று திரண்பட்டவைகளாய் இருக்கின்றன. தங்கள் வருவாய் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதில் பூஜ்ஜியமாகவும், நிதி பற்றாக்குறையை நாட்டின்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதமாகும் வைத்திருக்கின்றன. (பின் குறிப்பு – விளக்கப்படம் 2 ல் உஜ்ஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா வால் மின் விநியோக நிறுவனங்களின் அரசு சுமக்க வேண்டியதாய் இருந்தது. அந்த இழப்பு விழக்கப்படத்தில் சேர்க்கபடவில்லை )

இந்த சந்தோஷத்தில், சிறிய சோகமும் கலந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் மூலதன  செலவினங்களைக் குறைப்பதன் மூலமே நிதி பற்றாக் குறையை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.

விளக்கப்படம் 3 – ல் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறையில் கம்மியாகவே செலவு செய்கின்றன.  செலவினங்களுக்குள், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (என்ஐபிஎஃப்.பி) மனிஷ் குப்தா சுட்டிக்காட்டியுள்ளபடி, வருவாய் செலவினங்களை விட  மூலதனச் செலவு ஒப்பீட்டளவில்  அதிகளவில் குறைக்கப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மாநில பொருளாதாரம்  எவ்வளவு முக்கியம் ?

பெரும்பாலும், இந்திய பொருளாதாரத்த்தைப் பற்றிய  பகுப்பாய்வுகள் மத்திய அரசாங்கத்தின் நிதி வருவாயை மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால், அடிப்படை உண்மை அவ்வளவு சுலபமல்ல. அனைத்து மாநிலங்களும் கூட்டாக இப்போது மத்திய அரசை விட 30 சதவீதம் அதிகமாக செலவிடுகின்றன என்பதை மாநில நிதி நிலைமையைக் குறித்த என்ஐபிஎஃப் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

 

மேலும், விளக்கப்படம் 4 காட்டுவது போல், 2014 முதல், மாநில அரசுகள் சந்தையில் இருந்து அதிகளவில் கடன் வருகின்றன. உதாரணமாக, 2016-17 ஆம் ஆண்டில், அனைத்து மாநிலங்களின் மொத்த நிகர கடன்கள் மத்திய அரசு கடன் வாங்கிய தொகையில் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கின்றது (தோராயமாக 86 சதவீதம்).

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close