Advertisment

அற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை

பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. தற்போது பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
அற்புதம் அம்மாள் இடைவிடாத போராட்டம்: பேரறிவாளன் மீண்ட கதை

ஏ.ஜி. பேரறிவாளன் என்கிற அறிவுக்கு 50 வயதாகிறது. அவர் ஜூன் 11, 1991 இல் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. சதித்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராசனுக்காக இரண்டு 9 வோல்ட் ‘கோல்டன் பவர்’ பேட்டரி செல்களை வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆண்டு மே 21 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் அந்த பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டன.

Advertisment

கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் வேலூர் மற்றும் புழல் மத்திய சிறைகளில் இருந்து வரும் பேரறிவாளன் நடத்திய பல சட்டப் போராட்டங்கள் மூலம் பேரறிவாளன் விடுவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க புதன்கிழமை (மே 18) உத்தரவிட்டது.

பல சட்டப் போராட்டங்களும் பேரறிவாளன் சிறைவாசமும்

பேரறிவாளனுக்கு 1998-இல் தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1999-இல் உச்ச நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்தது. இந்த வழக்கில் முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையுடன் சேர்த்து 2014 பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு, பேரறிவாளன் தமிழக ஆளுநரிடம் விடுதலை செய்யக் கோரி அளித்த மனுவின் ஒரு பகுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 161 வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் பதில் கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 2017 இல், தமிழ்க் கவிஞரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான தனது நோய்வாய்ப்பட்ட தந்தையைப் பார்ப்பதற்காக அவர் முதல் முறையாக சிறை விடுப்பு பெற்றார்.

அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட பல்வேறு குற்றங்களில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை அவர் அனுபவித்து முடித்துவிட்டதாகவும், இப்போது அவர் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) இன் கீழ் மட்டுமே சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் சிறை விடுப்பு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் வழக்கை பரிசீலிக்க உரிய அதிகாரத்திற்கு (மாநில அரசு) இடம் உள்ளது என்று அந்த உத்தரவில் கூறியது.

அவரது மனு குறித்து நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஆனது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது மனு மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு என்று செப்டம்பர் 2018 இல் கூறியது. சில நாட்களில், அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை, இந்த வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்தது. ஆனால், அமைச்சரவையின் பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்தார்.

publive-image

பேரறிவாளனின் தாயார் அற்புதம் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ ஜெயலலிதாவை பிப்ரவரி 2014 இல் சென்னையில் சந்தித்தார். (எக்ஸ்பிரஸ் படம்)

2020 ஜூலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து ஆளுநர் கடுமையான கருத்துக்களை எதிர்கொண்டார். "அரசியலமைப்பு பதவியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் காரணமாக" இது போன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க அரசியலமைப்பு அதிகாரத்திற்கு (ஆளுநர்) காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை உயர்நீதிமன்றம் ஆளுநருக்கு நினைவூட்டியது. “அத்தகைய அதிகாரம் (ஆளுநர்) சரியான நேரத்தில் முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றம் தலையிடுவதற்கு கட்டுப்படுத்தப்படும்” என்று நீதிமன்றம் கூறியது.

ஜனவரி 2021 இல், உச்ச நீதிமன்றமும் ஆளுநர் தரப்பில் நீண்ட கால தாமதம் செய்வது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்க நிர்பந்திக்கப்படலாம் என்று எச்சரித்தது. முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படாது என அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார். ஆனால், ஆளுநர் அலுவலகம் பிப்ரவரி 2021 இல் முடிவெடுப்பதற்காக இந்த கோப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஆளுநரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என்று கூறினார்கள். அதன் பிறகு பல விசாரணைகளில் உச்ச நீதிமன்றத்தின் நகர்வு குறித்த கேள்விகளை எழுப்பியது. இந்த விவகாரம் ராஷ்டிரபதி பவனில் இருந்தது.

இதற்கிடையில், மே 19, 2021 இல் பேரறிவாளனுக்கு மாநில அரசு பரோல் வழங்கியது. பின்னர் அவரது பரோல் உடல்நலக் காரணங்களுக்காக நீட்டிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் மார்ச் 9, 2022 இல் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

பேரறிவாளனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

“… இரண்டு 9 வோல்ட் பேட்டரி செல்களை (கோல்டன் பவர்) வாங்கி சிவராசனிடம் கொடுத்தேன். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய அவர் இவற்றை மட்டுமே பயன்படுத்தினார்” என்று பேரறிவாளனின் வாக்குமூலம் தடா பிரிவு 15 (1) இன் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டது. இது கொலையாளிகளுடன் அவருக்கு தொடர்பை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

தடா நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு தெரிந்திருந்ததையும் படுகொலையில் பங்கையும் நிறுவ பயன்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஆனால், 1999 ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து ஆளுநர், குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் பலமுறை மனுக்களில் பேரறிவாளன் நிரபராதி எனத் தொடர்ந்து கூறிவந்தார்.

பேரறிவாளனின் வாதத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில், 1981-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான வி தியாகராஜன், தடா சட்டத்தின் கீழ் பேரறிவாளன் காவலில் இருந்தபோது, ​​பேரறிவாளனிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையை மாற்றியமைத்ததாக 2013 ஆம் ஆண்டு தெரிவித்தார். பேட்டரிகளை வாங்கியதாக பேரறிவாளன் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், அதன் நோக்கம் என்னவென்று தெரியாது என்று பேரறிவாளன் கூறியதாக தியாகராஜன் தெரிவித்தார்.

“ஒரு புலனாய்வு அதிகாரியாக அது என்னை ஒரு இக்கட்டான நிலையில் வைத்தது. சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் ஒப்புக் கொள்ளாமல் அது ஒப்புதல் வாக்குமூலமாக தகுதி பெறாது. அங்கே அவரது அறிக்கையின் ஒரு பகுதியை தவிர்த்துவிட்டு எனது விளக்கத்தையும் சேர்த்துள்ளேன்” என்று தியாகராஜன் கூறினார். இது தொடர்பான பிரமாண பத்திரமும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பேரறிவாளனின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் வகையில் 9 வோல்ட் பேட்டரி தொடர்பான 4 சாட்சிகளிடம் தடா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த 4 சாட்சிகளில், 3 பேர் தடயவியல் நிபுணர்கள் பேட்டரி மற்றும் வெடிகுண்டு குறித்து நிபுணத்து கருத்துக்களை வழங்கினர். 4வது சாட்சி சென்னையில் உள்ள ஒரு கடையில் பேட்டரியை விற்றதாகக் கூறிய ஊழியர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் இறுதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.டி. தாமஸ் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு 2017 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், பேரறிவாளன் வழக்கு, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வாக்குமூலம் மற்றொருவருக்கு எதிராக பயன்படுத்தப்படுவது குறித்து தீவிர விவாதத்தை உருவாக்கிய இந்த வழக்கின் மற்றொரு அம்சத்தை முன்னுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

“வழக்கமான சாட்சியச் சட்டத்தின் கீழ், ஒப்புதல் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், எனது அமர்வில் இருந்த மற்ற இரண்டு நீதிபதிகளும் ஒப்புக்கொள்ளவில்லை. நாம் அதை ஆதாரமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுபோன்ற தவறாக சட்டம் பயன்படுத்துவதைத் தடுக்க, நான் அவர்களை என் இல்லத்திற்கு அழைத்தேன். அங்கே நாங்கள் பல சுற்று விவாதங்களை நடத்தினோம். அதில் நான் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தேன். ஆனால், தீர்ப்பில் பெரும்பான்மையானவர்கள் வாக்குமூல அறிக்கையை தடா (பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்) கீழ் இருந்ததால் அதை முக்கிய ஆதாரமாகக் கருதினர். பின்னர், பல மூத்த நீதிபதிகள் என்னை அழைத்து, பெரும்பான்மை உத்தரவு இந்த வழக்கில் தவறான சட்டத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

பேரறிவாளனுக்கு ஆதரவாக நின்ற நீதிபதிகள்

மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தின் முகமாக உருவெடுத்த அவரது தாயார் அற்புதம் அம்மாளின் உறுதியும் அர்ப்பணிப்பும், அனைத்துத் தரப்பு மக்களிடமும் அவர் பெற்ற அனுதாபமும், இரக்கமும் பேரறிவாளனின் நீண்ட காலப் போராட்டத்துக்கு ஆதாரமான காரணிகளில் ஒன்றாகும்.

“அவரது ஆன்மா விலைமதிப்பற்றது, அவரது மதிப்புகள் உன்னதமானது, அவரது சிறை வாழ்க்கை அவரை குற்றவாளியாக்கவில்லை” என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் 2006 இல் எழுதினார். நீதிபதி கிருஷ்ணய்யர் இறக்கும் வரை பேரறிவாளனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

2014 இல் மூன்று குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கில், 2013 இல் ‘இரட்டை ஆபத்து’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி தாமஸ், சோனியா காந்தியிடம் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று கோரினார். குடியரசுத் தலைவருக்கு மீண்டும் அனுப்புவதற்கான ஆளுநரின் முடிவை விசாரிக்கப்படாதது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறினார்.

மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவை 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்க 1964 இல் மத்திய அரசு எடுத்த முடிவை அவர் சுட்டிக்காட்டினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Rajiv Gandhi A G Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment