Advertisment

இறையாண்மைக்கு கேடு விளைவித்தால் அங்கீகாரம் ரத்து…பத்திரிகையாளர் புதிய கொள்கை சொல்வது என்ன?

பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் என்ன மாற்றம் இடம்பெற்றுள்ளது? என்ன கவலைகளை ஏற்படுத்துகிறது?

author-image
WebDesk
New Update
இறையாண்மைக்கு கேடு விளைவித்தால் அங்கீகாரம் ரத்து…பத்திரிகையாளர் புதிய கொள்கை சொல்வது என்ன?

2022ம் ஆண்டுக்கான மத்திய ஊடக அங்கீகார வழிகாட்டுதல்களை மத்திய அரசுவெளியிட்டது. அதில், இறையாண்மைக்கு கேடு விளைவித்தால் பத்திரிகையாளர் அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

Advertisment

புதிய மாற்றம் என்ன?

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் (I&B) தயாரிக்கப்பட்டு, பத்திரிகை தகவல் பணியகத்தால் வெளியிடப்பட்ட புதிய கொள்கையில் தகுதியுள்ள பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரம் எவ்வாறு வழங்கப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. தற்போது நாட்டில் 2,457 அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

முதன்முறையாக, பத்திரிக்கையாளர் அங்கீகாரத்தை இழக்க நேரிடம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிப்பது, குற்றத்தை துாண்டுதல், நீதிமன்ற அவமதிப்பு, அவதுாறு செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவரது மத்திய அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 இல் வெளியான முந்தைய கொள்கையில், அரசு அங்கீகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டால், அது திரும்பப் பெறப்படும்/ இடைநிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய கொள்கை ஏற்படும் கவலைகள்?

அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள், பெரிய வணிகர்கள், கார்ப்பரேட் குழுக்கள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த தவறுகளை அம்பலப்படுத்துவது ஒரு பத்திரிகையாளரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும். அச்சமயத்தில், புதிய கொள்கையை பயன்படுத்தி அங்கீகாரத்தை பறித்துவிடுவேன் என மிரட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஊடகவியலாளர்கள் அரசாங்கத்திற்கு பிடிக்காத பிரச்சினைகள் மற்றும் கொள்கை முடிவுகளை அடிக்கடி தெரிவிக்கின்றனர். புதிய கொள்கையின்படி, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது ஒழுங்குக்கு கேடு விளைவிப்பது, குற்றத்தை துாண்டுதல், நீதிமன்ற அவமதிப்பு, அவதுாறு செயல்களில் ஈடுபட்டாலும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என கூறப்படும் நிலையில், சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து விசாரிக்கையில், இதில் ஏதேனும் ஒன்றை மீறிவதற்கான வாய்ப்பு கட்டாயம் ஏற்படலாம் என கூறுகின்றனர்.

அரசு அங்கீகாரத்தின் பலன் என்ன?

இந்த அங்கீகாரம் பத்திரிகையாளர்களுக்கு "எந்தவொரு உத்தியோகபூர்வ அல்லது சிறப்பு அந்தஸ்தை வழங்காது. ஆனால், professional working journalist என்ற அங்கீகாரத்தை வழங்குகிறது.

இந்த அங்கீகாரம் இருந்தால் மூன்று பலன்கள் உள்ளன. ஒன்று, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற வி.வி.ஐ.பி.க்கள் அல்லது பிரமுகர்கள் கலந்து கொள்ளும் சில நிகழ்வுகளில், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாவது, இந்த அங்கீகார அட்டை வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் தனது ஆதாரம் குறித்து தகவல் பாதுகாத்திட முடியும். உதாரணமாக, மத்திய அமைச்சர்கள் அலுவலகத்திற்கு செல்கையில், நுழைவு வாசலில் யாரை சந்திக்கப்போகீறிர்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. உள்துறை அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் அலுவலகங்களுக்குள் இந்த கார்ட் வைத்திருந்தால் தாராளமாக செல்லலாம்.

மூன்றாவதாக, மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தில் சேர்க்கப்படுதல் மற்றும் ரயில்வே டிக்கெட்டுகளில் சில சலுகைகள் போன்ற சில நன்மைகளை பத்திரிகையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு கிடைக்கிறது.

இதற்கு முன்னரும் இதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளதா?

பல அரசாங்கங்கள் முயற்சி செய்தன. ஆனால் வழக்கமாக திரும்பப் பெற வேண்டியிருந்தாக இருக்கும்.

2018 ஆம் ஆண்டில், NDA அரசாங்கம் போலிச் செய்தி வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது, பத்திரிகையாளர் போலிச் செய்திகளைப் பரப்பியதாக ஊடக ஒழுங்குமுறை அமைப்புகள் தீர்ப்பளித்தால், ஒரு பத்திரிகையாளரின் அங்கீகாரத்தை இடைநிறுத்தலாம் மற்றும் நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தெரிவித்தது. ஆனால், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் அரசாங்கம் மாநில அதிகாரிகளை "மோசமான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில்" இருந்து பாதுகாக்கும் மசோதாவைக் கொண்டு வந்தது. அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.ஆனால், அந்த மசோதாவும் வாபஸ் பெறப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், UPA ஆட்சியின் போது, ​​காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன், மக்களவையில் ஒரு தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்த விருப்பம் தெரிவித்தார். அதாவது, வெளிநாடு அல்லது உள் மூலங்களிலிருந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது சம்பவத்தை நிறுத்தவோ அல்லது அதனை இடைநிறுத்தும் அதிகாரம் கொண்ட ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க முன்மொழிந்தது. இறுதியில் நடராஜன் மசோதாவை அறிமுகப்படுத்தவில்லை. அவரது கட்சியும் ஆதரவு அளிக்கவில்லை.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஊழல் குற்றச்சாட்டுகளால் உலுக்கிய அவரது அரசாங்கம், 1988 இல் ஒரு அவதூறு மசோதாவை முன்மொழிந்து. அதாவது, எந்தவொரு தனி நபரின் குற்றங்களையும், பொய்யாக கருதப்படும் குற்றங்களையும் பொதுவெளியில் வெளியிடு அனுமதி வழங்குகிறது. இருப்பினும், இறுதியாக அந்த முன்மொழிவு வாபஸ் பெறப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Journalist
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment