இந்தியாவின் பொது முடக்கநிலை மிகக் கடுமையானது என்று ஆக்ஸ்போர்ட் கூறுவது ஏன்?

பள்ளி வளாகங்கள் மற்றும் பணியிடங்களை முடக்குதல், பொது நிகழ்வுகள் மற்றும் பொது போக்குவரத்தை தடை செய்தல், சமூக விலகலுக்கான நெறிமுறைகள் வழங்குதல் போன்ற அரசின் கட்டுப்பாடு நடவடிக்கையை ஆராயும் வகையில் குறிகாட்டிகள் (இண்டிகேட்டர்ஸ்) அமைக்கப்பட்டன.

By: Updated: May 8, 2020, 07:13:21 PM

கொவிட்- 19 நோய் பரவலுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கையில் மேற்கொண்டு வந்த நிலையில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2015 இன் கீழ், இந்தியா 25 மார்ச் அன்று முதல், பொது முடக்கநிலையை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக நாடுகளின் முயற்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட குறியீடு (இன்டெக்ஸ்) ஒன்று அளவிட்டுள்ளது.

மார்ச் 22ம் தேதிக்குப் பின் கடுமையாக பொது முடக்கநிலையை அமல்படுத்திய நாடுகளில் இந்தியாவும் (100 மதிப்பெண்கள்) ஒன்று என ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஸ்ட்ரிஜென்சி குறியீடு (Stringency Index) கண்டறிந்துள்ளது.

இந்த குறியீடைப் பற்றி?

ஆக்ஸ்போர்டு கோவிட்-19 அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளின் பின்தொடர் (ட்ராக்கரை) (CORONAVIRUS GOVERNMENT RESPONSE TRACKER) மூலம் செய்யப்படும் அளவீடுகளில் ஒன்றாக இந்த குறியீடு உள்ளது. 100 ஆக்ஸ்போர்டு சமூக உறுப்பினர்கள் அடங்கிய குழுவால் இந்த ட்ராக்கர் நிர்வகிக்கப்படுகிறது. 17 குறிகாட்டிகள் கொண்ட தரவுத்தளத்தின் மூலம் உலக நாடுகளின் கோவிட்- 19 நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து புதுபிக்கப்படுகிறது .

பள்ளி வளாகங்கள் மற்றும் பணியிடங்களை முடக்குதல், பொது நிகழ்வுகள் மற்றும் பொது போக்குவரத்தை தடை செய்தல், சமூக விலகலுக்கான நெறிமுறைகள் வழங்குதல் போன்ற அரசின் கட்டுப்பாடு நடவடிக்கையை ஆராயும் வகையில் குறிகாட்டிகள் (இண்டிகேட்டர்ஸ்) அமைக்கப்பட்டன.  குறிகாட்டிகளை 0 முதல் 100 வரையிலான எண்ணிக்கை அளவுகோளில் பிரதிபலிப்பதே இந்த ஸ்ட்ரிஜென்சி குறியீடுன் நோக்கமாகும் . இந்த குறியீட்டில் ஒரு நாடு அதிக மதிப்பெண் பெற்றால், வலுவான ஊரடங்கை அமல்படுத்தியதாக கருதப்படும்.

குறியீடு நமக்கு என்ன சொல்கிறது?

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு ப்பகுதியாக உலக நாடுகள் எந்த கட்டத்தில் பொது முடக்கத்தை கடுமையாக அமல்படுத்தியது என்பதை இந்த குறியீடு துல்லியமாக விளக்குகிறது. ஒரு  நாட்டின் இறப்பு விகிதங்களுக்கு, பொது முடக்கத்திற்கும் உள்ள தொடர்பை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் . இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற சில நாடுகள் முடக்க நிலையை கடுமையாக அமல்படுத்திய கட்டத்தில், இறப்பு விகிதங்கள் குறைய ஆரம்பித்தது. சீனா வலுவான நடவடிக்கைகளை எடுத்தபோது, அதன் இறப்பு விகிதங்கள் கணிசமாக குறைந்தது.

 

இருப்பினும் இங்கிலாந்து, அமெரிக்கா,  இந்தியா போன்ற நாடுகளில், கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னரும் இறப்பு விகிதங்கள் குறைய வில்லை என்பதை  ஆக்ஸ்போர்டு குறிகாட்டிகள் கண்டறிந்துள்ளன.

இந்தியா மற்றவர்களுடன் எவ்வாறு ஒப்பிடுகிறது?

கொரோனா தொற்றில் மிகவும் பாதிப்படைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை ஒரு கணிசமான அளவை எட்டும் முன்பே இந்திய கடுமையான எல்லை பூட்டுதலை அறிவித்துள்ளது. மற்ற  18 நாடுகள் 500 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போது பொது முடக்கத்தை அறிவித்தன.  இந்தியா கொரோனா எண்ணிக்கை 320- க இருந்த போதே பொது முடக்கத்தை அறிவித்தது. மேலும், மார்ச் 22 அன்று இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை நான்கு  தான்.

ஆனால், ஸ்பெயின் கொரோனா பாதிப்பு மற்றும் மற்றும் இறப்பு விகிதத்தில் கணிசமான உயர்வைக் கண்ட பின்பு தான் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்த்தொற்றில் மிகவும் தாராளமய நடவடிக்கை பின்பற்றிய நாடுகள் பட்டியலில் ஸ்வீடன் முதல் இடத்திலும்,  ஈரான் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஹோண்டுராஸ், அர்ஜென்டினா, ஜோர்டான், லிபியா, இலங்கை, செர்பியா , ருவாண்டா போன்ற நாடுகள் இந்த குறியீட்டில் 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. 100 மதிப்பெண்கள் பெற்ற நாடுகள் பட்டியலில் தற்போது இந்தியா மட்டும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றை உறுதி செய்து வருகிறது.

பொதுமுடக்க நிலையில் தளர்வு கொண்டுவருவது பற்றி ?

பொது முடக்கநிலையை தளர்வு கொண்டுவருவதற்கான உலக சுகாதார அமைப்பின் ஆறு பரிந்துரைகளில் குறைந்தது நான்கு பரிந்துரைகளை உலக நாடுகள் பின்பற்றுகிறதா?  என்று நோக்கிலும் ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டன.

  1. தொற்று பரவலை சுகாதார அமைப்பு நிர்வகிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வருதல்  (தளர்வுகள் அறிவிக்கப்படும் நேரத்தில்  );
  2. பாதிப்படைந்த அனைவரையும்  கண்டறிந்து தனிமைப்படுத்தும் நிலையை அடைதல்   (தீவிரமானவை மட்டுமல்ல);
  3. ஆபத்து நிறைந்த மண்டலங்களை நிர்வகித்தல்;
  4. சமூக ஈடுபாடு.

போன்ற நான்கு பரிந்துரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தியா இதில் 0.7  (ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியாவுக்கு கீழே) மதிப்பெண்களை மட்டுமே பெற்றது.  ஐஸ்லாந்து, ஹாங்காங், குரோஷியா, டிரினிடாட் & டொபாகோ போன்ற நாடுகள் இதில் அதிக மதிப்பெண்களை (0.9) பெற்றிருந்தது.

இந்த நான்கு பரிந்துரைகளில் சொல்லிக் கொள்ளும்படி எந்த நாடுகளும் இல்லை என்று ஆக்ஸ்போர்டு கண்டறிந்தது. இருப்பினும், ஆனால் 20 நாடுகள் இந்த நான்கு பரிந்துரைகளை கிட்டத்தட்ட நிறைவேற்றியுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Stringency index has found that india indeed had one of the strongest lockdown measures in the world

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X