ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் குறைவு என ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

corona virus

ஜெர்மனியில் உள்ள Ruhr-Universität Bochum ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பிய மத்திய வங்கியின் நிபுணர்களுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் iscience இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் -19 உட்பட கொரோனா வைரஸ்கள் எவ்வளவு நேரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் இருக்கும் மற்றும் அதனை கையாளும் போது தொற்று பரவுமா என்பது போன்ற ஆய்வுகளை மேற்கொண்டனர். ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற PVC தகடுகள் உள்ளிட்டவை வைரஸ்களால் மாசுபடுத்தப்பட்டது. பின்னர் வைரஸ் எவ்வளவு காலம் அதில் உயிரோடு இருக்கும் என்பதை அறிய ஈரப்பதமாக அல்லது ஏற்கனவே உலர்ந்த நிலையில், அவற்றை கைரேகைகளால் தொடப்பட்டது. கொரோனா வைரஸ் மாசுபட்ட மாதிரிகள் செயற்கை தோல்களால் தொடப்பட்டன.

திரவம் காய்ந்தவுடன், வைரஸ் தொற்று பரவுவதில்லை என்பதை கண்டறிந்ததாக முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் டேனியல் டோட் கூறினார். யதார்த்தமான சூழ்நிலையில் பணம் மூலம் SARS-CoV-2 பரவுவது மிகவும் அரிது என்றார்.

சோதனைகள் யூரோ ரூபாய் நோட்டுகளில் நடத்தப்பட்டன, அவை தூய பருத்தி நார். கனடியன் ரூபாய் நோட்டுகள் பாலிமர் ஆல் ஆனது.

ஒரு துருப்பிடிக்காத எஃகு மேற்பரப்பு சோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஏழு நாட்களுக்குப் பிறகு, வைரஸ் தொற்று எஃகு மீது இருந்தது. ஆனால் € 10 நோட்டுகளில் வைரஸ் மறைவதற்கு மூன்று நாட்கள்தான் ஆனது. € 1, 10 சென்ட் மற்றும் ஐந்து சென்ட் நாணயங்களைப் பொறுத்தவரை, காணாமல் போக முறையே ஆறு நாட்கள், இரண்டு நாட்கள் மற்றும் ஒரு மணி நேரம் ஆனது.

ஐந்து சென்ட் துண்டு விரைவாக வைரஸ் மறைந்தது. ஏனெனில் அது தாமிரத்தால் ஆனது, அதில் வைரஸ்கள் குறைவாக நிலையானவை என்று அறியப்படுகிறது, “டோட் கூறினார்.

இந்த ஆய்வின் முடிவுகள் முந்தைய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று முதன்மையாக ஏரோசோல்கள் அல்லது நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. ஆய்வில் பயன்படுத்தப்படும் கோவிட் -19 மாதிரிகள் ஆல்பா மற்றும் wild-type வேரியண்டுகளை உள்ளடக்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Study shows risk of covid 19 transmission from cash particularly low

Next Story
ஓ.பி.சி. இட ஒதுக்கீடு :க்ரீமி லேயர் என்றால் என்ன?OBC reservation, creamy layer
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com