கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்கள் முதல் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி டோஸுக்குப் பிறகு ஒரு வலுவான நோய் எதிர்ப்புத் திறனை கொண்டுள்ளனர். ஆனால் இரண்டாவது டோஸுக்குப் பிறகு, நோய் எதிர்ப்புத் திறனில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக, பென் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜியின் சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.
நோய் எதிர்ப்புக்கு தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க ஒரே ஒரு தடுப்பூசி டோஸ் மட்டுமே போதுமானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளாகாதவர்களுக்கு, இரண்டாவது டோஸ் தடுப்பூசி அளவைப் பெறும் வரை முழு நோயெதிர்ப்புக்கான சூழல் உடலில் உருவாகவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு, பரிந்துரைக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
கடத்து ஆர்.என்.ஏ. எனப்படும் mRNA தடுப்பூசிகளின் அடிப்படை நோயெதிர்ப்பு உயிரியல் பற்றிய கூடுதல் நுண்ணறிவை இந்த ஆய்வானது விவரித்துள்ளது. இது எதிர்கால தடுப்பூசி உத்திகளை மேம்படுத்த உதவியாக இருக்கும். இந்த முடிவுகள் குறுகிய மற்றும் நீண்டகால தடுப்பூசி செயல்திறன் குறித்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த ஆய்வானது, நினைவக செல்கலை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிய புரிதலை அதிகரிக்கிறது என பென் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜி, பென்சில்வேனியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய்களுக்கான மனித நோயெதிர்ப்பு திறன் இரண்டு முக்கிய விளைவுகளை விளைவிக்கிறது . அவை, விரைவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆன்டிபாடிகளின் உற்பத்தி மற்றும் நீண்டகால நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் மெமரி பி செல்களை உருவாக்குதல் ஆகியவை ஆகும். கொரோனா தொற்று ஏற்படாதவர்கள், தொற்றுக்கு உள்ளானவர்களோடு ஒப்பிடும்போது, முன்னர் தொற்றுநோயை அனுபவித்தவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, நினைவக செல்களை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்த ஆய்வு ஆய்வு செய்தது.
கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட நபர்கள் குறித்த முந்தைய கோவிட் -19 எம்ஆர்என்ஏ தடுப்பூசி குறித்த ஆய்வுகள், நினைவக செல்களை விட ஆன்டிபாடிகளில் கவனம் செலுத்தியுள்ளன. நினைவக பி செல்கள் எதிர்கால ஆன்டிபாடிகளுக்கான வலுவான ஆதாரம் ஆகும். பி வகை நினைவக செல்களை ஆராய்வதற்கான இந்த முயற்சி நீண்டகால பாதுகாப்பையும், மாறுபாடுகளுக்கு பதிலளிக்கும் திறனையும் புரிந்து கொள்ள முக்கியமானது என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil