Explained: நாடு முழுவதும் மொத்தமாக மின் விளக்குகளை அணைப்பது ஆபத்தா?

பிரதமரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வைகையில், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மின் தொகுப்பு மேலாளர்கள், அந்தந்த மாநிலங்களுடைய மின்சார தொகுப்பு மையங்கள் எதிர்கொள்ளவுள்ள...

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது, ஏப்ரல் 5-ம் தேதி நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் 9 மணிக்கு விளக்குகளை அணைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வைகையில், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் மின் தொகுப்பு மேலாளர்கள், அந்தந்த மாநிலங்களுடைய மின்சார தொகுப்பு மையங்கள் எதிர்கொள்ளவுள்ள அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், நாட்டில், அனைத்து மின் விளக்குகளும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 9 மணிக்கு அணைக்கப்பட்டு திருப்ப ஒளிரவிடப்படும் என்ற அனுமானத்துடன் ஒரு மோசமான சூழ்நிலைக்கு தாயராகி வருகின்றனர். (மருத்துவமனை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான இடங்களிலும் தெருவிளக்குகளும் அணைக்கக்கூடாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.)

நாளை இரவு 9 மணி 9 நிமிடங்கள் விளக்குகள் அணைக்கப்படுவதால் மின் விநியோக செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கும்?

உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட மின்தொகுப்பு செய்யப்பட்ட நாடுகளில் ஒன்று இந்தியா. சுமார் 370 ஜிகா வாட் (3,70,000 மெகா வாட்) திறன் கொண்ட இந்தியாவில் அடிப்படை மின்சார தேவை சுமார் 150 ஜிகா வாட் ஆகும்.

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), நாட்டின் தினசரி மின்சார தேவையை திட்டமிடுகிறது. இந்த திட்டங்களின் அடிப்படையில் மின் ஜெனரேட்டர்களிடமிருந்து மின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துகிறது.

மின்சார அதிர்வெண் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சார உற்பத்தி சமநிலையை பிரதிபலிக்கிறது. இது நாட்டின் மின்சார அமைப்பின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான மிக முக்கியமான அளவுருக்களில் ஒன்றாகும். பெயரளவு அதிர்வெண்ணாக 50 ஹெர்ட்ஸ் என்று அனுமதிக்கப்பட்ட அலைவரிசையில் (49.9- 50.5 ஹெர்ட்ஸ்) அதிர்வெண்ணைப் பராமரிக்க POSOCO மின் தேவை-வழங்கல் சமன்பாட்டை சமநிலைப்படுத்துவதன் மூலம் முயற்சிக்கிறது.

வீடுகளில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் ஒரு குறிப்பிட்ட மின்தொகுப்பில் பாதுகாப்பாகவும் திறனுடனும் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதன் அதிர்வெண் ஒரு வரம்பிற்குள் பராமரிக்கப்பட வேண்டும். அந்த அதிர்வெண் அதிகரிப்பு மின்னழுத்தத்தின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. அதே போல, அதிர்வெண் குறைவதால் மின்னழுத்தம் குறைகிறது.

ஓரு மின் நிலையத்தில் அவசர நிலை ஏற்படும்போது அல்லது டிரான்ஸ்மிஷன் கோட்டில் மின்சாரம் தானாக நின்றாலோ அல்லது மின்சார தேவையில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலோ ஆப்பரேட்டர் தானியங்கி சீராக்கும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தோல்வியடைந்தால், ஒரு குறுகிய காலத்திற்குள் மின் தேவையைக் குறைப்பதன் மூலமாகவோ அல்லது மற்றொரு மூலத்திலிருந்து மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாகவோ ஒரு நெருக்கடியைத் தவிர்க்க தானியங்கி இல்லாமல் செயற்கையாக கையாள வேண்டும்.

இந்த மின் அழுத்த ஏற்றத்தாழ்வுகளைக் கையாளுதல் மிந்தொகுப்பு ஆபரேட்டரின் மிக முக்கியமான பணி ஆகும்.

பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள 9 நிமிட விளக்கு அணைப்பு நடைமுறை சிக்கலானது ஏன்?

இதில் பெரிய கவலை என்னவென்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வீடுகளில் விளக்குகள் அனைப்பதால் நாளை இரவு 9 மணிக்கு மின் சுமை குறைப்பு ஏற்படக்கூடும். இதையடுத்து, மீண்டும் விளக்குகள் ஏற்றப்பட்டால் 9.09 மணிக்கு திடிரென மின்சுமை அதிகரிக்கும். இதில் பிரச்னை என்னவென்றால், மின் தொகுப்பு அதிர்வெண் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அப்பால் மாறக்கூடாது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜெனரேட்டர்களும் மின் தொகுப்பு குறியீட்டின் படி அதிர்வெண் இருக்க வேண்டும்.

இந்த 9 நிமிடம் விளக்குகளை அணைக்கும்போது சுமார் 10,000-15,000 மெகாவாட் வரை மின் தேவை திடீரென கைவிடப்படும். பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த மின் தேவை ஏற்படும்.

இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டுக்கான மின் சுமை சாதாரண காலங்களில் மொத்த மின் சுமைகளில் 30-32 சதவீதம் ஆகும்.

இந்தியாவின் மொத்த மின்சார தேவையின் மின்சுமையில் தொழில்துறை நுகர்வு மின்சுமை 40%, விவசாயத்திற்கான மின் நுகர்வு மின்சுமை 20% ஆகும். அதே நேரத்தில் வணிக மின்சாரம் நுகர்வு தேவை 8% ஆகும்.

அதனால், கருத்தளவில் வீடுகளுக்கான விளக்குகள் தேவை மின் சுமை அணைக்கப்பட்டால் அது சாதாரண நேரங்களில் மின் தொகுப்பு அதிர்வெண்ணில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது.

இதன் காரணமாக மின்தொகுப்பு துண்டிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்றாலும், ஆபரேட்டர்கள் ஒரு அச்சத்தை எதிர்பார்க்கிறார்கள்.

இந்த அமைப்பு பொதுவாக மிகப்பெரிய ஒற்றை அலகு செயலிழப்புக்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், இரண்டு ரைடர்ஸ் உள்ளன.

ஒன்று, மின் தொகுப்பு சுமை முதன்மையாக இப்போது வீட்டுப் பயன்பாடுகளுக்கான சுமை காரணமாக உள்ளது. குறிப்பாக மார்ச் 26 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 150 ஜிகாவாட்ஸ் சாதாரண பேஸ்லோட் மின் தேவையாக உள்ளது.

ஊரடங்கு உத்தரவு அறிவிப்பில் இருந்து, ஏற்கெனவே, தொழில்துறை, வணிக நிறுவனங்களின் மின் தேவை 20% குறைந்துள்ளதால் செயல்படவில்லை.

ஹோட்டல், தொழிற்சாலைகள், மால்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், இப்போது வீடுகளுக்கான மின் தேவை சுமைதான் முக்கிய மின் சுமையாக உள்ளது. அதனால், மொத்த மின் சுமைகளின் சதவீதமாக வீடுகளில் விளக்குகளின் மின் சுமையே இப்போது அதிகமாக உள்ளது. திடீரென விளக்குகள் மின் சுமை வீழ்ச்சியடைவதன் தாக்கம் வழக்கமான நேரங்களை விட அதிகமாக இருக்கும்.

இந்த விவகாரத்தில் இரண்டாவது கவலை என்னவென்றால், வீடுகளில் மக்கள் மொத்தமாக மின்சாரத்தை அணைத்துவிட்டால், அல்லது அதிகப்படியான டிஸ்கம்கள் தெரு விளக்குகளை அணைத்துவிட்டால், அடுத்து ஆண்டின் இந்த பகுதியில், வீடுகளுக்கான மின் சுமை இரவு 9 மணியளவில் உச்சம் பெறுகிறது.

இந்த சுமை பின்னர் சாதாரண போக்கில் எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாக பாதிக்கப்படலாம், என்று மின் தொகுப்பு ஆபரேட்டர்கள் கவலையை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இருப்பினும், வடக்கு பிராந்தியத்தில் ஏர் கண்டிஷன் மின் சுமை ஒரு எதிர் சமநிலையாக செயல்படும் என்று நம்பிக்கை உள்ளது. மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில், ஏர் கண்டிஷன் மின் சுமை ஏற்கனவே உள்ளது. விளக்குகளை அணைப்பது மின் தொகுப்பில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிசெய்யும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close