மகாராஷ்டிராவில் மாட்டுவண்டி பந்தயம்… உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது ஏன்?

சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரிய விளையாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

மகாராஷ்ராவில் மீண்டும் மாட்டு வண்டிபந்தயம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டு, புனே மற்றும் மேற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் கோலாகலமாக நடைபெறும்.

மாட்டு வண்டிபந்தயம் உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகள் மற்றும் மாநிலத்தில் மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் உத்தரவுகள் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்படுவதால், மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரே நாடு, ஒரே இனம், நாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் சமமான விதிகள் இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பந்தயங்கள் நடைபெறும் போது, அதை ஏன் மகாராஷ்டிராவில் அனுமதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியது.

மாட்டு வண்டி பந்தயத்திற்கு தடை விதித்தது ஏன்?

2014 ஆம் ஆண்டு மத்திய சட்டத்தின் விதிகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் மாட்டு வண்டி பந்தயம் தடை செய்யப்பட்டது. பின்னர், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் மாட்டு பந்தயந்துக்கு அனுமதிக்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, ஏப்ரல் 2017 இல், மகாராஷ்டிரா சட்டப்பேரவை மாட்டு வண்டி பந்தயங்களை மீண்டும் தொடங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது.

‘விலங்குகள் வதை தடுப்பு (மகாராஷ்டிர சட்டத் திருத்தம்) மசோதா’ என்ற தலைப்பில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

புதிய சட்டத்திருத்ததின்படி, காளை மாடுகளுக்கு வலியோ துன்பமோ ஏற்படாமல் பாதுகாத்து, மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று பந்தயம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆகஸ்ட் 2017 இல், மும்பை உயர்நீதிமன்றம் மகாராஷ்டிர அரசின் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பாக அரசு தரப்பில் விளக்கமளித்தும், இடைக்கால தடையை நீக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. காளைகள் பந்தயங்களில் பங்கேற்க உடற்கூறியல் ரீதியாக வடிவமைக்கப்படவில்லை. அதனை அப்படி யன்படுத்தினால் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா அரசு ஏன் உச்ச நீதிமன்றம் சென்றது?

நவம்பர் 2017 இல், மகாராஷ்டிரா அரசு காளைகளின் திறனை கண்டறிய குழு ஒன்றை அமைத்தது. பந்தயங்களில் காளைகள் பங்கேற்கையில் அதற்கு உடலியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது, குழுவின் அறிக்கை அப்போதைய பாஜக-சேனா அரசுக்கு சாதகமாக வந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டது.

மாட்டு பந்தயத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதியை, அரசியல் கட்சியினர், பந்தய வீரர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Supreme court allows bullock cart races in maharashtra here is why

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com