Supreme court on Covid 19 Vaccine pricing Tamil News : கடந்த செவ்வாயன்று தொற்றுநோய் பற்றிய பிரச்சினைகள் தொடர்பான விசாரணையின் போது, தடுப்பூசிகளுக்கான மாறுபட்ட விலையை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இந்த விலைக்கான அடிப்படை மற்றும் பகுத்தறிவை அதன் பிரமாணப் பத்திரத்தில் தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
பெஞ்சில் உள்ள மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ரவீந்திர பட், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணச் சட்டமன்ற நடவடிக்கைகளை ஆராயுமாறு அழைப்பு விடுத்தார்.
“மருந்துகள் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் காப்புரிமை சட்டத்தின் கீழ் அதிகாரங்கள் உள்ளன. இது ஒரு தொற்றுநோய் மற்றும் தேசிய நெருக்கடி. இதுபோன்ற அதிகாரங்களை செயல்படுத்த இது நேரம் இல்லையென்றால், பிறகு அதற்கான நேரம் என்ன?” என்று நீதிபதி பட் வினவினார். “வெவ்வேறு உற்பத்தியாளர்கள் வெவ்வேறு விலைகளை மேற்கோள் காட்டுகிறார்கள்” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மருந்துகளின் விலையை அரசாங்கம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
இந்த அணுகலை உறுதி செய்வதற்காக, அத்தியாவசிய மருந்துகளின் விலை 1955-ம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன் கீழ், அரசாங்கம் மருந்துகள் (விலைகள் கட்டுப்பாடு) உத்தரவை இயற்றியுள்ளது. DPCO அதன் அட்டவணையில் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளை “அத்தியாவசியமானது” என்று பட்டியலிடுகிறது. மேலும், அவற்றின் விலையையும் உயர்த்தியுள்ளது.
1997-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority), ஒவ்வொரு வழக்கிலும் வடிவமைக்கப்பட்ட ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்கிறது.
கோவிட் -19 தடுப்பூசிகளின் விலையை டிபிசிஓ மூலம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியுமா?
காப்புரிமை பெற்ற மருந்துகள் அல்லது நிலையான டோஸ் சேர்க்கை (எஃப்.டி.சி) மருந்துகளுக்கு டி.பி.சி.ஓ-ன் கட்டுப்பாடு பொருந்தாது.
இதனால்தான் தற்போது கோவிட் -19-ன் தீவிர வழக்குகளுக்கு சிகிச்சையளிக்க அதிக தேவை உள்ள ஆன்டிவைரல் மருந்து ரெம்டெசிவரின் விலை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த வாரம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் அறிவிப்பில், அரசாங்கத்தின் தலையீட்டின் பேரில், ரெம்டெசிவிர் ஊசியின் முக்கிய உற்பத்தியாளர்கள் / சந்தைப்படுத்துபவர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) தானாக முன்வந்து குறைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
உலகளவில், அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் கிலியட் சயின்சஸ் இந்த மருந்துக்கான காப்புரிமையை வைத்திருக்கிறது. பல மருந்து நிறுவனங்கள் கிலியடில் இருந்து ரெம்டிசிவிர் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளன.
ரெம்டெசிவிர் போன்று கோவிட் -19 சிகிச்சையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் அல்லது மருந்துகளை டி.பி.சி.ஓ கொள்கையின் கீழ் கொண்டுவந்தால், ஒரு திருத்தத்தைக் கொண்டு வர முடியும்.
தடுப்பூசிகளுக்கான மாறுபட்ட விலையை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு என்ன சட்ட வழிகள் உள்ளன?
தி பேடென்ட்ஸ் ஆக்ட், 1970: உச்சநீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட இந்தச் சட்டத்தில் இரண்டு முக்கிய விதிகள் உள்ளன. அவை தடுப்பூசியின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கு சாத்தியமானவை.
*காப்புரிமைச் சட்டத்தின் 100-வது பிரிவு, “அரசாங்கத்தின் நோக்கங்களுக்காக” ஓர் கண்டுபிடிப்பைப் பயன்படுத்த யாரையும் (ஒரு மருந்து நிறுவனம்) அங்கீகரிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும் சமமான விலையை உறுதி செய்வதற்கும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்குத் தடுப்பூசியின் காப்புரிமை உரிமம் வழங்க இந்த விதிமுறை அரசாங்கத்திற்கு உதவுகிறது.
* கட்டாய உரிமம் வழங்குவதைக் கையாளும் சட்டத்தின் பிரிவு 92-ன் கீழ், காப்புரிமைதாரரின் அனுமதியின்றி, சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட சூழ்நிலைகளில் காப்புரிமை உரிமம் பெற அரசாங்கத்தால் முடியும்.
“மத்திய அரசு திருப்தி அடைந்தால், தேசிய அவசரகால சூழ்நிலைகளில் அல்லது தீவிர அவசர சூழ்நிலைகளில் அல்லது பொது வர்த்தக சாராத பயன்பாட்டின் போது எந்தவொரு காப்புரிமையையும் பொறுத்தவரை, கட்டாய உரிமங்கள் எந்த நேரத்திலும் வழங்கப்பட வேண்டியது அவசியம். கண்டுபிடிப்பிற்கு அதன் முத்திரையிடலை, அதிகாரப்பூர்வ கெஸெட்டில் (Gazette) அறிவிப்பதன் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிடக்கூடும், அதன்பிறகு பின்வரும் விதிகள் பலனளிக்கும்…” என்று அந்த விதி கூறுகிறது.
பிரிவு 92-ன் கீழ் அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிறகு, மருந்து நிறுவனங்கள் ரிவர்ஸ் பொறியியல் மூலம் உற்பத்தியைத் தொடங்க உரிமம் பெற அரசாங்கத்தை அணுகலாம்.
இருப்பினும், கோவிட் -19 போன்ற உயிரியல் தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, பொருட்கள் மற்றும் செயல்முறைகள் நன்கு அறியப்பட்டிருந்தாலும், இந்த செயல்முறையைப் புதிதாக நகலெடுப்பது கடினம். இந்த செயல்முறை பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிறுவ புதிய மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளும்.
கோவிட் -19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கும், உலகளாவிய அணுகலை அதிகரிப்பதற்காக உற்பத்தியை அதிகரிப்பதற்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் (எல்.எம்.ஐ.சி) திறனை விரிவுபடுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதி, எல்.எம்.ஐ.சி-களில் இருக்கும் அல்லது புதிய உற்பத்தியாளர்களுக்கு கோவிட் -19 எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை உருவாக்கி உற்பத்தி செய்ய ஏதுவாக “தொழில்நுட்ப பரிமாற்றம்” மற்றும் “பொருத்தமான பதிலை” செயல்படுத்தும் வெளிப்பாடுகளை அது குறிப்பிட்டது.
எபிடெமிக் நோய்கள் சட்டம், 1897: தடுப்பூசிகளின் விலையைக் கட்டுப்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைத்த மற்றொரு சட்ட வழி எபிடெமிக் நோய்கள் சட்டம். தொற்றுநோயைக் கையாள்வதில் இது அரசாங்கத்திற்கு முக்கிய சட்ட ஆயுதமாக இருந்து வருகிறது.
இந்தச் சட்டத்தின், பிரிவு 2 அரசாங்கத்திற்கு “சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், ஆபத்தான தொற்றுநோய்க்கான விதிமுறைகளைப் பரிந்துரைக்கவும்” அதிகாரம் அளிக்கிறது.
இந்த விதி என்ன கூறுகிறது: “எந்த நேரத்திலும் மாநிலமோ அல்லது அதன் எந்தப் பகுதியோ எந்தவொரு ஆபத்தான தொற்றுநோயான பரவல், மாநில அரசாங்கத்தால் பார்வையிடப்படுவதாக அல்லது அச்சுறுத்தப்படுவதாக அரசு கண்டறிந்தால், நடைமுறையில் இருக்கும் சட்டம் சாதாரண விதிகள் என்று நினைத்தால், அத்தகைய நடவடிக்கைகள் மற்றும் பொது அறிவிப்பின் மூலம், பொதுமக்கள் அல்லது எந்தவொரு நபரும் அல்லது வர்க்கத்தினரும் கடைப்பிடிக்க வேண்டிய தற்காலிக விதிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர்”
இந்த பரந்த, வரையறுக்கப்படாத அதிகாரங்கள், விலையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், அத்தகைய முக்கியமான கொள்கை கட்டமைப்பைச் செயல்படுத்த சட்டத்தில் இடமில்லை.
சட்டத்தின் மீறல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-வது பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது. இது, “(அ) பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது” பற்றியது. இந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் தண்டனை ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1,000 வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதம்.
இந்த சட்டமன்ற விருப்பங்களைத் தவிர, உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக மத்திய அரசு கொள்முதல் செய்வது சமமான விலையை உறுதி செய்வதற்கு மிகவும் பயனுள்ள பாதையாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil