இன்டர்நெட் ஷட்டவுனை அனுமதிக்கும் அனைத்து உத்தரவுகளையும் கட்டாயமாக வெளியிடுமாறு அரசாங்கத்திற்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதன்மூலம், முதன்முறையாக இன்டர்நெட் ஷட்டவுனை நீதிமன்றங்களுக்கு முன் சவால் செய்ய களம் அமைத்துள்ளது இந்த தீர்ப்பு.
1885 தேசிய தந்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட தொலைதொடர்பு சேவைகளின் தற்காலிக இடைநீக்கம் (பொது அவசரநிலை அல்லது பொது சேவை) விதிகள், 2017ன் கீழ் இன்டர்நெட் ஷட்டவுன் தொடர்பான உத்தரவுகளை வெளியிட அரசாங்கத்தை நிர்பந்திக்கவில்லை. இருப்பினும், உச்சநீதிமன்றம் இன்டர்நெட் ஷட்டவுன் தொடர்பான உத்தரவுகளை பொதுமக்களுக்கு கிடைப்பது கட்டாயம் என்று கூறியுள்ளது.
குறிப்பாக மக்கள், சுதந்திரம், வாழ்வுரிமையை பாதிக்கும் உத்தரவுகளை வெளியிடுவது சட்ட நெறிமுறை மற்றும் இயற்கை நீதி என்றும் கூறியுள்ளது.
"மக்களை இணங்கக் கோரும் எந்தவொரு சட்டமும் நேரடியாகவும் நம்பகத்தன்மையுடனும் மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்," என்றும தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
இந்த தீர்ப்பு மூலம், இந்தியாவில் ஒருவர் ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் அமலில் இருக்கும் நீதிமன்றங்களில் உள்ள உத்தரவுகளை சவால் செய்ய அனுமதிக்கிறது.
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அடுத்து, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இன்டர்நெட் ஷட்டவுன் போன்ற தடை உத்தரவுகள் எப்போதுமே நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை என்றாலும்,பொது மக்களுக்கு இத்தகைய உத்தரவுகள் வெளியிடப்படாமல் இருப்பதால், நீதிமன்றங்களுக்கு முன் இதனை சவால் செய்ய முடியாமல் இருந்து வந்தது. இந்த தீர்ப்பின் மூலம், இந்தியாவில் ஒருவர் ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற நீதிமன்றங்களில் இன்டர்நெட் ஷட்டவுனை செய்யும் அரசு உத்தரவுகளை மறுஆய்வு செய்யலாம்.
கடந்த ஆண்டு டிசம்பரில், இன்டர்நெட் ஷட்டவுன் உத்தரவுகளை மறுஆய்வு செய்த கவுகாத்தி உயர்நீதிமன்றம், இணையத்தை அசாம் மக்களுக்கு கிடைக்க செய்யுமாறு அசாம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
உலகளவில் இன்டர்நெட் ஷட்டவுன் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, 2012 முதல் இந்தியாவில் 381 முறை இன்டர்நெட் ஷட்டவுன் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் 106 முறை 2019ல் மட்டும் நடந்திருக்கின்றன. காஷ்மீரில் நடந்து வரும் மிக நீண்ட காலமாகும் அமலில் இருக்கும் இன்டர்நெட் ஷட்டவுன் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இல்லாத ஒன்றாகும்.
தற்போதைய விதிகளில் உள்ள ‘குறைபாடுகளையும் ’ உச்சநீதிமன்றம் எடுத்துரைத்தது. மனுதாரர்களுக்கு ஆதரவாக, தகவல் தொலை தொடர்பு இடைநீக்கத்திற்கான காரணம் 'அவசியமானதாகவும்' 'தவிர்க்க முடியாததாகவும்' இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
சில சமூக ஊடக சேவைகளை மட்டுமே தடுப்பது சாத்தியமில்லை, அதனால் ஒட்டுமொத்த இன்டர்நெட்டை ஷட்டவுன் செய்ய அரசு நிர்பந்திக்கபடுகிறது என்று சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்ட்டார். அதற்கு உச்ச நீதிமன்றம்,"அத்தகைய நடவடிக்கையின் (குறிப்பிட்ட சமூக ஊடகத்தை மற்றும் நிறுத்துவது) சாத்தியத்தை தீர்மானிக்க அரசு முயற்சித்திருக்க வேண்டும்" என்றது. உங்களின்(சொலிசிட்டர் ஜெனரல்) கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஒவ்வொரு முறையும் ஒரு முழுமையான இன்டர்நெட் ஷட்டவுன் ஏற்படுத்த அரசாங்கத்திற்கு இலவச பாஸ் கொடுத்தார் போலாகிவிடும். இது போன்ற முழுமையான நிரந்தரமான இன்டர்நெட் தடையை இந்த நீதிமன்றம ஏற்றுக்கொள்ளாது” என்றார்.
பொது மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கு அதிக சுமை விதிக்கக் கூடாது, அத்தகைய தடையை விதிப்பதை அரசாங்கம் நியாயப்படுத்த வேண்டும், மேலும் மாற்று வழிகள் ஏன் போதுமானதாக இருக்காது என்பதை விளக்க வேண்டும் என்று பெஞ்ச் தனது தீர்ப்பில் அறிவுருத்தியுள்ளது.
கடைசியாக, காஷ்மீர் வழக்கு தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் வெளியிட வேண்டும் என்றும், இ-வங்கி மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
இந்த உத்தரவுகள் ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டவுடன், இந்த உத்தரவுகள் அனத்தும் நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்" என்று மனுதாரர் க்ரோவர் கூறினார்.
இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயமாகும், காஷ்மீரில் நீண்ட கால பயங்கரவாத வரலாற்றையும் நாம் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும் . எனவே, என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதை அரசு, ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் விட்டு விடுங்கள். நீதிமன்றம் இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யக்கூடாது என்பது இந்த வழக்கில் அரசின் வாதங்களாக இருந்தது.
அரசின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், அரசின் நிர்வாக உத்தரவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்யும் என்று தெளிவாக கூறியது.
"இதன் தாக்கங்கள், என் மனதில், விவாதத்திற்கு அப்பாற்பட்டவை என்று மனுதாரர் பிருந்தா குரோவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் இருக்கும்போதெல்லாம், இணையத்தை தடுப்பதும , பிரிவு 144 தடை உத்தரவை அமல்படுத்துவதும் இயல்பாக மாறிவிட்டது என்பதை நாங்கள் காண்கிறோம். தற்போது, இதுபோன்ற செயல்களை தன்னிச்சையாக செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இண்டர்நெட் ஷட்டவுன் செய்யும்போது, ஆபத்தை குறித்த பயம் மட்டுமல்ல, அதற்கான அவசியமும் இருக்க வேண்டும் என்றும கூறினார்.
இன்டர்நெட் அனுகுவதும் ஒருவரின் அடிப்படை சுதந்திரம், அதற்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்குகிறது என்ற உச்சநீதிமன்ற கருத்து குறித்து கூறிய க்ரோவர், இது புதிய முக்கியமான வெளிப்பாடு என்றும் அனைத்து வகையான கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அங்கிகாரம் என்றும் கூறினார்.
சட்டம் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டும், அதன்படி சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் விதிகளை வடிவமைக்க வேண்டும். சட்ட எல்லைக்குள் தொழில்நுட்பத்தை அங்கீகரிக்க முடியாமல் போனால் எளியவர்களுக்கு ஒரு பாதிப்பாக அமையும் என்று உச்சநீதிமன்ற வாதத்தையும் க்ரோவர் முன்வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.