Advertisment

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ‘அரசியலமைப்புக்கு எதிரானது’; ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படை என்ன?

தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நன்கொடையாளர் தனியுரிமை முதல் தகவல் அறியும் உரிமையின் நோக்கம் வரையிலான பிரச்னைகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
SC five judges

உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. Picture Source: (YouTube screengrab)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நன்கொடையாளர் தனியுரிமை முதல் தகவல் அறியும் உரிமையின் நோக்கம் வரையிலான பிரச்னைகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: SC strikes down electoral bonds scheme as ‘unconstitutional’: What grounds did the verdict rely upon?

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வியாழக்கிழமை (பிப்ரவரி 15) தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து தீர்ப்பு அளித்தது. இந்த ஒருமித்த தீர்ப்பில் சுட்டிக்காட்டிய இருவரின் கருத்துக்களில் இது  ‘அரசியலமைப்புக்கு எதிரானது’ என்று கூறினர்.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. இது என்ன திட்டம் என்ன, யார் அதை எதிர்த்தார்கள் மற்றும் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் என்ன பிரச்சினைகளை எழுப்பியது? என்பதை நாங்கள் இங்கே விளக்குகிறோம்.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் திட்டமானது, பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்குவதன் மூலம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அநாமதேயமாக அரசியல் கட்சிகளுக்கு பணத்தை நன்கொடையாக வழங்க அனுமதிக்கிறது. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை எஸ்.பி.ஐ மட்டுமே அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின்படி, வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் பணமாக்கப்படாத எந்த தேர்தல் பத்திரங்களிலிருந்தும் கிடைக்கும் வருமானம், பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.

2017-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் உரையில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதை முதலில் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகளின் நிதியுதவியில் ஒளிவுமறைவு பிரச்சினைக்கு தீர்வாக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது. “அரசியல் கட்சிகள் தங்கள் நிதியில் பெரும்பகுதியை பணமாக காட்டப்படும் அநாமதேய நன்கொடைகள் மூலம் தொடர்ந்து பெறுகின்றன. எனவே, இந்தியாவில் அரசியல் நிதியளிப்பு முறையைத் தூய்மைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அருண் ஜேட்லி கூறினார்.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ஏன் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது? 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் என்.ஜி.ஓ-க்கள் காமன் காஸ் மற்றும் ஏ.டி.ஆர் ஆகியவற்றால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காமன் காஸ் மற்றும் ஏ.டி.ஆர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், குடிமக்களுக்கு வாக்களிக்க விரும்பும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பெற உரிமை உண்டு என்று வாதிட்டார். இந்தியாவில் சுமார் 23 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதாக பிரசாந்த் பூஷன் சுட்டிக்காட்டினார். இந்த முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளன என்பதைக் கண்டறிவது ஒரு சாதாரண குடிமகனுக்கு சாத்தியமில்லை என்று பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.

பெயர் தெரியாத உத்தரவாதம், உரிமங்கள், குத்தகைகள், கொள்கை மாற்றங்கள் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்கள் போன்ற வடிவங்களில் சலுகைகளை வழங்க அரசாங்கத்தை அனுமதிக்கும் என்பதால், இந்த திட்டம் அக்கால ஆளும் அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கும் என்று பிரசாந்த் பூஷன் மேலும் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்தத் திட்டம் எப்படி நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறிவிடக்கூடும் என்று கூறி நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். பங்குதாரர்களிடமிருந்து எந்த மேற்பார்வையும் இல்லாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கச் செய்ய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், அரசியல் துறையில் தங்கள் நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் திறனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மறுக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் என்ன கூறியுள்ளது?

நீதிமன்றம் பல பிரச்சினைகளை எழுப்பியுள்ளது:

*பிரச்னை 1: தேர்தல் பத்திரத் திட்டம், பிரிவு 19(1)(a)-ன் கீழ் தகவல் அறியும் உரிமையை மீறுகிறதா?

அரசியல் கட்சிகளின் நிதி குறித்த தகவல்கள் வாக்களிப்பதற்கு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பணத்திற்கும் அரசியலுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பு காரணமாக பொருளாதார சமத்துவமின்மை அரசியல் சமத்துவமின்மைக்கு பங்களிக்கிறது. பணம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அணுகலை மேம்படுத்துகிறது மற்றும் இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளுதல் அல்லது பரஸ்பர நன்மை பயக்கும் ஏற்பாடுகள் போன்ற சாதகமான கொள்கை மாற்றங்கள் போன்ற சட்டபூர்வமான சாத்தியத்தை எழுப்புகிறது.

எனவே, இந்த திட்டமானது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவு 19(1)(a)-ன் கீழ் தகவல் பெறும் உரிமையை மீறுகிறது.

*பிரச்னை 2: தேர்தல் நிதியில் கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுப்பது, தகவல் அறியும் உரிமையை (ஆர்.டி.ஐ) கட்டுப்படுத்துவதற்கான சட்டப்படி நியாயமான காரணமா?

ஆர்.டி.ஐ 19(2)-ன் அடிப்படையில் மட்டுமே பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான நியாயமான கட்டுப்பாடுகளைப் பற்றி பேசுகிறது என்று நீதிமன்றம் கூறியது. கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு கட்டுப்பாடாக இதில் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. கறுப்புப் பணத்தைத் தடுப்பது ஒரு நியாயமான நோக்கமாக இருந்தாலும், இந்தத் திட்டத்தால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு அது ஒப்பீடாக இருக்காது. 

மேலும், தேர்தல் நிதியில் கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கான ஒரே வழி இந்தத் திட்டம் அல்ல. மற்ற வாய்ப்புகள் குறைவான கட்டுப்பாடுகள் மற்றும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும்.

இந்த திட்டம் சட்டபூர்வமானதாகக் கருதப்படுவதற்கு, அரசாங்கத் திட்டம் அடிப்படையில் 3  அம்சங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது நீதிமன்றத்தின் சமமான தேர்வின் அடிப்படையில் அமைந்தது, தனியுரிமைக்கான உரிமை தொடர்பான கே.எஸ். புட்டாசாமி வழக்கில் 2017-ல் அதன் தீர்ப்பில் கொடுக்கப்பட்டது.

முதலில், ஒரு சட்டத்தின் இருப்பு. வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தொடர் திருத்தங்களை அறிமுகப்படுத்திய நிதிச் சட்டத்தின் மூலம் தேர்தல் பத்திர வழிகாட்டி கொண்டுவரப்பட்டது.

இரண்டாவதாக, இந்த சட்டம் சட்டப்பூர்வமாக அரசின் நலனை நிரூபிக்க வேண்டும், இது நாடாளுமன்றத்தால் அடைய விரும்பும் நோக்கங்களுடன் தொடர்பைக் கொண்டுள்ளது. கறுப்புப் பணத்தைத் தடுப்பது முதல் நன்கொடையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது வரை நோக்கங்கள் உள்ளது என்று அரசாங்கம் வாதிட்டது.

மூன்றாவது மற்றும் மிக முக்கியமானது, அடிப்படை உரிமைகள் மீதான அத்துமீறல் அடையப்பட விரும்பும் ஆட்சேபனைக்கு விகிதாசாரமாக உள்ளதா என்பதுதான். இங்கு, குறைந்தபட்ச கட்டுப்பாடு முறையை அரசு பின்பற்றவில்லை என்று தலைமை நீதிபதி கூறினார். குறைந்த கட்டுப்பாடு முறைகளுக்கு உதாரணமாக, அநாமதேய நன்கொடைகளுக்கான ரூ. 20,000 வரம்பை அவர் மேற்கோள் காட்டினார்.

எனவே, தேர்தல் நிதியில் கறுப்புப் பணத்தைத் தடுக்க தகவல் அறியும் உரிமை மீறல் ஒப்பீட்டளவில் நியாயப்படுத்தப்படவில்லை.

*பிரச்னை 3: நன்கொடையாளர் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக ஆர்.டி.ஐ மீறல் நியாயமானதா?

நன்கொடையாளர் தனியுரிமைக்கான உரிமையில் குடிமகனின் அரசியல் தொடர்பு பற்றிய தகவல்கள் உள்ளதா என்பதை நீதிமன்றம் பரிசீலித்தது. ஆம் எனில், ஒரு அரசியல் கட்சிக்கான நிதிப் பங்களிப்பானது அரசியல் தகவலின் ஒரு அம்சமா?

புட்டாசாமி தீர்ப்பில், தகவல் தனியுரிமை உரிமையில் அரசியல் தொடர்பும் அடங்கும் என்று நீதிமன்றம் கூறியது. அரசியல் நம்பிக்கைகளை உருவாக்குவது அரசியல் வெளிப்பாட்டின் முதல் கட்டமாகும். மேலும், அரசியல் சார்பின் தனியுரிமை இல்லாமல் அரசியல் வெளிப்பாட்டை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது. வேலைவாய்ப்பை மறுப்பதன் மூலம் கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் பாகுபாடு காட்டுவதற்கும் அரசால் தகவல் பயன்படுத்தப்படலாம்.

அரசியல் சாரபு தனியுரிமை இல்லாமை, அரசியல் கருத்துக்கள் மைய நீரோட்டக் கருத்துக்களுடன் பொருந்தாதவர்களை ஒப்பீட்டளவில் பாதிக்கும். இந்த விஷயத்தில் தனியுரிமை வழங்காதது பேரழிவை ஏற்படுத்தும், ஏனெனில், இது வாக்காளர் கண்காணிப்பு மூலம் - சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வாக்களிக்கும் முறைகளை அடையாளம் காண்பதன் மூலம் வாக்காளர்களின் வாக்குரிமையை நீக்கப் பயன்படும். உதாரணமாக, ஒரு வாக்காளர் வாங்கிய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் பற்றிய தரவு அவர்களின் கருத்தியல் சார்பைக் குறிக்கலாம்.

அரசியல் கட்சிகளுக்கு நிதிப் பங்களிப்பு பொதுவாக இரண்டு காரணங்களுக்காக வழங்கப்படுகிறது என்று நீதிமன்றம் கூறியது. ஒன்று அரசியல் கட்சிக்கு ஆதரவு. இரண்டாவதாக, இருதரப்பு பரஸ்பரம் பறிமாறிக்கொள்ளுதல், பெருநிறுவனங்கள் செய்யும் பெரும் பங்களிப்புகள், மக்கள்தொகையின் பிற பிரிவினர் செய்த நிதி பங்களிப்புக்கான காரணத்தை மறைக்க அனுமதிக்கக் கூடாது.

தகவல் தனியுரிமைக்கான உரிமையானது அரசியல் கட்சிகளுக்கான பங்களிப்புகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது மற்றும் இது அரசியல் இணைப்பின் ஒரு அம்சமாகும் என்று நீதிமன்றம் கூறியது. பங்களிப்புகளில் ஒரு பகுதி (கார்ப்பரேட் நன்கொடையாளர்கள்) பிற காரணங்களுக்காக செய்யப்படுவதால் மட்டுமே அரசியல் பங்களிப்புகளுக்கு தனியுரிமை என்ற பாதுகாப்பை வழங்காமல் இருப்பது அனுமதிக்கப்படாது.

அரசியல் சார்பின் தனியுரிமைக்கான உரிமையானது அந்த பங்களிப்புகளுக்கு நீட்டிக்கப்படாது, இது கொள்கைகளை பாதிக்கச் செய்யலாம். இது அரசியல் ஆதரவின் உண்மையான வடிவமாக அளிக்கப்படும் பங்களிப்புகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது.

*பிரச்னை 4: நிறுவனங்களின் வரம்பற்ற அரசியல் பங்களிப்புகள் அரசியலமைப்பிற்கு எதிரானது

இதை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. பங்களிப்புகள் மூலம் அரசியல் செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்களின் திறன் தனிநபர்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.

நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்புகள் முற்றிலும் வணிகப் பரிவர்த்தனைகள், அதற்கு ஈடாக பலன்களைப் பெறுவதற்கான நோக்கத்துடன் செய்யப்படுபவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment