Advertisment

எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி, தலித் சமூகங்கள்

வியாழன் தீர்ப்பால் பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் 10 மாநிலங்களில் உள்ள சில முக்கிய பழங்குடியினர் மற்றும் தலித் சமூகங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Supreme Court

Sub-classification of SCs Reservation for less privilege

வியாழன் அன்று, உச்ச நீதிமன்றம், பட்டியலின பழங்குடியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பலரும் வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.

அதேநேரம் வியாழன் தீர்ப்பால் பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் 10 மாநிலங்களில் உள்ள சில முக்கிய பழங்குடியினர் மற்றும் தலித் சமூகங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மகாராஷ்டிரா 

இங்கு 30க்கும் மேற்பட்ட எஸ்.சி. சமூகத்தில், மஹர் மற்றும் மாதங் மிகவும் முக்கியமானவர்கள். மஹர் சமூக-அரசியல் ரீதியாக செல்வாக்கு உள்ளவர்கள், ஒப்பீட்டளவில் உயர் கல்வியறிவு கொண்டவர்கள். இந்திய ராணுவத்தில் மஹர் ரெஜிமென்ட் உள்ளது.

மாதாங் இரண்டாவது பெரிய எஸ்சி சமூகம்; இதில் பெரும்பான்மை இந்துகள். 

விதர்பாவில், குறிப்பாக கட்சிரோலி மற்றும் சந்திராபூர் மாவட்டங்களில் வசிக்கும் கோண்ட் மற்றும் வடக்கு மகாராஷ்டிர மாவட்டங்களான நந்தூர்பார், நாசிக், துலே ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வாழும் பில், மற்ற இரண்டு பெரிய பழங்குடியினர்.

ராஜஸ்தான் 

மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 எஸ்சி பட்டியலில், மேக்வால் மாநிலம் முழுவதும் முக்கியமாக பிகானர், ஜெய்சல்மர், பார்மர், ஜோத்பூர் ஆகிய எல்லை மாவட்டங்களில் பரவியுள்ள மிகப்பெரிய எஸ்சி சமூகம். கிழக்கு ராஜஸ்தானில் பைர்வா மற்றும் ஜாதவ் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 

10க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும், மீனா மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினர். 

நாடு முழுவதும் காவல்துறை மற்றும் அதிகாரத்துவத்தில் இந்த சமூகம் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. 

பில், இதில் சிலர் தங்களை இந்துக்களாகக் கருதாதவர்கள், பன்ஸ்வாரா மற்றும் துங்கர்பூர் மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர், மேலும் ஒரு புதிய பழங்குடியினக் கட்சியின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

ஒடிசா 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, இங்கு பழங்குடியினர் மாநில மக்கள் தொகையில் 22.85 சதவிகிதம் மற்றும் இந்தியாவின் பழங்குடி மக்கள் தொகையில் 9.17 சதவிகிதமாக உள்ளனர். 

மாநிலத்தில் 62 பழங்குடியினர் மற்றும் 13 பிற பழங்குடியினர் உள்ளனர். இதில் கோண்ட் சமூகம் பெரும்பான்மையாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் தெற்கு ஒடிசா மாவட்டங்களான ராயகடா, கந்தமால், கலஹண்டி, கோராபுட் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். 

அதை தொடர்ந்து சந்தால் இரண்டாவது பெரிய பழங்குடி குழு ஆகும். 

மாநில பட்டியலில் உள்ள 93 எஸ்.சி சமூகம், மொத்த மக்கள் தொகையில் 17.13 சதவிகிதம் உள்ளனர். (2011).

பான் ஆதிக்கம் செலுத்தும் எஸ்சி சமூகம், அதைத் தொடர்ந்து டோம் உள்ளது. மற்ற SC சமூகங்களில் தோபா, காண்டா, காந்த்ரா, பௌரி ஆகியவை அடங்கும்.

சத்தீஸ்கர்

மாநிலத்தின் 2.55 கோடி மக்கள் தொகையில் (2011) எஸ்டி சமூகம், 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. 43 பழங்குடி சமூகங்களில் கோண்ட் மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறது; இவர்கள் பழங்குடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 55 சதவிகிதம் ஆவர். 

கவார் அல்லது கன்வார் (11% க்கும் அதிகமானோர்) மற்றும் ஓரான் (கிட்டத்தட்ட 10%) மக்கள் அடுத்த இடத்தில் உள்ளனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 44 SC குழுக்கள் மாநில மக்கள் தொகையில் 12.7 சதவிகிதமாக உள்ளனர். தலித் மக்கள்தொகையில் 70% க்கும் அதிகமானோர் எஸ்.சி.க்களில் மிகப்பெரிய குழுவாக உள்ளனர், மேலும் இது பைர்வா, ரைதாஸ் போன்ற 16 வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.

மத்திய பிரதேசம்

இங்கு மாநில மக்கள்தொகையில் 15.6 சதவிகிதம் எஸ்சி சமூகம் உள்ளது. SC சமூகத்தின் எண்ணிக்கையில் 47% க்கும் அதிகமான தலித், பாரம்பரியமாக தோல் தொழிலாளர்கள், இவர்கள் மாநிலம் முழுவதும் வாழ்கின்றனர்.

மால்வா பகுதியில் வசிக்கும் பாலாய், மாநிலத்தின் SC மக்கள் தொகையில் (2011) சுமார் 12% ஆவர்.

மக்கள்தொகையில் 21% எஸ்டி சமூகம் உள்ளது. பழங்குடியின மக்கள் தொகையில் 39%க்கும் அதிகமானவர்கள் பில் சமூகத்தினர். மாநிலத்தின் ST மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கான கோண்டு, அடுத்த  பெரிய சமூகம்,

மேற்கு வங்காளம்

மாநிலத்தின் 21.4 மில்லியன் எஸ்சிக்களில் (2011) 18%க்கும் அதிகமானவர்களைக் கொண்ட ராஜ்பன்ஷி மிகப்பெரிய எஸ்சி குழுவாகும்; வடக்கு வங்காளத்தில் உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை இந்த சமூகம் பாதிக்கிறது. 

மட்டுவா இப்போது இரண்டாவது பெரிய எஸ்சி குழுவாக உள்ளது; அவை பெரும்பாலும் வடக்கு மற்றும் தெற்கு 24-பர்கானாஸ், நாடியா, ஹவுரா, கூச் பெஹார், வடக்கு, தெற்கு தினாஜ்பூர் மற்றும் மால்டா போன்ற எல்லை மாவட்டங்களில் அதிகமாக வசிக்கின்றனர்.

மட்டுவா மதம் 19 ஆம் நூற்றாண்டில் ஹரிசந்த் தாக்கூரால் நிறுவப்பட்டது, அவர் "தீண்டத்தகாதவர்கள்" மத்தியில் பணியாற்றினார். மூன்றாவது பெரிய SC சமூகம் பாக்டி ஆகும், அவர்கள் முக்கியமாக பங்குரா மற்றும் பிர்பூமில் வாழ்கின்றனர்.

குஜராத்

27 தலித் சாதிகளில் நெசவுத் தொழிலை தனது பாரம்பரியத் தொழிலாகக் கொண்ட வங்கர், மாநிலத்தில் உள்ள SC மக்கள் தொகையில் 35-40% வரை உள்ளனர், மேலும் மற்ற தலித் சமூகங்களை விட கல்வி மற்றும் வேலைகளில் முன்னணியில் உள்ளனர். 

SC மக்கள்தொகையில் சுமார் 25-30% இருக்கும் ரோஹித், அடுத்த ஆதிக்கம் செலுத்தும் SC சமூகம்.

பில், பழங்குடி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 43% ஆவர், முக்கியமாக டாங், பஞ்சமஹால், பருச், பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் வாழ்கின்றனர். மேலும் சூரத், நவ்சாரி, பருச் மற்றும் வல்சாத் ஆகிய தென் மாவட்டங்களில் வசிக்கும் ஹல்பதி, மாநிலத்தின் பழங்குடியினரில் 6% க்கும் அதிகமாக உள்ளனர். 

அஸ்ஸாம்

பழங்குடியினர் மொத்த மக்கள் தொகையில் 12.4% (2011) ஆவர். 

கர்பி ஆங்லாங் மற்றும் வடக்கு கச்சார் மலைகளின் தன்னாட்சி மாவட்டங்களில் பதினைந்து அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர்; மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 14 பழங்குடியின சமூகம் உள்ளது. 

இதில் போடோ மிகப்பெரிய பழங்குடியினர் (பழங்குடி மக்கள் தொகையில் 35.1%) மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் சக்திவாய்ந்தவர்கள். 

கர்பி மிகப்பெரிய மலைவாழ் பழங்குடியினர் மற்றும் மாநிலத்தில் மூன்றாவது பெரிய பழங்குடியினர் (பழங்குடி மக்கள் தொகையில் 11.1%).

திரிபுரா

19 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி சமூகங்கள் மாநில மக்கள்தொகையில் 30% க்கும் அதிகமாக உள்ளனர். பண்டைய திரிபுரி குலத்தில் தெப்பர்மா சமூகம் அடங்கும், இது திரிபுராவின் முந்தைய ஆளும் வம்சமாகும்.

மாநிலத்தில் உள்ள 34 SC சமுகம், மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 18% (2011) உள்ளனர். இதில், தாஸ், பத்யாகர், ஷப்தாகர், சர்க்கார் போன்ற சமூகங்கள் அடங்கும்.

உத்தரகாண்ட்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாக்கூர் மற்றும் பிராமணர் மக்கள் தொகையில் சுமார் 55% உள்ளனர். OBC சுமார் 18%, மற்றும் SC, ST ஒன்றாக 22% உள்ளனர். 

இந்து மதத்தை பின்பற்றும் ஹரிஜன் மற்றும் பால்மிகி இரண்டும் மிகப்பெரிய எஸ்சி குழுக்கள். ஜான்சாரி மற்றும் தாரு மாநிலத்தின் இரண்டு பெரிய எஸ்டி குழுக்கள் ஆகும். 

Read in English: States can sub-classify SCs and STs for quota, apex court rules: Tribal and Dalit communities that may be affected

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment