scorecardresearch

உச்சநீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பு; மத நடைமுறையில் அத்தியாவசிய சோதனை

உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயில் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்து எடுத்துள்ள முடிவு, ஐயப்பன் கோயிலில் மாதவிடாய் வயது பெண்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பான விவாதத்தை மீண்டும் திறந்துள்ளது.

supreme court sabarimala verdict, sabarimala temple, சபரிமலை வழக்கு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, supreme court sabarimala verdict explained, sabarimala temple case, sabarimala verdict, sabarimala larger bench
supreme court sabarimala verdict, sabarimala temple, சபரிமலை வழக்கு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, supreme court sabarimala verdict explained, sabarimala temple case, sabarimala verdict, sabarimala larger bench

உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயில் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்து எடுத்துள்ள முடிவு, ஐயப்பன் கோயிலில் மாதவிடாய் வயது பெண்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பான விவாதத்தை மீண்டும் திறந்துள்ளது. அது மட்டுமில்லாமல், எந்தவொரு மதமும் பெண்களை வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழைவதை தடுக்க முடியுமா என்ற பெரிய பிரச்னைக்கான விவாதத்தையும் திறந்துள்ளது.

இந்த பெரிய அமர்வு பரிந்துரையானது அத்தியாவசிய மத நடைமுறை பரிசோதனையை மறு மதிப்பீடு செய்யும். மதத்திற்கு இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த அத்தகைய மத நடைமுறைகளை மட்டுமே பாதுகாக்க நீதிமன்றத்தால் ஒரு சர்ச்சைக்குரிய கோட்பாடு உருவாகியுள்ளது.

சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்த இரண்டு பார்சி பெண்கள் அமைதி கோபுரம் மற்றும் பிற மத சம்பந்தமான இடங்களுக்குள் நுழைய ஒரு தசாப்த கால எதிர்ப்பு நிலவிய வழக்கு; முஸ்லிம் பெண்களை மசூதிகளுக்குள் நுழையக் கோரும் வழக்கு; நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளையும் இணைத்துள்ளது.

2018 சபரிமலை தீர்ப்பில் பெரும்பான்மையான கருத்து, வழிபாட்டுத் தலங்கள் உள்பட பொது இடங்களை அணுகுவதில் பெண்களுக்கு சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை உண்டு என்று கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், சபரிமலை தீர்ப்பு முக்கியமாக புதிதாகக் வாதிடப்படும் என்பதால், பாலின சமத்துவம் குறித்த அரசியலமைப்பு விவாதம் மீண்டும் ஒரு முறை திறக்கப்படும்.

மறுஆய்வு தீர்ப்பானது உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துப் போராடிய பக்தர்கள் மற்றும் சபரிமலை கோயில் அதிகாரிகளுக்கு அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கூடியதாக இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் அத்தியாவசிய கோட்பாடு என்ன?

1954 ஆம் ஆண்டில் ‘ஷிரூர் மடம்’ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அத்தியாவசியம் என்ற கோட்பாட்டைக் கண்டுபிடித்தது. மதம் என்ற சொல் ஒரு மதத்தின் ஒருங்கிணைந்த அனைத்து சடங்குகளையும் நடைமுறைகளையும் உள்ளடக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது. ஒரு மதத்தின் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய நடைமுறைகளை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு, ஒரு உச்ச நீதிமன்ற அமர்வு 2-1 பெரும்பான்மையால் மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டது. டாக்டர் எம். இஸ்மாயில் ஃபாரூக்கி மற்றும் ஆர்ஸ் vs இந்திய அரசு மற்றும் பிறர்’ (அக்டோபர் 24, 1994) , இது பாபர் மசூதி இருந்த அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்திய சட்டத்தை உறுதி செய்தது.

“ஒரு மசூதி இஸ்லாமிய மதத்தின் நடைமுறையில் ஒரு முக்கிய அங்கமல்ல. முஸ்லிம்களால் நமாஸ் தொழுகை எங்கு வேண்டுமானாலும் திறந்த வெளியில் செய்யலாம்” என்று அரசியலமைப்பு அமர்வு 1994-இல் தீர்ப்பளித்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் கோட்பாடு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?

உச்சநீதிமன்றத்தின் ‘அத்தியாவசியக் கோட்பாடு’ பல அரசியலமைப்பு வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் அறிஞர்கள், அத்தியாவசியம் / ஒருங்கிணைப்புக் கோட்பாடு நீதிமன்றத்தை அதன் திறனுக்கு அப்பாற்பட்ட ஒரு பகுதிக்கு இட்டுச் செல்வதாக வாதிட்டனர், மேலும் நீதிபதிகள் முற்றிலும் மத கேள்விகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

இதன் விளைவாக, பல ஆண்டுகளாக, நீதிமன்றங்கள் இந்த கேள்விக்கு முரணாக உள்ளன – சில சந்தர்ப்பங்களில் அவை அத்தியாவசியத்தை தீர்மானிக்க மத நூல்களை நம்பியுள்ளன. மற்றவற்றில் பின்பற்றுபவர்களின் அனுபவ நடத்தை யையும் பிறவற்றில், மதம் தோன்றிய நேரத்தில் நடைமுறை இருந்ததா என்பதை அடிப்படையாகக் கொண்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் அரசியலமைப்பின் பிரபல நிபுணர் பேராசிரியர் பைசான் முஸ்தபா பின்வரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்:

ஆதியில் கோயில்களுக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளில் வெளிப்படும் தீண்டாமை, இந்து மதத்தின் இன்றியமையாத பகுதியா என்ற கேள்வியை நீதிமன்றம் சந்தித்தது. அது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து நூல்களை ஆராய்ந்த பின்னர், தீண்டாமை என்பது ஒரு அத்தியாவசிய இந்து நடைமுறை அல்ல என்ற முடிவுக்கு வந்தது.

‘துர்கா கமிட்டி’, அஜ்மீர் மற்றும் மற்றொருவர் vs சையத் உசேன் அலி மற்றும் மற்றவர்கள் (மார்ச் 17, 1961) வழக்கில் எழுதிய ஐந்து நீதிபதிகள் தீர்ப்பில் நீதிபதி பி.பி.கஜேந்திர கட்கர், பகுத்தறிவின் மதச்சார்பற்ற தேவையை அத்தியாவசிய சோதனையில் சேர்த்தார். துர்கா கமிட்டி மத நடைமுறைகளை (அது) மதமாக இருப்பினும் மறுத்தது. அது வெறும் மூடநம்பிக்கைகளிலிருந்து தோன்றியிருக்கலாம். அவை மதத்திற்கு புறம்பானதாகவும் அவசியமற்ற ஊடுருவல்களாகவும் இருக்கலாம் என்று மறுத்தது.

* ஒரு கிராமத்தின் கிராமசபை பாட்டிஸ் ஷிரால vs இந்திய அரசு மற்றும் பிறர் (2014) வழக்கில், ஸ்ரீநாத் லீலாம்ருதத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு குறிப்பிட்ட பிரிவினர், நாகபஞ்சமி திருவிழாவின் போது உயிருடன் ஒரு நாகப்பாம்பைக் பிடித்து வழிபடுவது அவர்களின் மதத்தின் இன்றியமையாத பகுதி என்று பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டனர். இருப்பினும், இந்த வாதத்தை நிராகரிக்க, பொது இந்து நடைமுறையை குறிப்பிடும் டாக்டர் பி.வி.கேனின் தர்மசாஸ்திரச்சா இதிகாசத்தை நீதிமன்றம் நம்பியுள்ளது.

* ஒரு முஸ்லிம் காவல்துறை அதிகாரி தாடி வளர்க்க அனுமதி அளிக்காத காவல்துறையின் ஒழுங்கு நடைமுறையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இந்த வழக்கில், இஸ்லாத்தில் தாடியின் இன்றியமையாத கேள்வியைப் பார்ப்பதைவிட, சில முஸ்லிம் பிரமுகர்கள் தாடி வளர்ப்பதில்லை என்பதையும், மனுதாரரின் முந்தைய ஆண்டு பணி சேவையில் தாடி இல்லை என்பதையும் மட்டுமே நம்பி மனுதாரரின் வேண்டுகோளை நிராகரித்தது. நீதிமன்றம் மத நூல்களைக் காட்டிலும் நடைமுறையின் அனுபவ ஆதாரங்களைப் பார்த்தது. இருப்பினும், இதற்கு மாறாக அனுபவபூர்வமான சான்றுகள் இருந்தபோதிலும், நீதிமன்றங்கள் இந்துக்களிடையே விலங்கு பலியிடுவதை பாதுகாக்க மறுத்துள்ளன. இந்த நடைமுறையை காட்டுமிராண்டித்தனமானது என்று குறிப்பிடுகிறது.

* ஆனந்த மார்கி வழக்கில் முதலில், தாண்டவ நடனம் ஆனந்த மார்கி நம்பிக்கையின் இன்றியமையாத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றம் முன்னோர்களின் கோட்பாட்டை நம்பியது. மேலும், அது 1955 ஆம் ஆண்டில் இந்த நம்பிக்கை உருவானது என்றும் 1966 ஆம் ஆண்டில் தான் தாண்டவ நடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அது கூறியது. ஆகவே, நம்பிக்கையானது நடைமுறையில் இல்லாமல் இருந்ததால் நடைமுறையை நம்பிக்கையின் இன்றியமையாத அம்சமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது.

பேராசிரியர் முஸ்தபா, அத்தியாவசியமானது என்று நீதிமன்றம் கருதும் மதத்தின் கூறுகளுக்கு மட்டும் அரசியலமைப்பு பாதுகாப்பை வழங்குவது என்ற யோசனை சிக்கலானது என்று சுட்டிக்காட்டினார்.

ஆகவே, அத்தியாவசிய சோதனை மூலம் மற்றவர்களுக்கு சில நடைமுறைகளில் சலுகை அளிக்கிறது. உண்மையில் இது ஒரு மதத்தை உருவாக்கும் அனைத்து நடைமுறைகளையும் ஒன்றாக எடுத்துக்கொள்கிறது.

மத சுதந்திரத்திற்கு எதிராக அத்தியாவசியம் எவ்வாறு மாறுகிறது?

மத சுதந்திரம் என்பது கடவுளுடன் மனிதனின் உள்ளார்ந்த தொடர்பு என்ற கருத்தின் அடிப்படையில் ஒருவர் தனது நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்வதாகும்.

பேராசிரியர் முஸ்தபா போன்ற அறிஞர்கள் இந்த தன்னாட்சிக்கு அத்தியாவசிய சோதனை தடைசெய்கிறது என்று வாதிட்டனர். உச்ச நீதிமன்றம் தனது தனியுரிமை (2017), 377 (2018) மற்றும் வயது முதிர்ந்தவர்வகள் (2018) தீர்ப்புகளில் தன்னாட்சி மற்றும் தேர்வை வலியுறுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Supreme courts sabarimala temple verdict and the essentially test in religious practice