Faizan Mustafa
Supreme Court’s Sabarimala verdict differs with Ayodhya order : ஆஸ்திரேலேயாவின் அடிலைடில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பில் “மதம் என்பது ஒருவருக்கு நம்பிக்கை மற்றொருவருக்கு மூடப்பழக்கம்” என்று குறிப்பிட்டிருந்தது அந்நாட்டு நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை தேவையான மத வழிபாடு எது என்பது குறித்து ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது.
7 பேர் நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வுக்கு சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நேற்று (14/11/2019) மாற்றப்பட்டது. மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ”2018ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் குறையை கண்டுபிடிக்கவோ அல்லது புதிதாக ஒரு அம்சத்தை சேர்க்கவோ - என்ற கட்டுப்பாட்டு அளவுக்குள் மறுசீராய்வு மனுக்கள் பார்க்கப்படவேண்டும்” என்று கூறியுள்ளனர். பாபர் மசூதி வழக்கின் இறுதி தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்ய விருப்பம் இருப்பவர்கள் நிச்சயமாக சபரிமலை தீர்ப்பினை ஒரு முறை பார்க்க வேண்டும்.
To read this article in English
சபரிமலை மறுசீராய்வு மனுக்களுடன் போஹ்ரா சிறுபான்மையினர் பின்பற்றி வரும் பெண்கள் பிறப்புறப்பு சிதைப்பு, மசூதிகளில் பெண்கள் வழிபாடு, பார்சி வகுப்பை சேராதவர்களை திருமணம் செய்த பார்சி பெண்கள் அக்யாரிக்குள் நுழைய அனுமதி ஆகிய வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இரண்டு நீதிபதிகள். சபரிமலை விவகாரம் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட வேண்டுமே தவிர வேறு வழக்குகள் விசாரிக்கப்பட கூடாது என்று நீதிபதிகள் கூறியது சரி தான்.
ஒரு மதத்தில் எது தேவை, எது தேவையில்லை என்பதை சட்டங்களோ, அரசோ நம்மிடம் கூற கூடாது. நீதி அமைப்பானது ஒரு மதத்தலைவர் போன்று செயல்பட கூடாது. பாபர் மசூதி வழக்கின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றமே தனிப்பட்ட நபர்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவது முறையில்லை என்று கூறியுள்ளது. பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, சபரிமலை தீர்ப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சபரிமலை விவகாரத்தில் ”ராமரின் பிறப்பிடம் தான் அயோத்தி என்ற இந்து மக்களின் நம்பிக்கையை கேள்விகள் ஏதும் இன்றி ஏற்றுக் கொண்டது. பாபர் மசூதியின் மத்திய கோபுரம் அமைக்கப்பட்ட இடத்திற்கு நேர் கீழே தான் ராமர் பிறந்தாரா என்று கேள்வி எழுப்பப்படவில்லை. இந்து மத நம்பிக்கை இல்லாமல் இந்துவாக ஒருவரால் எப்படி இருக்க இயலும் என்றும் யாரும் கேள்வி எழுப்பவில்லை”.
சபரிமலை கோவிலில் பிற மதத்தினரும் செல்வதால் அது இந்து கோவில் இல்லை என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்தனர் நரிமன் மற்றும் சந்திரசூட். மேலும் தேவாலாயத்தில் எத்தனை விதமான மத நம்பிக்கை கொண்டவர்கள் சென்றாலும் தேவாலயம் தேவாலயமாக தான் இருக்கிறது. சன்னி வக்பூ வாரியம் இடத்திற்கு கோரிய உரிமை நிராகரிக்கப்பட்டது. 1528ம் ஆண்டு முதல் 1856ம் ஆண்டு வரையில் இஸ்லாமியர்கள் பாபர் மசூதியின் உள் கட்டிடத்தில் பிரார்த்தனைகள் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்ற காரணத்தால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பல காலமாக இஸ்லாமியர்கள் உள் வளாகத்தில் பிரார்த்தனை செய்யவில்லை. அதே போன்று சில நேரங்களில் இந்துக்கள் பலர் உள் வளாகத்தில் பிரார்த்தனை செய்துள்ளனர். அவர்கள் யாரும் மசூதி என்ற தன்மையை அவர்கள் மாற்ற முற்படவில்லை.
சமூக வளர்ச்சி தேவைப்படும் பொழுது மதம் தொடர்பான கோட்பாடுகளை கேள்வி கேட்கும் உரிமையை நம்முடைய அரசியல் சாசனம் கொண்டுள்ளது. ஆனால் ஒரு நடவடிக்கை மதம் சார்ந்ததா அல்லது மதசார்பற்றதா என்பதை எப்படி முடிவு செய்வது. இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏன் என்றால் மதம் சார்ந்த நடவடிக்கையாக இருக்கும் பட்சத்தில் அதில் அரசு தலையிட இயலாது. சிரூர் முத் (1954) வழக்கில் இந்திய அரசியல் சாசனம் சமயம் தொடர்பான நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஒரு மதத்தின் உட்பிரிவாகும் என்று கூறியது.
மதம் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதில் அத்தியாவசிய வழிபாடுகளுக்கான சோதனையாக இருக்கிறது. ஆனால் ஒரு மதத்திற்கான, தேவையான அல்லது அத்தியாவசியமான வழிபாட்டு முறைகள் என்ன என்பதை நிர்ணயிக்கும் பணியானது நீதிபதிகளை, அவர்களின் திறமைகளுக்கு அப்பாற்பட்ட இடத்திற்கு எடுத்துச் சென்றது. தலைமை நீதிபதி, கான்வில்கர் மற்றும் இந்து மல்கோத்ரா நீதிபதிகள் இந்த வழக்கினை வேறொரு அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் அளித்தவர்கள். இந்திய அரசியல் சாசனத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் கடமைகளை கருத்தில் கொண்டு இந்த வழக்குக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
1958ம் ஆண்டு தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது. கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் இந்து மத கோட்பாடுகளை ஆராய்ந்து தீண்டாமை என்பது இந்து மதத்தில் கிடையாது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த ஆண்டு சந்திரசூட் கூறுகையில் பெண்களின் சபரிமலை அனுமதி மறுப்பு என்பது கூட ஒருவகையில் தீண்டாமையை பின்பற்றும் முறை என்றும் இது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 17யும் மீறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மதம் தொடர்பான சிக்கலான வழக்குகள் கடந்து வந்த பாதை
-
- 2014ம் ஆண்டு பட்டிஸ் சிரலா பஞ்சாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட இன மக்கள் நாக பஞ்சமி அன்று ராஜநாகத்தை உயிருடன் பிடித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மும்பை உயர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கின் போது பொதுவான இந்து சாஸ்திரம் படி தீர்ப்பினை வழங்கியது. அம்மக்கள் தங்கள் பின்பற்றிய மத சாஸ்திரம் குறித்து மும்பை நீதிமன்றம் பெரிதும் ஆலோசிக்கவில்லை. ஐயப்பன் கோவில் விவகாரத்திலும் பொதுவான இந்து சாஸ்திரத்தை பின்பற்றி தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்துதல் தனி சமய சடங்கு என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
- கேரள உயர் நீதிமன்றத்தில், இஸ்லாமிய காவல்துறையை சேர்ந்த ஒருவர் தான் தாடி வளர்க்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் சில இஸ்லாமியர்கள் தாடி வளர்ப்பதில்லை என்றும், அந்த அதிகாரி இதற்கு முந்தைய வருடங்களில் தாடி ஏதும் வளர்க்கவில்லை என்றும் கோரி நடைமுறையில் இருக்கும் ஆதாரங்களை காட்டி அவரின் மனுவை நிராகரித்துவிட்டது.ஆனால் கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் நடைமுறையில் இருந்த போதும் இந்த செயல்கள் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி அதற்கு தடை விதித்தது நீதிமன்றம்.
- ஆனந்த மர்க்க வழிமுறையில் தாண்டவ நடனம் வேண்டாம் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம், ஆனந்த மார்க்கம் 1955ம் ஆண்டு தொடங்கப்பட்டு பலராலும் பின்பற்றப்பட்டது. 1966ம் ஆண்டு தாண்டவ நடனம் இந்த நம்பிக்கையில் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டது. ஆனால் மார்க்கம் உருவான போது இந்த நடைமுறை இல்லை என்பதால், தாண்டவ நடனம் ஆனந்த மார்க்கத்தின் ஒரு இன்றியமையாத அம்சமாக ஏற்றுக் கொள்ள இயலாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு மதம் தோன்றிய பின்பு எந்தவிதமான பரிமாணமும் அடையாமல் அப்படியே உறைந்துவிட வேண்டும் என்று நீதிமன்றங்கள் பரிந்துரைக்கும் வகையில் விசித்திரமான ஒரு வாதமாக அது அமைந்தது.
- 1994ம் ஆண்டு இஸ்மாயில் ஃபாருக்கி வழக்கில், பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தை அரசு கையகப்படுத்தியதிற்கு எதிராக மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். மாறாக மசூதியில் தொழுகை செய்வது இஸ்லாத்தின் இன்றியமையாத நடைமுறையா என்று கேள்வி எழுப்பியது. மேலும் தொழுகை செய்வது இன்றியாமையாத நடைமுறை தான். ஆனால் அதற்காக மசூதி தான் செல்ல வேண்டும் என்றில்லை என தீர்ப்பு வழங்கியது. 2018ம் ஆண்டு இந்த தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சபரிமலை விவகாரத்தில் வழக்குகள் வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Prof Faizan Mustafa is Vice-Chancellor of NALSAR University of Law, and an expert of constitutional law.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.