காவலர்கள் பற்றி சர்வே: முஸ்லிம்கள், புலம்பெயர்ந்தோர்களை குற்ற நடவடிக்கையில் தொடர்புபடுத்துவதில் சார்பு நிலை

Survey in Police Personnel: காமன் காஸ் லோக் நிதி - சி.எஸ்.டி.எஸ். அமைப்பால் தயாரிக்கப்பட்டிருந்த இந்தியாவில் காவல் பணி நிலைமை 2019 அறிக்கையை தி...

Survey in Police Personnel: காமன் காஸ் லோக் நிதி – சி.எஸ்.டி.எஸ். அமைப்பால் தயாரிக்கப்பட்டிருந்த இந்தியாவில் காவல் பணி நிலைமை 2019 அறிக்கையை தி இந்திய எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளில் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதில், முஸ்லிம்களை குற்ற நடவடிக்கையில் தொடர்புபடுத்துவதில் காவலர்கள் மத்தியில் ஒரு சார்பு நிலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட காவலர்களில் சுமார் பாதி காவலர்கள், முஸ்லிம்கள் இயற்கையாகவே குற்றங்களைச் செய்ய மிகவும் மற்றும் ஓரளவு வாய்ப்புள்ளது என்று பதிலளித்துள்ளனர்.

அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: உங்கள் கருத்தில், எந்த அளவிற்கு அ.உயர்சாதி இந்துக்கள் ஆ.இதர பிற்படுத்தப்பட்டோர் இ.தலித்துகள் .பழங்குடியினர் உ.முஸ்லிம்கள் இவர்களில் யார் இயற்கையாகவே குற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது… இதில் குற்றம் செய்ய வாய்ப்பு மிகவும், ஓரளவு, அரிதாக, இல்லவே இல்லை என்ற விருப்ப தேர்வுகளும் அளிக்கப்பட்டிருந்தது.

இதில் 14 சதவீதத்தினர் மிகவும் என்று பதிலளித்துள்ளனர். 36 சதவீதத்தினர் ஓரளவு என்று பதிலளித்துள்ளனர். இதனால், மொத்தம் 50 சதவீதம் முஸ்லிம்கள் என்று வேறு எந்த சமூகத்தையும் விட மிக அதிக அளவில் இருந்தது. உயர் சாதி இந்துக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு மிகவும் மற்றும் ஓரளவு என்ற பதில்கள் 30 முதல் 35 சதவீதம் வரை இருந்தது.

உத்தரகண்ட், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் பீகார் போன்ற சில மாநிலங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட காவலர்கள் முஸ்லிம் சமூகம் இயற்கையாகவே குற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது (மிகவும் மற்றும் ஓரளவு வாய்ப்புள்ளது சேர்த்து) தெரிவித்துள்ளனர். மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில், ஐந்து போலீஸ்காரர்களில் நான்கு பேருக்கு இந்த கருத்து இருந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை அசாமில் உள்ள இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டின் (என்.ஆர்.சி) புதுப்பிப்பைக் குறிப்பிடுகிறது. பின்னர் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வு பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டிற்குள் பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியேறியவர்களுக்கு உள்ளது என்பதை உள்ளடக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த சமூகங்களை துன்புறுத்துவதில் காவல்துறையினர் பெரும்பாலும் பாகுபாட்டுடன் இருப்பதாக கூறுகிறது. மேலும், அது அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் சார்பு நிலையின் எண்ணிக்கை அளவை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஐந்து காவல் பணியாளர்களில் மூன்று பேர் புலம் பெயர்ந்தோரை இயற்கையாகவே குற்றங்களைச் செய்யக்கூடியவர்களாக கருதியுள்ளனர். இதில் மொத்தம் பதிலளித்தவர்களில் மிக அதிகம் என்று 24 சதவீதம் பேரும் ஓரளவு என்று 36 சதவீதம் பேரும் தெரித்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், அசாமில், இந்த ஒரு சார்பு நிலை தேசிய சராசரியை விட குறைவாகவே வெளிப்பட்டுள்ளது. தேசிய அளவில் 60 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, மிகவும் மற்றும் ஓரளவு என்று அசாமில் பதிலளித்தவர்கள் 49 சதவீதமாக உள்ளது. மேலும், இதில் 1 சதவீதம் பேர் மட்டுமே மிக அதிகமாக வாய்ப்புள்ளது என்று பதிலளித்துள்ளார்கள். 48 சதவீதம் பேர் ஓரளவு வாய்ப்புள்ளது என்று பதிலளித்துள்ளனர்.

ஆந்திரா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பாகுபாடு கூறப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு ஐந்து காவலர்களில் குறைந்தது நான்கு பேர் மற்ற மாநிலங்களில் இருந்து குடியேறுபவர்கள் இயற்கையாகவே குற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது (மிகவும் மற்றும் ஓரளவு வாய்ப்புள்ளதாக சேர்த்து) என்று நம்புகின்றனர். குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில், நான்கில் மூன்று பேர் அவ்வாறு கருதுகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close