அசாஞ்சே பாலியல் வழக்கை கைவிட்ட சுவீடன்; இப்போது என்ன நடக்கிறது?

இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பத்து ஆண்டுகள் பழமையான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை கைவிடுவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.

By: November 21, 2019, 5:52:33 PM

இங்கிலாந்தில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பத்து ஆண்டுகள் பழமையான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை கைவிடுவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.

ஜூலியன் அசாஞ்சே ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்பட இருந்தபோது, அவருக்கு லண்டனில் புகலிடம் வழங்கப்பட்டது. அவர் 2012 ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வசித்துவந்தார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில், ஈக்வடார் அதிகாரிகள் அவரது புகலிடத்தை ரத்து செய்த பின்னர், ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.

ஜூலியன் அசாஞ்சே யார்?

அசாஞ்சே ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் பிறந்தவர். 48 வயதான கணினி புரோகிராமர் 2010 ஆம் ஆண்டில் உலகளவில் தலைப்புச் செய்திகளை வெளியிட்டார். விக்கிலீக்ஸ், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து பல மாதங்களாக ரகசிய தகவல்களை வெளியிட்டது.

இந்த வெளியீடுகள் இறுதியில் ஒபாமா நிர்வாகத்திற்கு பெரும் சங்கடமாக மாறியது. இதன் விளைவாக அசாஞ்சேவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டது.

ஹிலாரி கிளிண்டனின் பிரசாரம் மற்றும் ஜனநாயக தேசியக் குழுவில் இருந்த பல்லாயிரக் கணக்கானவர்களின் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டு விக்கிலீக்ஸ் வெளியிட்டபோது, 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் அசாஞ்சே மீண்டும் உரையாடலின் புள்ளியாக மாறினார்.

சுவீடனில் அசாஞ்சேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

2010 இல், சுவீடனைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அசாஞ்சே மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினர். அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பிறகு மிண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்றது. இந்த விசாரணை அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்கு இருந்தாலும் கைது செய்யலாம் என்று உத்தரவு பிறப்பிக்க வழிவகுத்தது. சுவீடன் தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று அஞ்சிய அசாஞ்சே, 2012 இல் ஈக்வடார் ஜனாதிபதியாக இருந்த இடதுசாரி அரசியல்வாதி ரஃபேல் கொரியா மூலம் இங்கிலாந்தில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் பெற்றார்.

ஏப்ரல் 2019 இல் பிரிட்டிஷ் காவல்துறையினர் அசாஞ்சேவை ஈக்வடார் தூதரகத்தில் இருந்து கைது செய்ய முடிந்தது. ஈக்வடார் ஜனாதிபதி கொரியாவுக்கு பதிலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான லெனான் மோரேனோ மாற்றப்பட்டார். அசாஞ்சே கைது செய்யப்பட்ட பின்னர் சுவீடன் வழக்கறிஞர்கள் அசாஞ்சேவுக்கு எதிரான ஒரு பாலியல் குற்ற வழக்கை மீண்டும் திறந்தார்கள்.

இருப்பினும், அந்த வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை தாங்கள் அந்த விசாரணையை கைவிடுவதாகக் கூறினர். கிட்டத்தட்ட பத்தாண்டு காலத்தைக் கடந்து செல்லும் இந்த வழக்கில் அசாஞ்சேவை குற்றம்சாட்ட போதுமான இல்லை என்று அவர்கள் காரணம் கூறினார்கள். வழக்கறிஞர்களின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்றாலும் விசாரணையை கைவிடுவது அநேகமாக வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும்.

ஆரம்பத்தில் இருந்தே, அசாஞ்சே இந்த குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை என்றும் சுவீடனில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் என்றும் கூறினார்.

அமெரிக்காவில் அசாஞ்சேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

2010 ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புத்துறை கணினிகளில் உள்ள ரகசியத் தகவல்களை அடைவதற்கு முன்னாள் ராணுவ புலனாய்வு ஆய்வாளர் செல்சியா மேனிங் உடன் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. செல்சியா மேனிங் பின்னர் பிராட்லி மேனிங் என்று அறியப்பட்டார்.

2013 ஆம் ஆண்டில் மேனிங் ஈராக்கில் உளவுத்துறை ஆய்வாளராக இருந்தபோது 700,000 ஆவணங்கள், வீடியோக்கள், இராஜதந்திர கேபிள்கள் மற்றும் போர்க்களக் கணக்குகளை விக்கிலீக்ஸுக்கு வழங்கியதாக அவருக்கு ராணுவ நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2017 ஆம் ஆண்டில் மானிங்குக்கு வழங்கப்பட்ட 35 ஆண்டு கால சிறைத் தண்டனையை குறைத்தார். ஆனால், ஒரு பெரிய நடுவர் மன்றத்தின் முன்பு சாட்சியமளிக்க மறுத்ததற்காக அவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள், செய்தியாக வெளியாகாத சம்பவங்களில் அமெரிக்காவால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதை நிறுவியதாகக் காணப்படுகிறது.

மே 2019 இல் ஈக்வடார் தூதரகத்தில் இருந்து அசாஞ்ச்சே அகற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்க நீதித்துறை அசாஞ்சே மீதான குற்றச்சாட்டை கணிசமாக விரிவுபடுத்தியது. 2010 இல் ராணுவ ரகசியங்கள் மற்றும் ராஜதந்திர ஆவணங்களைப் பெறுவதிலும் வெளியிடுவதிலும் அவர் வகித்த பங்கிற்காக உளவுச் சட்டத்தை மீறியதாக 17 குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

உளவு மற்றும் ஹேக்கிங் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அசாஞ்சேவை ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ஜூன் மாதம் பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் ஒரு உத்தரவில் கையெழுத்திட்டார்.

இப்போது என்ன நடக்கிறது?

இப்போது அசாஞ்சே அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்படைப்பு விசாரணைக்கு செல்வார்.

செவ்வாய்க்கிழமைக்கு முன்பு, சுவீடனும் அமெரிக்காவும் அசாஞ்சேவை ஒப்படைக்க உரிமைகோரி கோரி இருந்ததால், அவர்களுக்கு இடையில் இங்கிலாந்து ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால், இப்போது சுவீடன் அதிகாரிகள் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை கைவிட்டதால் பிரிட்டிஷ் நீதிமன்றங்களுக்கு இனி குழப்பம் இருக்காது.

ஒரு கீழ் நீதிமன்றம் அவரை ஒப்படைக்க உத்தரவிட்டால், அசாஞ்சே மனித உரிமை மீறல் அல்லது சட்ட விதிகளின் அடிப்படையில் அவர் எதிர்ப்பை அடையாளம் காட்ட முடியுமானால், அவர் லண்டன் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

அசாஞ்சே அங்கே ஏற்கெனவே அதிக அளவில் மோசமாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், அமெரிக்காவில் ஒரு நியாயமான விசாரணை சாத்தியமற்றது என்று அவர் வாதிடலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Sweden abandoned trial on rape case against julian assange what happens now

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X