Advertisment

விரைவான டெலிவரிக்காக அதிக வேகம்; ஊழியர்கள் மீது சென்னை காவல்துறை எடுத்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுவது ஏன்?

விரைவாக டெலிவரி செய்ய சொல்லும் நிறுவனங்களால் போக்குவரத்து விதிகளை மீறும் ஊழியர்கள்; சென்னை காவல்துறை அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுவது ஏன்?

author-image
WebDesk
New Update
விரைவான டெலிவரிக்காக அதிக வேகம்; ஊழியர்கள் மீது சென்னை காவல்துறை எடுத்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுவது ஏன்?

Soumyarendra Barik

Advertisment

As speed in delivery becomes focus, why action taken by Chennai police against executives assumes significance: மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுகளை முடிந்தவரை விரைவாக வழங்க டெலிவரி நிறுவனங்கள் முயற்சிப்பதால், பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. இந்த கவலைகளின் அடிப்படையில், சென்னை போக்குவரத்து காவல்துறை மார்ச் 30 அன்று ஒரு சிறப்பு அமலாக்க சோதனையை நடத்தியது, அதில் சிக்னல் மீறல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக Swiggy, Zomato, Dunzo, Amazon போன்ற தளங்களில் பணிபுரியும் 970 க்கும் மேற்பட்ட டெலிவரி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தது.

சட்டமியற்றுபவர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் டெலிவரி செய்பவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை சுட்டிக் காட்டும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் துறை இந்த அவசர டெலிவரியின் காரணமாக செய்யப்படும் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது மட்டுமல்லாமல், இப்போது அதனால் ஏற்படும் பாதுகாப்பு கவலைகள் குறித்த தரவுகளையும் சேகரித்துள்ளது.

சென்னை காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

காவல்துறையின் அறிக்கையின்படி, பல்வேறு விதிமீறல்களுக்காக 978 டெலிவரி நிர்வாகிகளுக்கு ரூ.1,35,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், 450 டெலிவரி பணியாளர்கள் Swiggy நிறுவனத்திற்காகவும், 278 பேர் Zomato நிறுவனத்திற்காகவும், 188 பேர் Dunzo நிறுவனத்திற்காகவும் டெலிவரி செய்பவர்கள்.

டெலிவரி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுகிய கால டெலிவரியை உறுதி செய்வதால், டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், ஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்வதற்கான அவசரத்தில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, அவசரமாக வாகனம் ஓட்டுவதில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் காட்டும் தரவு எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இந்தியாவில் ஆப்ஸ் அடிப்படையிலான டெலிவரி நேரம் பொதுவாக 10 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை என பயனர்கள் தேர்ந்தெடுக்கும் சேவை மற்றும் தளங்களைப் பொறுத்து இருக்கும்.

இதையும் படியுங்கள்: விமான எரிபொருட்கள் விலையேற்றம்… டிக்கெட் விலை உயருமா?

நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான டெலிவரிகளை உறுதியளிக்கின்றன, இது டெலிவரி தொழிலாளர்களை விரைவாக ஓட்டுவதற்கு "அழுத்தம்" செய்கிறது என காவல்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை டெலிவரி செய்யும் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு அடிப்படையிலான ஊதிய அமைப்பை வழங்குகின்றன, இது அந்த தொழிலாளர்களை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதற்கு கட்டாயப்படுத்துவதாக உள்ளது எனவும் காவல்துறை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விரைவான டெலிவரி மாடல்களுக்கான எதிர்வினை என்ன?

கடந்த மாதம், Zomato 10 நிமிடங்களுக்குள் உணவை வழங்கத் தொடங்கும் என்று அறிவித்தபோது, ​​​​குறுகிய டெலிவரி கால அளவு, ஏற்கனவே அதிக வேலை செய்யும் டெலிவரி நபர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட அவர்களைத் தூண்டுகிறது என்ற கவலையை பங்குதாரர்கள் எழுப்பியதால், அது கடுமையான பின்னடைவைக் கண்டது.

தெலுங்கானா முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள், Zomato தனது டெலிவரி தொழிலாளர்களை "மனிதர்களாக" பார்க்க வேண்டும் என்றும், ஒரு அல்காரிதத்தை நிர்வகிப்பதற்கான "தரவு புள்ளிகளாக" பார்க்கக்கூடாது என்றும் கூறியுள்ளன. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் போன்ற சட்டமியற்றுபவர்களும், டெலிவரி செய்யும் பணியாளர்களுக்குக் குறுகிய கால டெலிவரி கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம், இது அவர்கள் அவசரமாக வாகனம் ஓட்டுவதற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், விரைவான டெலிவரியை முடிக்க, தொழிலாளர்கள் சராசரியாக மணிக்கு 20 கிமீ வேகத்தில் 3 முதல் 6 நிமிடங்கள் வரை பயணம் செய்வார்கள் என்று Zomato தெரிவித்துள்ளது.

Zomatoக்கு முன், Blinkit மற்றும் Zepto போன்ற ஸ்டார்ட்அப்கள் நாட்டில் 10 நிமிட டெலிவரி திட்டத்தை பிரபலப்படுத்தின. Blinkit இருப்பு கடைகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், தொழிலாளர்கள் "10 நிமிடங்களுக்குள் ஆர்டர்களை வழங்க போக்குவரத்து விதிகளை மீறத் தேவையில்லை" என Blinkit முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியிருந்தது.

Zepto இன் இணை நிறுவனர் Aadit Palicha, இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு உரையாடலின் போது, ​​ஒரு மில்லியன் ஆர்டர்களை வழங்கும்போது, மிகக் குறைவாக அதாவது "தசமங்களில்" (1%க்கும் குறைவாக) அதன் தொழிலாளர்களுக்கு "லேசான காயம்" ஏற்பட்டதாகக் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Explained Swiggy Zomato
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment