Advertisment

சிரியாவில் நடக்கும் நிகழ்வுகள்: கிளர்ச்சியாளர்களின் வரலாறு குறித்து புது டெல்லி எச்சரிக்கை

14 ஆண்டுகளில், சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆஸாத்தின் அடக்குமுறை தீயை அணைந்து உள்நாட்டுப் போர் உறைந்துள்ளது. இனி வரும் வாரங்களில் புதிய ஆட்சி எவ்வாறு நகர்கிறது என்பது குறித்து புது தில்லி கவனமாக கண்காணிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Syria Explained

சிரிய அதிபர் பஷர் அல்-ஆஸாத்தின் வெளியேற்றம் டமாஸ்கஸின் வீதிகளில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் புது தில்லி உள்ளிட்ட தலைநகரங்கள் இது குறித்து தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Why New Delhi is cautious about events in Syria: history of rebels, to their geography

 

Advertisment
Advertisement

2000 ஆம் ஆண்டில் இருந்து நாட்டை ஆட்சி செய்த ஆஸாத், நேற்றைய தினம் சிரியாவை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு முதன்மை காரணமாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சியாளர்கள் படை அமைந்தது.

ஆஸாத் மீது அதிருப்தி

அஸாத்தின் ஆட்சிக்கு எதிரான கோபம் அரபு உலகில் வித்தியாசமானது. தனது 35-வது வயதில் ஆஸாத் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார். கடந்த 2009-ஆம் ஆண்டு CNN செய்தி நிறுவனம், அவரை "மிகப் பிரபலமான" அரசியல் தலைவர் எனக் கூறியது. இதில் 68 சதவீத அரபியேர்கள் அவருக்கு வாக்களித்தனர். ஆஸாத் கண் மருத்துவராக பயிற்சி பெற்றவர். மேலும், உணவகம் போன்ற பொது இடங்களில் அவர் மக்களை சந்தித்து பேசும் அணுகுமுறை கொண்டிருந்தார்.

அவரது ஆட்சிக்கு எதிரான கூச்சல் உள்ளூர் பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து ஜனநாயக சீர்திருத்தங்கள் வரை பரந்த அளவில் பரவியது. 

ஆனால், ஆட்சியை எதிர்ப்பவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு ஆஸாத் அதை அடக்கி வைத்தார். இது ஒரு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. அமெரிக்கா கிளர்ச்சியாளர்களை ஆதரித்தது. ரஷ்யா, ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லா ஆகியவை ஆசாத்தை ஆதரித்தன.

உண்மையில், உள்ளூர் சிரியப் போர் உலகளாவிய மோதலின் அரங்காகக் காணப்பட்டது.

சிரியாவின் சில பகுதிகளை இஸ்லாமிய அமைப்பு கைப்பற்றியபோதும், கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவரது சொந்த மக்கள் மீது ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஆஸாத்தின் ஆட்சி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கிளர்ச்சி படைக்கு ஆதரவாக நிகழ்ந்த மாற்றம்

இந்த ஆண்டு ஏப்ரலில், கிளர்ச்சி படை தலைவர் அபு முஹம்மது அல்-ஜவ்லானி ("அல்-ஜோலானி" என்றும் உச்சரிக்கப்படுகிறது) - தனது படையினரிடம், "கடவுள் விரும்பினால், நாம் விரைவில் அலெப்போ மற்றும் டமாஸ்கஸில் ஈத் அல்-பித்ரைக் கொண்டாடுவோம். ." எனக் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களில், சிரியாவின் மூன்று முக்கிய கூட்டாளிகளான - ரஷ்யா, ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லா - திசைதிருப்பப்பட்டன அல்லது பலவீனமடைந்துள்ளன. இது கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு புதிய திறப்பை வழங்கியதாக புதுதில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

உக்ரைனில் ரஷ்யா போரிடுவது, ஈரான் இஸ்ரேலுடன் மோதலில் சிக்கியது, மற்றும் ஹெஸ்பொல்லா கடந்த மூன்று மாதங்களில் பலவீனமான அடியை அனுபவித்ததால், ஆஸாத்தின் இராணுவம் தன்னந்தனியாக இருந்தது. கிளர்ச்சி குழுக்களுக்கு எதிராக சில முக்கிய நகரங்களை பாதுகாக்க முடியவில்லை. 

கிளர்ச்சி படை அதன் தற்போதைய மற்றும் எதிர்கால போக்கை வடிவமைக்கும் சரித்திர வரலாற்றைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் இன்ஸ்டிட்யூட்டில் மூத்த அதிகாரியும், சிரியாவின் அதிகாரியுமான ஆரோன் ஒய். ஜெலின், கிளர்ச்சியாளர்களை அவர்களின் சித்தாந்தத்தால் "அரசியல் ஜிஹாதிகள்" எனக் குறிப்பிடுகிறார்.

உலகின் பிற பகுதிகளின் கண்ணோட்டம்

கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை இனி வரும் நாள்களில் புது டெல்லி தீவிரமாக கண்காணிக்கும்.

தெற்கு பகுதி வல்லுநர்கள், கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியா எவ்வாறு விரைவாக குழப்பத்தில் சிக்கியது என்பதை நினைவு கூர்ந்தனர். எகிப்தில் எப்படி முஸ்லிம் சகோதரத்துவம் ஆட்சியை பிடித்தது எனவும், ஆஸாத்துக்குப் பிறகு சிரியாவில் விளைவு எப்படி இருக்கும் என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது.

வெளிநாட்டில் உள்ள சிரியாவின் பிரதான எதிர்ப்புக் குழுவின் தலைவரான ஹடி அல்-பஹ்ரா (சிரிய புரட்சிகர மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கான கூட்டணி என்று அழைக்கப்படுகிறது) ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் டமாஸ்கஸ் இப்போது "பஷர் அல்-ஆஸாத் இல்லாமல்" உள்ளது என்று கூறினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சிரிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில், கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று டமாஸ்கஸை "விடுவித்துவிட்டதாகவும்" "கொடுங்கோலன் அல்-ஆஸாத்தை" தூக்கியெறிந்ததாகவும் கூறியதுடன், சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த  கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தது.

கிளர்ச்சியாளர்கள் அமைப்பு சிறுபான்மையினரின் அச்சத்தை தணிக்க இதுவரை முயற்சித்துள்ளது. நவம்பர் 29 அன்று, அலெப்போவை கையகப்படுத்திய பிறகு, "முதல் முன்னுரிமை பொதுமக்களின் உடைமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பது; அனைத்துப் பிரிவினரின் அச்சத்தை அமைதிப்படுத்துவதும் ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டது.

"சிரியா ஒரு நிர்வாக அமைப்புக்கு தகுதியானது; ஒரு ஆட்சியாளரும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதில்லை," என்று கடந்த வாரம் CNN-இடம் கிளர்ச்சி படை தலைவர் கூறினார். "வார்த்தைகளால் மதிப்பிடாதீர்கள், ஆனால் செயல்களால் மதிப்பிடுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை பார்ப்பது போல் - புது தில்லி மற்றும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்கள் இந்தச் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

 

Shubhajit Roy 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Syria War
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment