சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ் தொடக்க பங்கு வெளியீடு (ஐபிஓ), ரூ.840 கோடி மதிப்பிலான பொது வெளியீட்டிற்கான நான்கு நாட்கள் சந்தா இன்றுடன் முடிவடைகிறது. சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ் ஐபிஓ சந்தா நிலையின்படி, ஏலத்தின் 4 ஆம் நாளான இன்று பிற்பகல் 12:34 மணிக்குள், பொதுப் பங்கு (Public offer) 4.64 முறைக்கு அதிகமாக ஏலம் எடுத்தனர்.
அதேசமயம் அதன் சில்லறைப் பகுதி 3.80 மடங்கு வர்த்தகமாகிறது. இதற்கிடையில், சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ் பங்கு விலை கடந்த 24 மணி நேரத்தில் சந்தையில் கிட்டத்தட்ட நிலையாக வர்த்தகமாகிறது. முன்னதாக இந்தப் பங்குகளின் முகமதிப்பு ரூ.36 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பங்குகள் எதிர்பார்த்த அளவை விட அதிகமாக விற்பனையாகியுள்ளன. முதலீட்டாளர்கள் பெருமளவு இதில் முதலீடு செய்துள்ளனர்.
சிர்மாவின் நிதி எண்கள் எப்படி இருக்கும்?
மார்ச் 2021 இல் முடிவடைந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், FY22 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 43% அதிகரித்து ரூ.1,267 கோடியாக இருந்தது. மார்ச் 2022 இல் நிறுவனத்தின் நிகர லாபம் 17% அதிகரித்து ரூ.76.46 கோடியாக இருந்தது.
சிர்மா என்ன தயாரிக்கிறது?
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) க்கு நிறுவனம் தாக்கல் செய்த தகவலின்படி, Syrma தற்போது 5G தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கான தொகுதிகள் தயாரிப்பை மேற்கொள்கிறது. நிறுவனம் 2007 இல் வாகன இறுதிப் பயன்பாட்டுத் துறையில் நுழைந்தது.
அதன் பின்னர் 2009 இல் வாகன கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சுங்கக் கட்டண மேலாண்மை அமைப்புகளையும், 2012 இல் வாகனங்களுக்கான பீக்கான்களையும் தயாரித்துள்ளது. “எலக்ட்ரிக் வாகனங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, நாங்கள் கட்டுப்படுத்திகளின் உற்பத்தியையும் தொடங்கியது.
இந்நிறுவனம் தற்போது ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மொத்தம் 11 உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது. இது மூன்று பிரத்யேக R&D வசதிகளையும் கொண்டுள்ளது.
அவற்றில் இரண்டு சென்னை, குர்கானிலும் ஒன்று ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் அமைந்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ராபர்ட் போஷ் இன்ஜினியரிங் மற்றும் பிசினஸ் சொல்யூஷன், யுரேகா ஃபோர்ப்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்களை அதன் வாடிக்கையாளர்களில் இது கணக்கிடுகிறது.
ஐபிஓ, சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜிஸ் ஐபிஓ: சாத்தியமான அபாயங்கள் என்ன?
ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸில் (RHP), Syrma தனது வணிகத்திற்கான முக்கிய சவால்களில் ஒன்று, அதன் வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு “ரத்து அல்லது மாற்றங்கள் எங்கள் நிதி நிலை, பணப்புழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளின் முடிவுகளை மோசமாக பாதிக்கலாம்” என்று சிர்மா கூறினார்.
மற்றொரு ஆபத்து நிறுவனம் உற்பத்தி மற்றும் தரமான தரத்தை கடைபிடிக்கும் போது அதிக செலவுகளை செய்கிறது. சிர்மா எஸ்ஜிஎஸ் சென்னயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் பங்கு விற்பனை மூலம் ரூ.840 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil