Advertisment

தாஜ்மஹால் சிவன் கோயிலா? தேஜோ மஹாலயா கோட்பாடு சொல்வது என்ன?

பல ஆண்டுகளாக, பல பாஜக தலைவர்கள் தாஜ்மஹால் உண்மையில் ஷாஜஹானின் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்ட ஒரு இந்து கோவில் என்கிற கூற்றை முன்வைக்கின்றனர். தேஜோ மஹாலயா கோட்பாடு குறித்த விரிவான அலசலை இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தாஜ்மஹால் சிவன் கோயிலா? தேஜோ மஹாலயா கோட்பாடு சொல்வது என்ன?

தாஜ்மஹால் உண்மையான வரலாற்றை கண்டறிய, அங்கு பூட்டி வைக்கப்பட்டிருக்கும் 20 அறைகள் திறக்க உத்தரவிடக்கோரி பாஜக தலைவர் ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் மே 12 அன்று தள்ளுபடி செய்தது.

Advertisment

அதற்கு ஒரு நாள் முன்பு, ராஜஸ்தானில் ராஜ்சமந்தின் பாஜக எம்பியும், ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்ப உறுப்பினருமான தியா குமாரி, தாஜ்மஹால் இருக்கும் நிலம் தனது முன்னோர்களுக்குச் சொந்தமானது என்றும், அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டால் வழங்கவோம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக, பல பாஜக தலைவர்கள் தாஜ்மஹால் உண்மையில் ஷாஜஹானின் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்ட ஒரு இந்து கோயில் என்கிற கூற்றை முன்வைக்கின்றனர். 2017 ஆம் ஆண்டில், அப்போதைய பாஜக ராஜ்யசபா உறுப்பினர் வினய் கட்டியார், இந்த நினைவுச்சின்னம் உண்மையில் "தேஜோ மஹாலயா" என்று பெயரிடப்பட்ட சிவன் கோயில் என்றும், இது இந்து ஆட்சியாளரால் முதலில் கட்டப்பட்டது என்றும் கூறினார்.

தேஜோ மஹாலயா கூற்றை, முதன்முதலாக 1989 இல் வரலாற்றாசிரியர் பி என் ஓக் என்பவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது கூற்றை நிலைநாட்ட பல முயற்சிகள் மேற்கொண்டார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இவ்வழக்கை 2000 ஆம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், Bee in his bonnet என கமெண்ட் செய்தது. அதாவது, ஒருவர் எதையாவது மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருப்பார் என்பதே பொருள் ஆகும்.

தாஜ்மஹால்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக ஐ.நா.வின் யுனெஸ்கோ பதிவு செய்திருக்கிறது. முகலாய பேரரசர் ஷாஜகானின் உத்தரவின் பேரில் 1632 மற்றும் 1648 க்கு இடையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

இது, இந்தோ-இஸ்லாமிய மற்றும் தைமுரிய கட்டிடக்கலை கலவையில் உருவானதால், டெல்லியில் உள்ள ஹுமாயூனின் கல்லறை போன்ற பழைய நினைவுச்சின்னங்களிலின் கட்டக்கலையில் இருந்து முன்னேற்றம் அடைந்திருந்தது.

பிரமாண்டமான வெள்ளை பளிங்கு கல்லறை ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 305 மீட்டர் மற்றும் 549 மீட்டர் அளவுள்ள சுவர்களுக்குள் சூழப்பட்ட வடிவியல் கட்டங்களின் வரிசையுடன் கட்டப்பட்ட ஒரு பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாகும்.

ஒரு மசூதி, விருந்தினர் மாளிகை, பிரதான நுழைவாயில்,வெளிப்புற முற்றம் போன்ற கட்டமைப்புகள் கட்டப்பட்ட பின்னர் 1653 இல் இந்த வளாகம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. தாஜ்மஹால் மொகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் இறந்த பிறகு அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். ஷாஜகானும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்

ஷாஜகானின் மும்தாஜ் மீதான காதலை விடவும், முகலாயப் பேரரசின் அதிகாரம் மற்றும் மகிமையின் பிரகடனத்தை விடவும் ஷாஜகானின் லட்சிய நினைவுச்சின்னமாக இருக்கலாம்என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

சமாதியின் வெளிப்புறம் செவ்வக பேனல்கள், பதிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களின் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சமாதி நிற்கும் மேடையின் நான்கு மூலைகளிலும் மினாராக்கள் உள்ளன, கல்லறைக்கு தெற்கே உள்ள தோட்டம், நீர்வழிகளால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மற்றும் இந்தியக் கலையின் வரலாற்றாசிரியரான கேத்தரின் ஆஷரின் கூற்றுப்படி, குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கத்தின் நீரோடைகளை ஒத்திருக்கிறது. இந்த தோட்டம் முகலாயர்கள் ஏற்றுக்கொண்ட சொர்க்கத்தின் தோட்டம் என்ற பண்டைய பாரசீகக் கருத்தை முன்மாதிரியாகக் கொண்டது என கூறப்படுகிறது.

தேஜோ மஹாலயா கோட்பாடு என்ன?

இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான நிறுவனத்தின் எழுத்தாளரும் நிறுவனருமான பி என் ஓக், முஸ்லீம் ஆட்சியாளர்களின் நினைவுச்சின்னங்கள் உண்மையில் இந்து தோற்றம் கொண்டவை என்று நம்பினார்.

1976 இல், அவர் 'லக்னோவின் இமாம்பரங்கள் இந்து அரண்மனைகள்' என்ற புத்தகத்தையும், 'டெல்லியின் செங்கோட்டை இந்து லால்கோட' என்ற புத்தகத்தையும் எழுதினார். பின்னர் 1996ல் ‘இஸ்லாமிக் ஹேவோக் இன் இந்தியன் ஹிஸ்டரி’என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இதற்கிடையில், 1989 இல் ஓக் எழுதிய 'தாஜ்மஹால்: தி ட்ரூ ஸ்டோரி' என்கிற புத்தகம், தற்போதைய தாஜ்மஹால் சர்ச்சையில் பின்னணியில் உள்ளது.

ஷாஜகானின் தாஜ்மஹால் உண்மையில் சிவபெருமானுக்குரிய ஒரு இந்து கோவில் என்றும், ராஜா பரமர்தி தேவ் என்பவரால் 4ஆம் நூற்றாண்டில் ஒரு அரண்மனையாகக் கட்டப்பட்டதாகவும் ஓக் கூறுகிறார்.

முகலாயர்களின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தாஜ்மஹால் கட்டப்பட்டது மட்டுமின்றி தாஜ்மஹால் என்பது பண்டைய இந்து பெயரான தேஜோ மஹாலயாவின் தவறான உச்சரிப்பு என்பதையும் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தாக கூறினார்.

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் மீது முஹம்மது கோரியின் படையெடுப்பின் போது "தேஜோ மஹாலயா" அழிக்கப்பட்டது. அடுத்து மொகலாய பேரரசர் ஹுமாயூன் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோற்கடிக்கப்பட்டபோது, இந்த சொத்து ஜெய்ப்பூர் அரசு குடும்பம் வசம் சென்றது. அதனை, மூத்த முகலாய மன்சப்தார் மற்றும் அம்பர் ராஜாவாக இருந்த ஜெய் சிங் நிர்வகித்து வந்தார்.

ஓக்கின் கூற்றுப்படி, கோயிலை கையகப்படுத்திய ஷாஜகான், அதனை கல்லறையாக மாற்றி தாஜ்மஹால் என பெயரிட்டதாக கூறப்படுகிறது.

நாட்டின் உண்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை ஓக் நாடினார். ஆனால், அதில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. பிடிஐ ரிப்போர்ட் படி, 2000 ஆம் ஆண்டு இந்த மனுவை தவறான கருத்துடையது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இன்றும் வாழும் ஓக்கின் கோட்பாடு

ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஓக் தாஜ்மஹாலின் "சீல் செய்யப்பட்ட அறைகளை" திறக்க வேண்டும் என்று கோரியிருந்தார்

அவர், சீல் செய்யப்பட்ட அறைகளில் அது தொடர்பான சான்றுகள் மறைக்கப்பட்டுள்ளதாக நம்பினார். அதில், சமஸ்கிருத கல்வெட்டுகள், இந்து சிலைகள், புனித நூல்கள், ஷாஜகானுக்கு முந்தைய ஆட்சியின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாணயங்கள் கொண்டிருக்கலாம் என கருதினார்.

உச்ச நீதிமன்றத்தில் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, கி.பி 1212 இல், ராஜா பரமர்தி தேவ் தேஜோ மஹாலயா கோவில் அரண்மனையைகட்டியதாகப் பல வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளது. இந்த கோவில் பின்னர் ஜெய்ப்பூரின் அப்போதைய மகாராஜா ராஜா மான் சிங்கால் பெறப்பட்டது. அவருக்குப் பிறகு ராஜா ஜெய் சிங்கால் நிர்வகிக்கப்பட்டது. ஷாஜஹான் இதனை 1632இல் பெற்று, மனைவியின் நினைவுச் சின்னமாக மாற்றி தாஜ்மஹால் என பெயரிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டிலும் ஆக்ராவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் இதேபோன்ற ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாஜ்மஹால் இந்து கோயில் என்றும், அங்கு தரிசனம், ஆரத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஓக்கின் கோட்பாடு எந்த வரலாற்று அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. அதேசமயம், சில வரலாற்றாசிரியர்கள் தாஜ்மஹால் இருக்கும் நிலம் உண்மையில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

அக்பரால் பயன்படுத்தப்பட்ட ஆக்ரா கோட்டையிலிருந்து ஆற்றின் குறுக்கே யமுனைக்கு அருகே இருந்த இந்த நிலம், ஷாஜஹானால் ஜெய் சிங்கிடம் இருந்து பெறப்பட்டது என்ற கூற்றும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment