எல்லையில் பிடிபட்டவர் சீன உளவாளியா? விசாரணை அதிகாரிகள் கூறுவது என்ன?

Chinese national Han Junwe Arrested In Bengal Barder : இந்தியா வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட சீன நாட்டை சேர்ந்த நபர் உளவாளியா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

India Bengaladesh Barder Issue : இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பங்களாதேஷுடன் 2,216.7 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது, இதில் பெரும்பகுதி பாதுகாப்பற்றதாக உள்ள நிலையில், சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்திற்குள் நுழைய முயற்சிக்கும் பங்களாதேஷியர்களை எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) கைது செய்வது பொதுவாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக 36 வயதான சீன நாட்டைச் சேர்ந்த ஹான் ஜுன்வே, இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறியுள்ள பி.எஸ்.எஃப் அதிகாரிகள்  ஹானை விசாரணை வலையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

சீனவை சேர்ந்த நபர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது எப்படி?

மால்டா மாவட்டத்தின் பார்டர் அவுட் போஸ்ட் மாலிக் சுல்தான்பூரில் ஹான் பி.எஸ்.எஃப் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச எல்லையைத் தாண்டி, வந்த அவர்,  பி.எஸ்.எஃப் சவால் விடும் வகையில் ஓடத் தொடங்கினார். அவரை துரத்தி பிடித்த பி.எஸ்.எஃப் அதிகாரிகள் விசாரணைக்காக  பார்டர் அவுட் போஸ்ட் மொஹாதிபூருக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

பிடிபட்ட நபரிடம் இருந்து என்னென்ன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது?

எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் கருவிகளின் ஒரு பொருள், ஆப்பிள் லேப்டாப் மற்றும் இரண்டு ஐபோன்கள், இரண்டு சீன சிம்கள், ஒரு பங்களாதேஷ் மற்றும் ஒரு இந்திய சிம், இரண்டு பென்டிரைவ்கள்,  இரண்டு சிறிய டார்ச்லைட்கள், மூன்று பேட்டரிகள், ஐந்து பண பரிவர்த்தனை இயந்திரங்கள், இரண்டு மாஸ்டர்கார்டு ஏடிஎம் கார்டுகள், சில அமெரிக்க டாலர்கள், பங்களாதேஷ் தக்கா மற்றும் இந்திய ரூபாயையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

ஹான் ஜுன்வே ஒரு சீன உளவாளியா?

கைது செய்யப்பட்ட ஹான் ஜுன்வேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “அவர் நன்கு பயிற்சி பெற்றவர்”, சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர், அவர் எடுத்துச் சென்ற மின்னணு சாதனங்களை வைத்து பார்க்கும்போது, அவர் ஒரு சீன நிறுவனத்தில் பணியாற்றும் உளவாளியாக இருப்பதற்கான அதிக  வாய்ப்பு உள்ளது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் தனது பாஸ்போர்ட்டில் பங்களாதேஷ், மற்றும் நேபாளம் நாடுகளுக்கான விசா வைத்திருந்தார். இதில் வங்காளதேசம் மேற்குவங்கம் இடையே எல்லையில் பாதுகாப்பற்ற பகுதி அதிகம் உள்ளது என்பதால்,  பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் நுழைவது அவருக்கு எளிதாக இருக்கும் என்று ஹான் முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இதனால் தான் “அவருக்கு நேபாளத்திற்கு விசா இருந்தும் பங்களாதேஷுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு சில வகையான இணைய மோசடிகளை விட பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றியது என்பதை விசாரணை மூலம் தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் நுழைந்து அவர் தன்னை நிலைநிறுத்த முயன்றார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் நிறைய உள்ளன. மேலும் அவர் ஏற்கனவே லக்னோவில் உள்ள ஏ.டி.எஸ்ஸின் ரேடாரில் இருந்தவர் என்று  ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்த விசாரணை தொடர்பான அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹான், பி.எஸ்.எஃப் விசாரணையாளர்களை சிறிய சைபர் குற்றங்களைச் செய்வதற்காக இந்தியாவில் இருப்பதாக நிறுவப்பட்ட தகவல்களை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களைத் தடமறிய முயன்றார். இருப்பினும், அவரது அறிக்கைகளில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது ஏன் முக்கியமானது?

ஹான் தான் வர்த்தகத்திற்காக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறினார். ஆனாலும் அவருடைய உண்மையான நோக்கங்கள் மிகவும் மோசமானவை என்று தோன்றுகிறது. விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, அவருக்கு பி.எல்.ஏ உடன் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது, இந்தியாவிலும் நேபாளத்திலும் நக்சல்களைப் பற்றி அவருக்கு நன்கு தெரிந்துள்ளது  மேலும் சந்தேகத்திற்கிடமான சில வங்கி ஆவணங்களும் ஹான் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  பி.எஸ்.எஃப் கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பி.எஸ்.எஃப் அவரைத் துரத்தத் தொடங்கியவுடன் அவர் அவர்களைத் தூக்கி எறிந்ததாக ஒரு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஹான் கிட்டத்தட்ட 1,300 இந்திய சிம்களை சீனாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அரசாங்க வலைத்தளங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய வணிகங்களுக்கு எதிராக சைபர் தாக்குதலை நடத்துவதற்கான முயற்சியில் அவர் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பி.எஸ்.எஃப் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இந்தியா வந்திருந்தால், இந்த நேரத்தில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

ஹான் இதற்கு முன்னர் பல முறை இந்தியா சென்றுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் எடுத்துச் சென்ற பாஸ்போர்ட்டில் பங்களாதேஷின் ஒரே ஒரு முத்திரை மட்டுமே இருந்தது  இதனால் அவர் முந்தைய வருகைகளில் வேறு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவரது இந்தியா பயணத்தின் நோக்கம் இன்னும் நிறுவப்படவில்லை. விசாரணையில் ஹான் இங்கே (இந்தியாவில்) வணிகத்தில் இருந்தார்” என்று கூறி வருகிறார். அவரை ஏற்கனவே பி.எஸ்.எஃப், என்.ஐ.ஏ மற்றும் மால்டா போலீசார் விசாரித்தனர். தற்போது மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில் அவர் இங்கு வியாபாரத்திற்காக வரவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று விசாரணைக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறினார். வங்காள எஸ்.டி.எஃப் அவரை விசாரித்த பின்னர், ஹானின் காவலை உ.பி. ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil chinese national han junwe was apprehended in bengal barder

Next Story
வழக்கு விசாரணைகளில் இருந்து நீதிபதிகள் தங்களை எப்படி விலக்கிக் கொள்கிறார்கள்? ஏன்?How judges recuse from cases, and why
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X