Corona News Updates : இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சர்வதேச நாடுகள் இந்திய பயணங்களை ரத்து செய்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவை ‘ட்ராவல் ரெட் லிஸ்ட்’ல் வைத்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சி.டி.சி, அமெரிக்க அரசாங்கத்துக்கு ஒரு ஆலோசனையை வழங்கியது. அதன் படி, அமெரிக்கர்கள் இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஹாங்காங் அரசு இன்று முதல், அடுத்த 14 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களையும் தடை செய்துள்ளது. நியூசிலாந்து அரசும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே இந்தியாவுக்கு பயணிகள் செல்ல தடை விதித்தது.
இந்தியாவுக்குள் சென்று வர உலக நாடுகள் கட்டுப்பாடு விதிப்பது ஏன்?
இந்தியாவில், முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் 103 பேர் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் மேல் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, சிவப்பு பட்டியலில் சேர்த்தது. அதே போல, ஹாங்காங் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா மீது, இரண்டு வார விமானத் தடையை விதித்தது.
உருமாறிய கொரோனா ஒருபுறமிருக்க, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலின் எண்ணிக்கையையும் உலக நாடுகள் கவனித்து வருகின்றன. அமெரிக்காவின் சி.டி.சி யின் கூற்றுப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையானது, மூன்றாவது கட்டத்திலிருந்து 4-ம் கட்டத்துக்கு சென்றுள்ளதை உலக நாடுகளுக்கு உணர்த்துகிறது. தொற்றுப் பரவல் நிலையின் இறுதி நிலையை இந்தியா எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, இந்தியாவில் 20,31,977 பேர் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருக்கின்றனர். தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது, கடந்த 24 மணி நேரத்தில் 1,02,648 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இந்தியா இருப்பது ஏன்?
இங்கிலாந்து அரசாங்க விதிமுறைகளின் படி, ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு முன்னதாக நீங்கள் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு வந்திருந்தால்,அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளவும், தனிமைப்படுத்துதலின் இரண்டாம் நாளில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல், முந்தைய 10 நாட்களில் இந்தியாவில் இருந்தவர்கள், இங்கிலாந்து குடிமக்கள் அல்லாது, பிரிட்டிஷ், ஐரிஷ் அல்லது வேறு பிற நாடுகளைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே, அவர்கள் இங்கிலாந்தில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்தியா குறித்து அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாட்டு மையம் சொல்வது என்ன?
இந்தியாவில் தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளதன் காரணமாக, முழுமையான தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கூட, கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்துகள் ஏற்படக்கூடும். இதனால், அமெரிக்கர்கள் இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது. மேலும், அமெரிக்கர்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயணத்திற்கு முன் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், அனைத்து பயணிகளும் முகக் கவசங்களை தவறாமல் அணியவும் வலியுறுத்துகிறது. மேலும், ஆறு அடி சமூக இடைவெளி இருக்க வேண்டும் எனவும், கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும் மற்றும் கைகளை கழுவ வேண்டும் என்பனவற்றை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து பயண அனுமதிகள் தற்போது கிடைக்குமா?
தற்போதைய நிலவரப்படி, ஏர் இந்தியா, விஸ்டாரா, யுனைடெட், பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள், இந்தியாவுக்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கும் விமான சேவையை வழங்கி வருகின்றன. அவை, இந்தியாவின் முக்கிய பகுதிகளான டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நிலையங்களை, அந்த நாடுகளோடு இணைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil