ஆடு- புலி ஆட்டம்: இபிஎஸ்- ஓபிஎஸ் பலம்- பலவீனம் என்ன?

இ.பி.எஸ் ஒரு முதல்வராக ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதியாகவும், அதிகாரத்துவத்தின் ரொம்ப மோசமில்லாத நிர்வாகியாகவும் உண்மையில் அரசாங்க நிர்வாகத்தை நடத்தும் தமிழகத்தின் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த தொண்டராகவும் உருவெடுத்துள்ளார்.

Arun Janardhanan

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அக்டோபர் 7 ம் தேதி ஆளும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இடையே கட்சியில் உருவாகி வரும் மோதலால் இந்த அறிவிப்பு இப்போது இந்த அறிவிப்பு இப்போது தாமதமாகலாம் என்று கருதப்படுகிறது.

அதிமுக நெருக்கடிக்கு காரணம் என்ன?

இந்த நெருக்கடி அதிமுகவில் அக்கட்சியின் தலைவர் ஜெயலலித டிசம்பர், 2016ம் ஆண்டு மறைந்த பிறகு தொடங்கியது. அதிமுக தலைவர்களுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த சுரங்கத் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடமிருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வருமானவரித் துறை நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்தது அக்கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

பல அரசியல்வாதிகள் மத்தியில், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக வதந்தி பரப்பப்பட்டது. ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது அலுவலகம் பற்றிய குறிப்புகள் பற்றி ஒரு ஆதாரம் இருந்ததாக பலரும் நம்புகிறார்கள். இது ஓ.பி.எஸ்-ஐ அதிமுகவில் கிளர்ச்சியை நடத்தவும் அதிமுக-வைப் பிரிக்கவும் பிரிக்கவும்  நிர்பந்தப்படுத்தியது என்று பலரும் நம்புகின்றனர்.

விரைவில், ஓ.பி.எஸ் தனது முதல்வர் பதவியை இழந்தார். சசிகலா விசுவாசியான எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு மத்திய விசாரணை முகமைகள் வைத்த குற்றச்சாட்டுகளை இபிஎஸ் எதிர்கொள்ள நேரிட்டது.

இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் ஆகஸ்ட் 2017 இல் இணைந்த பிறகு, அப்போதைய அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவும் அவரது அண்ணன் மகன் டிடிவி தினகரனும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு உருவான நிகழ்வுகளை முடிவு செய்வதில் பாஜகவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறப்பட்டது. மத்திய விசாரணை முகமைகளைப் பயன்படுத்தி ஒரு மாநில அரசாங்கத்தை தகர்க்கவும், சீர்குலைக்கவும் முயற்சிப்பதாக பாஜக மீது குற்றம் சாட்டப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நிகழ்வுகளை முடிவு செய்து அதில் பங்கு வகித்தவர்கள் இப்போது சக்திவாய்ந்த திமுகவை தோற்கடிக்க வரவிருக்கும் பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ள அதிகபட்ச பலத்தைத் திரட்ட வேண்டியுள்ளது. இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இணைந்த அதிமுகவின் கூட்டணியில் பாஜகவும் உள்ளது. சசிகலா அணியை மீண்டும் ஆளும் கட்சியுடன் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. அதிமுக கட்டமைப்பில் அதிக இடத்தையும் அதிகாரத்தையும் விரும்பும் ஓ.பி.எஸ் முகாமில் இருந்து இப்போது ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது.

ஓ.பி.எஸ்  – இ.பி.எஸ் எவ்வளவு சக்திவாய்ந்தவர்கள்?

கட்சியில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கி, ஒரு ‘தர்ம யுதம்’ ஒன்றை நடத்தியதிலிருந்து கட்சித் தலைவர் சசிகலாவுக்கு எதிராக, ஓ.பி.எஸ் ஒரு செல்வாக்கைப் பெற்றதாகத் தெரிகிறது. ஏனென்றால், மறைந்த ஜெயலலிதா சம்பந்தப்பட்ட ஊழலில் அவருடைய பங்குக்காக அவரது புகழ் குறைந்திருந்தது. ஆனால், ஓ.பி.எஸ் தனக்கான ஆதரவைத் திரட்டத் தவறியதால் ஓ.பி.எஸ்-இன் தார்மீக அரசியல் செல்வாக்கால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை.

ஓ.பி.எஸ் முதலில் அதிமுகவில் அதிருப்தி தெரிவித்தபோது 12 அல்லது 13 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்-க்கு துணை முதல்வர் பதவியும், அவருடைய மற்றொரு ஆதரவு எம்.எல்.ஏ-வான மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சரவை பதவியும் கிடைத்தது. எனினும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் இப்போது தனது முகாமில் ஐந்து எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துள்ளார். அதே நேரத்தில், பாண்டியராஜன் உட்பட பல தலைவர்கள் ஓ.பி.எஸ் அணியில் ஆதரவாளர்களாக நீடிக்கவில்லை.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்-ஐ  பலமாகவும் பலவீனமாகவும் மாற்றுவது எது?

ஓ.பி.எஸ் தனது வலிமையை உறுதிப்படுத்த எதுவும் இல்லை.

தேர்தலுக்கு முன்பு சசிகலா அதிமுகவில் சேருவதாக வதந்திகளால் ஓ.பி.எஸ் இப்போது தனது அரசியல் எதிர்காலத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவர் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களை சந்திப்பதில் மும்முரமாக இருந்தார். தமிழ்நாட்டிலிருந்து அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யும் தனது மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் உட்பட தனது சக்திவாய்ந்த குடும்பத்தை பாதுகாக்கும் சுமையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு ஆதரவாக சென்னையில் சிபிஐ, நீதிமன்றத்தில் கடந்த வாரம் 2016ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பாக சுரங்க தொழிலதிபர் ரெட்டிக்கு எதிராக வழக்குத் தொடரக்கூடிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

ஆனால், இபிஎஸ் தொடர்ந்து கவனமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார். அவரது மூத்த அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆதாரங்கள் அவரைத் தண்டிக்கும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இல்லாவிட்டாலும், கைது நடவடிக்கைகள் அல்லது குற்றப்பத்திரிகையில் அவருடைய பெயரைக் குறிப்பிடுவது கடுமையான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். அதிமுகவில் அவரது கேள்வியில்லாத பலம் மற்றும் அணிகள் இணைப்பிற்குப் பிறகு கட்சியையும் அரசாங்கத்தையும் நடத்துவதில் அவரது வெற்றிகரமான பாணி அவரது பலங்களாக வெளிப்படையாகத் தெரிகிறது.

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-இன் பல நெருங்கிய ஆதரவாளர்கள் கூறும் ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் இருவரும் ஒருபோதும் செய்ய விரும்பாத பல விஷயங்களைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள்.

இ.பி.எஸ்-ஸின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், “அவரது சேயல்பாடு, முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்வது அல்லது சசிகலாவை வெளியேற்றுவது அல்லது தினகரனை எதிர்த்து தேர்தலில் போராடுவது – இவை அனைத்தும் கட்சியைத் தக்கவைக்க அவர் கடைப்பிடிக்கும் ஒரு அரசியல் உத்தி. அப்படி செய்யாவிட்டால், அதிமுக சரிந்திருக்கும். இ.பி.எஸ்-க்கு ஒரு எதிரி இருந்தால், அது அரசியல் ரீதியாக திமுகவும் பாஜகவாகவும்தான் இருக்கும். சசிகலா ஒருபோதும் அவர் சண்டையிடத் தேர்ந்தெடுத்த எதிரி அல்ல” என்று அவர் கூறினார்.

அக் 7 க்கு முன்பு என்ன நடக்கும்?

கட்சியில் மட்டுப்படுத்தப்பட்ட பலத்துடன் உள்ள ஓ.பி.எஸ் கட்சி முன் எழுப்பிய ஒரே தெளிவான கோரிக்கை, ஒரு வழிநடத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்பதுதான். இ.பி.எஸ்-ஸைப் பொறுத்தவரை, இந்த கோரிக்கையை புறக்கணிக்க அவருக்கு பலமும் பெரும்பான்மையும் உள்ளது.

ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை தனியாக சந்திக்கத் தொடங்கினார். அவர் கடந்த வாரம் இ.பி.எஸ் உடனான சந்திப்பைத் தவிர்த்ததால் பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது வழிநடத்தும் குழுவை அமைப்பதன் மூலமாகவோ இ.பி.எஸ் ஓ.பி.எஸ்-ஐ நம்பவைக்க முயற்சிப்பார் என்று தெரிகிறது. இது கடந்த காலங்களில் அதிமுக கேள்விப்படாதது.

அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக கட்சி அறிவித்துள்ளது. அதற்குள் ஒருமித்த கருத்து இல்லை என்றால், அக்டோபர் 7 ம் தேதி கூட்டத்தை ஓ.பி.எஸ் தவிர்க்கக்கூடும்.

எனவே, முதல்வர் இ.பி.எஸ் தனது அதிகாரத்தைக் காண்பிப்பதற்குப் பதிலாக ஓ.பி.எஸ்-ஸையும் நம்பிக்கையுடன் எடுத்துச் செல்வதன் மூலம் அவர் தனது அரசியல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான மற்றொரு சந்தர்ப்பமாக இது இருக்கும் என்று தெளிவாகத் தெரிகிறது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu assembly elections who is cm candidate aiadmk crisis edappadi k palaniswami o panneerselvam

Next Story
அடுத்த ஜூலைக்குள் 25 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசிCovid-19 vaccine tracker Oct 5 India hopes to vaccinate 20-25 crore people by July next year
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express