Advertisment

மருத்துவக் கல்லூரி முறைகேடு: விஜிலன்ஸ் விசாரணை வளையத்தில் இ.பி.எஸ் சிக்கியது எப்படி?

கடந்த அக்டோபரில் அ.தி.மு.க அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி, சமூக ஆர்வலர் என் ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன

author-image
WebDesk
New Update
eps

எடப்பாடி பழனிச்சாமி (கோப்பு படம்)

Arun Janardhanan

Advertisment

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை விசாரிக்க விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கு (DVAC) தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலர் ஏற்கனவே பல்வேறு ஊழல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரடியாக குறிவைத்துள்ள இந்த விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.

குற்றச்சாட்டுகள் எப்படி வெளிப்பட்டன

கடந்த அக்டோபரில் அ.தி.மு.க அரசின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி, சமூகச் செயற்பாட்டாளர் என் ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. திட்டத்தில் இருந்து சொத்து குவித்தாக புகார் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி, அப்போதைய சுகாதாரத் துறைச் செயலர் ஜே. ராதாகிருஷ்ணன், கட்டிடங்களின் முன்னாள் முதன்மை தலைமைப் பொறியாளர் ராஜமோகன், தேசிய மருத்துவக் கவுன்சில் செயலர் ஆர்.கே.வட்ஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் சி.பி.ஐ விசாரணை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரினார்.

இதையும் படியுங்கள்: அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை கண்காணிக்க விண்வெளிக்கு கருவி அனுப்பிய நாசா; ஏன் இது முக்கியம்?

பின்னர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் புகாரில் முதன்மை ஆதாரம் இருப்பதாக DVAC நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் 2019 மற்றும் 2020 க்கு இடையில் நடந்ததாகக் கூறப்படுகின்றன.

DVAC விசாரணை தொடக்கம்

DVAC உயர் அதிகாரி ஒருவர், குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றார். "நாங்கள் ஆரம்பத்தில் விரிவான விசாரணை நடத்துவோம், மேலும் அந்த விசாரணை அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்," என்று அந்த அதிகாரி கூறினார்.

கடந்த ஆண்டு ராஜசேகரன் எழுப்பிய மனு மற்றும் குற்றச்சாட்டுகளின் பங்கு குறித்து தெளிவுபடுத்தாத அந்த அதிகாரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 11 மருத்துவக் கல்லூரி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். இந்த திட்டங்களுக்கு மாநில அரசு (40%) மற்றும் மத்திய அரசு (60%) நிதியளித்தன.

விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுகளில் கட்டுமானத்தில் முறைகேடுகள், அசல் திட்டத்திற்கும் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள முரண்பாடுகள் மற்றும் தரமற்ற வேலை ஆகியவை அடங்கும். உதாரணமாக, ராமநாதபுரத்தில் 1,176,778 சதுர அடியில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட டெண்டர் விடப்பட்ட நிலையில், 999,296 சதுர அடியில் சிறிய அளவில் மட்டுமே கட்டுமானப் பணிகள் நடைபெற்றன என்பது குற்றச்சாட்டுகளில் ஒன்று. ரூபாய் 52 கோடியை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குவித்ததாக கூறப்படுகிறது.

திட்டங்களின் அளவைக் குறைப்பது போன்ற குற்றச்சாட்டுகள் DVAC ஆல் விசாரிக்கப்படும். மேலும், அ.தி.மு.க அரசும், அதிகாரிகளும், முந்தைய ஆட்சியில் உயர்மட்ட அமைச்சர்களுடன் தொடர்புடைய சில ஒப்பந்ததாரர்கள் உட்பட, ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் ஈட்ட, விகிதாச்சாரத்தில் அதிக தொகைக்கு டெண்டர்களை ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் DVAC ஆல் விசாரிக்கப்படும்.

சுகாதாரத்துறை அமைச்சராக இல்லாத இ.பி.எஸ்-ஐ சமீபத்திய விசாரணையின் மையமாக வைத்திருப்பதற்கான காரணம் கட்டிடங்கள் கட்டப்பட்டபோது அவருக்குக் கீழ் இருந்த பொதுப்பணித் துறையின் பங்குதான்.

ஜனவரி 2022 இல், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.4,080 கோடி.

விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர்கள்

இ.பி.எஸ் அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு டஜன் வழக்குகளின் பட்டியலில், மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதில் ஊழல் குற்றச்சாட்டுகள் சமீபத்தியவை. இந்த வழக்குகளில் இதுவரை ஒரு குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்பதை உயர் அதிகாரிகள் உறுதி செய்யும் அதே வேளையில், தி.மு.க ஆட்சியின் முதல் 6 மாதங்களில் 6 முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான வழக்குகள் ஊழல், வரம்பு மீறிய சொத்துக்கள், பல நூறு கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதில் நடந்த மீறல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

2021 ஜூலையில், அறியப்பட்ட வருமான ஆதாரங்களுக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறப்படும் முதல் இலக்கு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதும் ஊழல் புகார்கள் விசாரணை நடைபெற்று வருகிறது.

3.5 கோடி மதிப்பிலான வேலை மோசடியில் செந்தில் பாலாஜிக்கு நேரடிப் பங்கு இருப்பதாக புகார் உள்ள நிலையில், வீரமணி 28.78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சம்பாதித்ததாகவும், 2016-ஆம் ஆண்டுக்கு முன் தனது கணக்குச் சேமிப்பில் இருந்து 654% வருமானம் அதிகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.27 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2014 முதல் 2018 வரை வேலுமணியுடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனங்களுக்கு அதிமுக அரசு ஒதுக்கிய ரூ.811 கோடி மதிப்பிலான டெண்டர்களில் ஊழல் நடந்ததாக முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வேலுமணி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment