Advertisment

24 மொழிகளில் ரீமேக்; பாராட்டுகளை குவிக்கும் 'பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்'

2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறிய பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஏற்கனவே 24 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Jan 09, 2023 16:20 IST
24 மொழிகளில் ரீமேக்; பாராட்டுகளை குவிக்கும் 'பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்'

இத்தாலிய மொழியில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாக பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் என்ற காமெடி திரைப்படம் உலகளவில் 20க்கு மேற்பட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் ஐஸ்லாண்டிங் ரீமேக்கான வில்லிஃபேரோ கடந்த ஜனவரி 6-ந் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதன் அடுத்த பாகம் (டேனிஷ் பதிப்பு) 2023-ம் ஆண்டு பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திரைப்படம் ஏற்கனவே சீனம், கொரியன், கிரேக்கம், ஸ்பானிஷ், துருக்கியம், மெக்சிகன், பிரெஞ்ச், ஆர்மேனியன், ரஷ்யன் மற்றும் ஹங்கேரிய மொழிகளில் 24 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய காலங்களில் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படங்களில் பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் முன்னிலையில் உள்ளது.

உலகளவில், இந்த படம் $30 மில்லியன் டாலர் வசூலித்துள்ள நிலையில் இந்த படத்தின் கன்னட ரீமேக் லவுட் ஸ்பீக்கர் என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. சிவ தேஜாஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். எச்.ஜி தத்தாத்ரேயா, விஜய் ஈஸ்வர் மற்றும் திஷா தினகரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்தனர். இத்தனை மொழிகளிலல் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?

போலோ ஜெனோவிஸ் (Paolo Genovese) இயக்கிய மற்றும் பெர்ஃபெட்டி ஸ்கோனோசியூட்டி (Perfetti Sconosciuti)  என்ற நகைச்சுவை-நாடகத் திரைப்படம், குழந்தை பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்த ஏழு பேரைச் சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஒருநாள்மாலையில் தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து இரவு நேர உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் தங்கள் செல்போன்களுடன் கேம் விளையாட முடிவு செய்கிறார்கள். இதில் அவர்கள் தங்கள் நட்பின் ஆழத்தை வலுப்படுத்தும் விதமாக, தங்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடக செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டத்தை அவர்கள் சரியாக செயல்படுத்தும்போது ஒவ்வொருவரின் “ரகசியங்கள் வெளிவருகின்றன. இவ்வாறு நடக்கும்போது ஒவ்வொரு முறையும் யாருடைய ஃபோன் பிங் அல்லது ரிங் அடிக்கும் போது, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. ஏனென்றால் இங்க இருக்கும் அனைவருக்கும் மறைமுகமான சில பக்கங்கள் இருக்கிறது. அதனால் படம் இருக்கத்தானே செய்யும்.

விமர்சகர்களால் பாராட்டப்பட்ட பெர்ஃபெட்டி ஸ்கோனோசியூட்டி

பெர்ஃபெட்டி ஸ்கோனோசியூட்டி திரைப்படம் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுக்களை பெற்றது. நகைச்சுவை மற்றும் வலுவான விழிப்புணர்வுடன் திரைக்கதை அமைக்கப்பட்டது தான் இதற்கு முக்கிய காரணம். இணையத்தின் சக்தி மற்றும் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிர்வதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய மக்களின் மோதல்களை வெளிச்சம்போட்டு காட்டியது இந்த படம். நேர்மையின் கருப்பொருள்கள் மற்றும் உறவுகளின் வலிமை ஆகிய முக்கிய செயல்களை உணர்த்திய பெர்ஃபெட்டி ஸ்கோனோசியூட்டி 2016-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இத்தாலிய திரைப்படமாகும்.

மேலும் இத்திரைப்படம் டேவிட் டி டொனாடெல்லோ விருதுகளில் சிறந்த திரைப்பட விருது, நார்வேஜியன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் (பார்வையாளர் விருது) மற்றும் டிரிபெகா திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை (சர்வதேச கதைப் போட்டி) என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு டேவிட் டி டொனாடெல்லோ விருதுகளில் சிறந்த திரைக்கதை, ஒலி, நடிகர், நடிகை, இயக்குனர் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிற்காகவும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

ரீமெக் மற்றும் தழுவலுக்கு ஏற்ற கதை

பெர்ஃபெட்டி ஸ்கோனோசியூட்டி (Perfetti Sconosciuti)  பல நாடுகளில் உள்ள சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. இருப்பினும் சில முக்கிய கருப்பொருள்கள் மற்றும் செய்திகள் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக பல ரீமேக்குகளில் இப்படம் தோல்வியடைந்ததாக சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே சமயம் முக்கிய ரீமேக்குகளின் தலைப்புகள் வெவ்வேறு திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை எவ்வாறு அணுகினர் என்பதற்கான குறிப்பை வழங்குகின்றன.

இது துருக்கியில் ஸ்ட்ரேஞ்சர்  இன் மை பாக்கெட் (Stranger in my Pocket) நத்திங் டூ ஹைடு இன் பிரான்ஸ் ( Nothing to Hide in France), கில் மொபைல் இன் சைனா ( Kill Mobile in China), இன்டிமேட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் இன் சௌத் கொரியா (Intimate Strangers in South Korea), அன்நோன் சப்ஸ்கிரைஃபர் அர்மேனியா ( Unknown Subscriber in Armenia), பெர்ஃபெக்ட் சீக்ரெட் இன் ஜெர்மனி (Perfect Secret) என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பு இல்லாமல் தலைப்புகள், ஹங்கேரிய பதிப்பில் பெய்க் (Buek) ரஷ்ய மொழியில் க்ரோம்கயா சயாஸ் (Gromkaya Sayaz),  போலிஷ் மொழியில் நியோ ஸ்னஞ்ஜோமி (Nie)znajomi மற்றும் ஜப்பானிய மொழியில் ஓட்டோனா நோ ஜோஜூ ஸ்மார்ட்போன் வோ நசொய்டாரா (Otona no Jijou: Smartphone wo Nozoitara) என்ற பெயரில் வெளியானது.

இந்திய ரீமேக்

இந்தியாவில் லவ்டு ஸ்பீக்கர் படம் 2018 இல் வெளியானது. நவீன வாழ்க்கையில் சமூக ஊடகங்களின் பரவலைப் பற்றிய இயக்குனர் சிவ தேஜாஸின் கவலைகளால் படத்தில் இருந்தத,. முக்கிய வேடங்களில் புதுமுகங்கள் நடித்தனர் மற்றும் இந்திய சூழலுக்கு ஏற்றவாறு திரைக்கதை மாற்றப்பட்டது. வசனம் எழுதிய விஜய் ஈஸ்வர் படம் முழுக்க நகைச்சுவை உணர்வு குறையாமல் பார்த்துக்கொண்டதாக பாராட்டப்பட்டார்.

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment