ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம்: கலங்க வைத்த காவல்துறை அத்துமீறல்

ஒரு ஆட்டோ டிரைவர் மூலம் ஜெயராஜின் விமர்சனங்கள் காவல்துறையினருக்கு சென்றடைய, மறுநாள் ஜெயராஜ் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பாட்டர்.

Arun Janardhanan

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இந்த வார தொடக்கத்தில், தந்தை மகன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்தனர். அவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு பொது மக்களின் போராட்டம் வெடித்தது.

தொடர் நிகழ்வுகள்:  சாத்தான்குளம் நகரில் உள்ள தனது மொபைல் கடையில் பணிபுரிந்த பி.ஜெயராஜ் (62) ஜூன் 19 மாலை காவலில் வைக்கப்பட்டார்.

ஊரடங்கு காலத்தில், கடைகளை முன்கூட்டியே மூடவேண்டும் என்ற காவல்துறையின் நிர்பந்தம்  தொடர்பாக, ஜூன் 18 அன்று ஒரு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குறித்து ஜெயராஜ் சில விமர்சனங்களை முன்வைத்ததாக அறியப்படுகிறது.      ஒரு ஆட்டோ டிரைவர் மூலம் ஜெயராஜின் விமர்சனங்கள் காவல்துறையினருக்கு சென்றடைந்திருக்கிறது. மறுநாள்,   ஜெயராஜ் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பாட்டர். தகவல் அறிந்த பென்னிங்க்ஸ், உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில், உடல் ரீதியாக தனது தந்தை துன்புறுத்தப்படுவதைக்  கண்ட பென்னிங்க்ஸ் சற்றே பதட்டமடைந்தார். 60 வயது நிரம்பிய தனது தந்தையை காப்பாற்ற பென்னிங்க்ஸ்  உரக்கமாக  காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார்.  தந்தையை காப்பாற்ற நினைத்த பென்னிங்க்ஸ்  அதிகாரியை நிறுத்த முயன்றார், அப்போது அந்த அதிகாரி கீழே விழுந்திருக்கிறார். பென்னிங்க்ஸின்  இந்த செயல்பாடு காவல்துறையினரை தூண்டியது. தந்தை, மகன் இருவரையும் மணிக்கணக்கில் அடித்து சித்தரவதை செய்தனர். இரண்டு சார் ஆய்வாளர், இரண்டு கான்ஸ்டபிள் இந்த சித்தரவதை செயல்களில்  ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின்போது, பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் உள்ளிட்ட  13 காவல்துறையினர் காவல் நிலையத்தில் இருந்தனர்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜெயராஜின் குற்றம்  நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

அடுத்த நாள் என்ன நடந்தது?

ஜூன் 20.

ஜூன் 19ம் தேதி நள்ளிரவு வரை ஜெயராஜின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் வெளியே காத்திருந்தனர். எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், மறுநாள் காலையில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் இருவரையும் போசமான கோலத்தில் கண்டு கலங்கி நின்றனர்.  

சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயராஜ்- பென்னிக்ஸ் உடைகள் ரத்தம் படிந்திருந்தது. அதிகளவு இரத்த வெளியேற்றம் காரணமாக மருத்துவமனையில்  இருவரின் உடைகள் அடிக்கடி மாற்றப்பட்டிருந்தது. ரத்தப்படிவம்   தெரியாத அடர்த்தியான வேஷ்டியை வாங்கி வருமாறு  குடும்பத்தினரை காவல்துறை கேட்டுக்கொண்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் இருவரும் மூன்று மணி நேரம் கழித்து, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் நின்று மாஜிஸ்திரேட், கீழே நின்று கொண்டிருந்த காவல் துறையினர் பார்த்து தனது கையை அசைத்ததாக ஜெயராஜின் மைத்துனர் ஜோசப் கூறினார். இருவரும் சில நிமிடங்களில் கோவில்பட்டி கிளை சிறைக்கு ரிமாண்டில் அனுப்பப்பட்டனர்.

கோவில்பட்டி சிறையில் அனுமதிக்கப்பட்ட ஜெயராஜ்- பென்னிக்ஸ் இருவரும், பின்  அவசர அவசரமாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . ஜூன் 22 மாலை வரை, இவர்கள் இருவரைப்  பற்றிய எந்த செய்தியும் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை.

தொடர்ச்சியான இரத்தம் வெளியேற்றம், மற்றும் தொடர்ச்சியான சித்தரவதையால் பென்னிக்ஸ் ஜூன் 22 அன்று மாலை உயிர் இழந்தார். ஜூன் 23 அதிகாலை அவரின் தந்தை ஜெயராஜ் மரணமடைந்தார்.

காவல்துறை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ஜெயராஜ்- பென்னிக்ஸ் லாக்- அப் மரணம் தொடர்பாக, இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தவறு செய்த காவக்துறை அதிகாரிகள் மீது இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பொது மக்களிடயே ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து, இரண்டு துணை ஆய்வாளர்கள் உட்பட நான்கு காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நிலைய ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதி விசாரணை நடந்து வருகிறது. சீல் வைக்கப்பட்ட கவரில் பிரேத பரிசோதனை அறிக்கை ரகசியமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. காவல்துறையினரின் அறிக்கைக்காக நீதிமன்றம் காத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ .20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது. திமுக  தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குடும்பத்திற்கு ரூ .25 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

வகுப்புவாதம் உள்ளதா?

ஜெயராஜின் குடும்பத்தார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நேரில் பார்த்த ஐ-விட்னஸ்,ஜெயராஜின் குடும்ப உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் இந்த வழக்கில் நேரடி வகுப்புவாத தன்மையைக்  கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கின்றன.

காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமான பழிவாங்கல் உணர்ச்சியின் வெளிப்பாடாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழக காவல்துறையில் அதிகமாக உள்ளதா?

வரலாற்று ரீதியாக, தமிழக காவல்துறை மூன்றாம் தர சித்திரவதை முறைகளுக்கு பெயர் போனது. பல தசாப்தங்களாக இத்தகைய சித்ரவதை இயல்பாக்கப்பட்ட நடைமுறை என்று  மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் நீதித்துறையும் தோல்வியடைந்ததா?

காவல்துறை  சித்திரவதை என்பது ஒரு புதிய அதிகாரக் கட்டமைப்பின் விளைவாக பொது முடக்கத்திற்குப் பிறகு வடிவம் பெற்றுள்ளது என்று நீதிபதி சந்துரு கூறினார். கொரோனா பெருந்தொற்று ஊரடங்கை உயர்நீதிமன்றம் தேசிய நெருக்கடி நிலை – அவசரகால பிரகடனத்தோடு ஒப்பிடுவதால், காவல்துறை அதிகாரிகள் அதிகார மையத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அது மாஜிஸ்திரேட்டிற்கு தவறான புரிதலை உருவாக்குகிறது. அவர்களின் இந்திய குடிமகன் ஒருவனின் அடிப்படை உரிமையைக் கூட அவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

நீதிபதி சந்துரு “முழு அதிகாரமும் இப்போது காவல்துறை மற்றும் அதிகார மையங்களின் கைகளில் உள்ளது. தற்போதைய நிலைமை என்னவென்றால் எதிர்க்கட்சித் தலைவர்கூட தனது வீட்டு வாசலில்மட்டும்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியும். இருப்பினும், நாடார் போன்ற ஒரு சக்திவாய்ந்த வர்த்தக சமூகத்தின் ஆதரவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்புக்களைத் தூண்டியது. ஆனால், இதே போன்ற மீறல்கள் நடந்து கொண்டிருக்கலாம்… நீதிமன்றம் கூட இங்கு உதவவில்லை” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close