Targeting Big Tech in US, EU : ஐரோப்பிய யூனியனில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாட்டினை வரையறை செய்யும் வகையில் இரண்டு சட்டங்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்டங்கள் மூலம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பல பில்லியன் டாலர் மதிப்பில் அபராதம் விதிக்க முடியும். புதிய விதிமுறைகளுக்கு இணங்க தவறினால் அவை உடைந்து போகவும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்க கூட்டாட்சி அரசு கூகுள் மற்றும் முகநூல் நிறுவனங்களுக்கு எதிராக ஆண்டிட்ரெஸ்ட் வழக்குகளை ஆரம்பித்துள்ளது. அமெரிக்க மாகாணங்களில் இருக்கும் பெரும்பான்மை தலைவர்கள் ஒன்றிணைந்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடமிருந்து ஒருங்கிணைந்த தாக்குதல் பிக் டெக்கின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் சிறு சிறு முயற்சிகளின் ஒட்டுமொத்த பதிலாக காணப்படுகிறது, ஆனால் இப்போது அது நிர்வகிக்கும் போட்டிக் கொள்கையில் துறையின் தீர்க்கமான மாற்றத்தைக் குறிப்பிடுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள் என்ன?
டிஜிட்டல் சேவைகள் சட்டம், மற்றும் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் என இரண்டு சட்டங்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ளன.
பயனாளர்கள் ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்தவும், கருத்து சுதந்தைரத்தை பாதுகாக்கவும், தொழில்நுட்ப நிறுவனங்களை அதற்கு பொறுப்பேற்கும் வகையிலும் வைக்க உருவாக்கப்பட்டது டிஜிட்டல் செர்வீஸஸ் ஆக்ட். நெகிழ் அளவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அளவுகளின் கீழ் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய கடமைகளை ஏற்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உயர்மட்ட கொள்கை அமைப்பான ஐரோப்பிய கமிஷன் கூறும் புதிய கொள்கைகள் கீழ் சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்துடன் அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய வருடாந்திர ஆய்வையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.
அதிகபட்ச அபராதங்கள் : ஒரு நிறுவனத்தின் வருடாந்திர வருமானத்தில் 6% வரை இணங்க மறுத்தலுக்கான அச்சுறுத்தல் மற்றும் முறிவுகளுக்காக கட்ட வேண்டிய நிலை உருவாகும். முகநூல் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டால் அது 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சில வணிகங்களை தொடர்ச்சியான மீறல்கள் மூலம் திசை திருப்ப முடியும். அங்கு இணக்கத்தை உறுதிப்படுத்த வேறு சமமான பயனுள்ள மாற்று நடவடிக்கைகளும் இல்லை.
இரண்டாவது சட்டம் டிஜிட்டல் மார்க்கெட்ஸ் ஆட்க், இது தேடல் தளம், சமூக வலைதள பின்னல்கள், சாட்டிங் ஆப்கள், க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றின் கேட் கீப்பர்களை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. கூகுள், முகநூல், ஆப்பிள், அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களும் இதில் அடங்கும்.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
கடந்த வாரம் டெக்ஸாஸ் மற்றும் இதர் 9 மாகாணங்கள், சட்டத்திற்கு புறம்பான வகையில் கூகுள் முகநூல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த செயல்பாடு ஆண்ட்டி ட்ரெஸ்ட் சட்டத்தை மீறியதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த செயல்பாடு ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் விளம்பரத்துறையை மேலும் உயர்த்த மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தனர். உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆன்லைன் விளம்பரத்துறையை கட்டுக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனம், ஏற்படுத்திய சேதங்களை ஈடுகட்ட வேண்டும் என்றும் ”கட்டமைப்பு நிவாரணம்” கோருவதாகவும் மாநிலங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. இதனால் அந்நிறுவனங்களின் சொத்துகள் சில திசை திருப்ப கட்டாயப்படுத்தக் கூடும்.
டெக்ஸாசின் புகார் கூகுளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டாவது பெரிய வழக்காகும். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மீறல்களை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாகாண அரசுகள் இணைந்து பதிவு செய்யப்பட்ட நான்காவது வழக்காகும். ஆனால் கூகுள் இந்த வழக்கு ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நடவடிக்கைகள் எப்படி வேறுபடுகின்றன?
ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, அமெரிக்கா கடந்த காலத்தின் மீறல்களுக்கு தண்டனைக்குரிய நடவடிக்கையை பரவலாக நாடுகிறது, அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை பரந்த அளவைக் கொண்டுள்ளது, மேலும் தெளிவாக முன்னோக்கி உள்ளது.
வெஸ்டேஜர் இரண்டு சட்டங்களையும் விவரித்தார். ஐரோப்பாவை டிஜிட்டல் உலகிற்கு ஏற்றவாறு மாற்றுவது எங்கள் பயணத்தின் மைல்கள் என்று அவர் கூறினார். குழப்பத்தை ஏற்படுத்தும் விதிகளை நாங்கள் உருவாக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் உள் சந்தை ஆணையம் தியரி பிரெட்டன், சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு விரைவாக பயன்பாட்டிற்கு வரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வர சில காலங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் வெற்றி பெறுமா?
ஐரோப்பிய யூனியனால் முன்மொழியப்பட்ட இரண்டு சட்டங்களும் மீண்டும் ஒரு ஆலோசன்னை செயல்முறைக்கு செல்ல வேண்டும். ஐரோப்பிய தலைவர்களால் மட்டுமே அதனை நிறைவேற்ற முடியும். அதற்கு சில ஆண்டுகளாகலாம். இங்கிலாந்து கட்டுப்பாட்டாளர் காம்பெட்டிசன் அண்ட் மார்க்கெட்ஸ் அத்தாரிட்டி இந்த மாதத்தில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை வரம்பிற்குள் கொண்டு வர சொந்த திட்டங்களை அதே நேரத்தில் அறிவித்தது. எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் பிரெக்ஸிட் மாற்றம் காலம் முடிந்த பின்னரே நடைமுறைக்கு வரும் .
அமெரிக்காவில், புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பெரும்பாலான வல்லுநர்கள் பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தூண்டுதல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட அமெரிக்காவில் மிகக் குறைவு தான் என்று நம்புகிறார்கள். ஏன் என்றால் கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்கள் தான்.
மேலும், சமீபத்திய மாதங்களில் வாஷிங்டனில் கொள்கை வட்டங்களுக்குள் அதிகரித்து வரும் பார்வை, சீனாவுடனான ஸ்லக்ஃபெஸ்ட்டில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க தொழில்நுட்பத் துறையை அட்வாண்டேஜ்ஜாக கருதுகின்றனர். இந்த கருத்து, சிலரின் கூற்றுப்படி, தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் வர்த்தகத்தின் கட்டுப்பாட்டிற்கும், பயனர்கள் படிக்கும் அல்லது பார்க்கும் விஷயங்களை கையாளும் திறனுக்கும் எதிரான முந்தைய இரு கட்சி விரோதத்தை இப்போது மறைக்கிறது என்கிறார்கள்.
கேள்விக்குறிய நிறுவனங்களை பொறுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் மாற்றங்களும் மாறுகின்றன. உதாரணத்திற்கு கூகுள் மீதான ஆண்ட்டி ட்ரஸ்ட் வழக்கில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆப்பிள் மற்றும் இதர செல்போன் உருவாக்கும் நிறுவனங்களுக்கு, அவர்கள் போன் திரைகளில் கூகுளின் சேவைகள் தெரிவதற்காக ஆல்பபெட் இங்க் நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அதிக திறனைக் கொண்டவையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் முகநூல் மீது வகைப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் திறன் சற்று குறைவானவையே. : இது போட்டியைத் தடுக்க சட்டவிரோதமாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை வாங்கியது. ஆனால் இரண்டு கையகப்படுத்துதல்களுக்கும் பேஸ்புக் ஒழுங்குமுறை அனுமதிகளை கோரியது, மேலும் இரண்டு நிறுவனங்களும் அவை வாங்கப்பட்டபோது சிறியதாக இருந்தன. 2012 ஆம் ஆண்டில், பேஸ்புக் இன்ஸ்டாகிராமிற்கு 1 பில்லியன் டாலர்களை வழங்கியபோது, இன்ஸ்டகிராமில் வெறும் 25 மில்லியன் பயனாளர்கள் மட்டுமே இருந்தனர். முகநூலை 2015ம் ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. மொபைல் மெசேஜிங் சேவையில் சிறந்து விளங்கிய போதும் வருவாயாக மற்றும் செயல்பாடுகள் இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆண்டுகளாகும். மைக்ரோசாஃப்ட் மீது 1998ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2004ம் ஆண்டு தான் தீர்ப்பு கிடைத்தது. தேடல் சந்தையில் கூகிள் தனது ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கடைசியாக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டது. அது நடைபெற கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அமெரிக்க போட்டி கட்டுப்பாட்டாளர் பெடரல் டிரேட் கமிஷன், 2011 இல், வாஷிங்டனை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற, மின்னணு தனியுரிமை தகவல் மையம் அளித்த புகாரின் அடிப்படையில் செயல்பட்டது.
ஒழுங்குமுறை இறுக்கத்தின் தாக்கத்தை சந்தைகள் குறைத்துவிட்டன. FAANG நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் - பேஸ்புக், ஆப்பிள், அமேசான், நெட்ஃபிக்ஸ் மற்றும் கூகிள் ஆகியவற்றின் பங்கு விலைகள் 2020 ஆம் ஆண்டில் 45 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன, இது கடந்த மூன்று ஆண்டுகளில் 75 சதவீத உயர்வுக்கு மேல்.
இந்தியாவில் ஏற்பட இருக்கும் விளைவு என்ன?
தெளிவானது என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகள் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் அவர்களின் சில நடைமுறைகளை மாற்றியமைக்க கட்டாயப்படுத்தக்கூடும், இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளையும் 450 மில்லியன் மக்களை தாண்டியும் இதன் தாக்கம் இருக்கும். குறைந்தபட்சம் நீண்ட காலத்திற்கு ஒரு சிறிய விளைவை இது உண்டாக்கலாம்.
ஏற்கனவே, இந்தியாவில், இந்த நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆய்வு அதிகரித்து வருகிறது.
நவம்பரில், காம்பெட்டிசன் கமிஷன் ஆஃப் இந்தியா, பணப்பரிவர்த்தனை செயலியான கூகுள் பேயின் சேவைகளை ஊக்குவிப்பதற்காக ஆதிக்கம் செலுத்தியது என்ற புகாரை விசாரணை செய்து வருகிறது. இது அந்நிறுவனத்திற்கு எதிராக உத்தரவிடப்பட்ட மூன்றாவது பெரிய ஆண்ட்டி ட்ரஸ்ட் விசாரணை ஆகும்.
முன்னதாக அக்டோபரில், ஆண்ட்ராய்டு-தொலைக்காட்சி சந்தையில் கூகுள் தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதாக சிசிஐக்கு அறிக்கைகள் கிடைத்தன, அவற்றின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதன் ஆண்ட்ராய்டு இயக்க முறைமைகளைப் பயன்படுத்த அல்லது மாற்ற விரும்பும் நிறுவனங்களுக்கு தடைகளை உருவாக்கியது.
ஜூன் 2019 இல், கூகுள் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்க நிலையை "துஷ்பிரயோகம் செய்துள்ளது" என்று சிசிஐ கூறியது. விரிவான விசாரணை தேவை என்றும் கூறியது.
2018ம் ஆண்டு, கூகுளின் தேடல் தளம் சார்புடையதாக இருக்கிறது என்று கூறி சி.சி.ஐ ரூ. 136 கோடி அபராதம் விதித்தது. சந்தையில் உள்ள மற்ற போட்டியாளர்களை விடவும், அதன் தேடல் முகப்புப்பக்கத்தில் அதன் விமான விருப்பத்திற்கு “தேவையற்ற” இடத்தை வழங்கியது. எவ்வாறாயினும், இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் கட்டுப்பாட்டாளரின் உத்தரவு நிறுத்தப்பட்டது.
மிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.