பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடாளுமன்றத்தில், Direct Tax Vivad se Vishwas என்ற நேரடி வரி - நம்பிக்கையின் மோதல் என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் துவக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியுள்ளனர்.
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மத்திய அரசு, கடந்த புதன்கிழமை ( பிப்ரவரி 6ம் தேதி) நாடாளுமன்றத்தில் Direct Tax Vivad se Vishwas என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்க துவங்கிவிட்டன. சட்ட மசோதாவின் பெயரே, இந்தியில் உள்ளது. இதன்மூலம் இந்தி மொழி பேசாத மக்களிடையே, இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது. மேலும், இந்த மசோதா, நேர்மையாக வரி கட்டுபவர்கள், வரி கட்ட தவறுவர்களை சமமாக பாவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Direct Tax Vivad se Vishwas மசோதா என்றால் என்ன?
நேரடி வரி விதிப்பு முறையில் உள்ள குளறுபடிகள், சர்ச்சைகள் உள்ளிட்டவைகளை விரைந்து எளிதில் கண்டறிந்து களைவதே, இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாக உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்ததாவது, தங்களுடைய முந்தைய அரசு, வரி தொடர்பான வழக்குகளை பெருமளவு குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, கடந்த பட்ஜெட்டில், மறைமுக வரி தொடர்பான வழக்குகளை குறைக்கும் பொருட்டு, Sabka Vishwas ( அனைவரையும் நம்புங்கள்) திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, 1,89,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. Sabka Vishwas திட்டத்தின் வெற்றியை தொடர்ந்தே, Vivad se Vishwas Scheme திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறைமுக வரி விதிப்பு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கைகளை Sabka Vishwas திட்டத்தின் மூலம் கணிசமாக அளவில் குறைத்ததை போல, Vivad se Vishwas திட்டத்தின் மூலம், நேரடி வரி விதிப்பு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஆணையாளர் (மேல்முறையீடு), ITAT, ,உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில், நேரடி வரி விதிப்பு தொடர்பாக 4,83,000 வழக்குகள் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Vivad se Vishwas சட்ட மசோதாவின் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?
வரி செலுத்துவோர், தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை, 2020 மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சட்ட மசோதாவின் கீழ் செலுத்தி வரிச்சலுகை உள்ளிட்ட இன்னபிற சலுகைகளை பெறலாம். 2020 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு வரி செலுத்தினால், அவர்கள் கூடுதல் பணத்தை செலுத்தவேண்டி வரும். ஆனால், இந்த திட்டம் 2020, ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இந்த சட்ட மசோதாவின் மூலம், வரி தொடர்பான வழக்குகள் எந்த கட்டத்தில் இருந்தாலும் அவர்கள் அந்த வழக்குகளை முடித்துக்கொள்ள வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடங்கியுள்ள பணம் எவ்வளவு?
ரூ.9 ஆயிரம் கோடிகள் மதிப்பிலான நேரடி வரி தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளது. வரி செலுத்துபவர்கள், இந்த வழக்கில் இருந்து எளிதில் விடுபடவதற்கான வழிமுறைகளை இந்த சட்டமசோதாவின் மூலம் பெற வழி ஏற்பட்டுள்ளது.
Sabka Vishwas திட்டம் வெற்றியா? வெற்றி எனில் அதன் நன்மைகள் என்ன?
மறைமுக வரி விதிப்பு தொடர்பான வழக்குகளை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு அறிவித்த Sabka Vishwas திட்டத்தின் மூலம், ரூ.39,500 கோடி வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. 2020 ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில், 1.90 லட்சம் கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதன்மூலம், ரூ.90 ஆயிரம் கோடி வருமானமாக வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mondelez India Foods Pvt Ltd ( முன்னதாக கேட்பரி இந்தியா நிறுவனம், ரூ.580 கோடிகள் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டநிலையில், இந்த பொதுமன்னிப்பு திட்டத்தின் மூலம் அந்நிறுவனத்திடமிருந்து ரூ.439 கோடிகள் பெறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு அரசின் பதில் என்ன?
Direct Tax Vivad Se Vishwas Bill என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதை ஆங்கிலத்தில் சர்ச்சைக்கு இடமில்லை ; நம்பிக்கை மட்டுமே பிரதானம் (No Dispute, But Only Trust) என்று தெரிவித்துள்ளார். இந்த சட்ட மசோதாவின் மூலம் இந்தியை திணிக்கும் என்பதில் எள்ளளவும் உண்மையில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.