Tax rebate under the new regime, explained with two examples, புதிய வரி முறையில் குழப்பம்; யாருக்கெல்லாம் விலக்கு கிடைக்கும்? | Indian Express Tamil

புதிய வரி முறையில் குழப்பம்; யாருக்கெல்லாம் விலக்கு கிடைக்கும்?

மத்திய பட்ஜெட் 2023: ரூ. 6-9 லட்சம் வருமான வரம்புக்கு பொருந்தக்கூடிய வரி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என நிதியமைச்சர் கூறினார். எனவே ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுமா இல்லையா?

புதிய வரி முறையில் குழப்பம்; யாருக்கெல்லாம் விலக்கு கிடைக்கும்?
பிப்ரவரி 1 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் போர்ட்டர்கள் 2023-24 மத்திய பட்ஜெட்டின் நேரடி ஒளிபரப்பை தங்கள் மொபைல் போன்களில் பார்க்கிறார்கள். (புகைப்படம்: PTI)

Sukalp Sharma

மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த முன்மொழிந்தார்.

2020 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்பு விருப்பத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள தனிநபர்கள் வருமான வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புதிய வரி முறையின் கீழ் வரி அடுக்குகளில் மாற்றங்களையும் அவர் அறிவித்தார். அதன்படி, 6-9 லட்சம் வருமான வரம்புக்கு பொருந்தக்கூடிய வரி விகிதம் 10 சதவீதமாக இருக்கும். இதனால் புதிய வருமான வரி விதிப்பின் கீழ் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுமா இல்லையா என்பதில் சில குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: பட்ஜெட் 2023: புதிய வரி முறை என்ன? உங்களுக்கு வருமான வரி தள்ளுபடி கிடைக்குமா?

இதிலிருந்து யார் சரியாகப் பயனடைகிறார்கள், எப்படி? நாங்கள் விளக்குகிறோம்

எளிமையாகச் சொன்னால், புதிய வரி விதிப்பின் கீழ் ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தால் பயனடைவார்கள், ஏனெனில் அவர்களின் வரிப் பொறுப்பில் 100 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். மறுபுறம், 7 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் புதிய வரி விதிப்பு முறையின் படி வரி செலுத்த வேண்டும். ஏனென்றால், பூஜ்ஜிய வரிச் சலுகை என்பது தள்ளுபடி தான், விலக்கு அல்ல, மேலும் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதை உதாரணங்களுடன் விளக்குவோம். Mr A-க்கு ஆண்டுக்கு ரூ.6,99,000 வரி விதிக்கக்கூடிய வருமானம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். 2023-24 நிதியாண்டிற்கு தனிப்பட்ட வருமான வரி எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் Mr A இன்று மகிழ்ச்சியான மனிதராக இருப்பார்.

இப்போது, Mr A -யின் பணியிடத்தில் மூத்தவராகவும், ஆண்டுக்கு ரூ. 7,50,000 வரி விதிக்கக்கூடிய வருமானம் கொண்டவராகவும் இருக்கும் Mr B -யின் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். Mr A போலல்லாமல், Mr B ஆண்டு முழுவதும் ரூ.30,000 வருமான வரியாக செலுத்த வேண்டும். ஏனெனில், Mr B நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த தள்ளுபடிக்கு அவர் தகுதி பெறவில்லை, ஏனெனில் அவர் தள்ளுபடிக்கான தகுதி உச்சவரம்பை விட அதிகமாக சம்பாதிக்கிறார்.

அதாவது, Mr B தனது முழு வருமானத்திற்கும் விகித அடுக்குகளின்படி வரி செலுத்த வேண்டும். வரி வகித அடுக்குகள் என்பது ரூ. 0-3 லட்சத்திற்கு வரி இல்லை, ரூ. 3-6 லட்சத்திற்கு 5 சதவீதம் மற்றும் ரூ. 6-9 லட்சத்திற்கு 10 சதவீதம் ஆக உள்ளது. எனவே Mr B ரூ. 3-6 லட்சம் அடுக்கிற்கு வருமான வரியாக ரூ. 15,000 செலுத்த வேண்டும், மேலும் அடுத்த அடுக்கிற்கு ரூ. 15,000 (10 சதவீத விகிதத்தில்) செலுத்த வேண்டும்.

நிர்மலா சீதாராமன் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளித்து, தள்ளுபடி அல்ல என்று அறிவித்திருந்தால், Mr Bயும் பயனடைந்திருக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Tax rebate under the new regime explained with two examples