scorecardresearch

பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்: சவாலாக உருவெடுத்த தேஜஸ்வி

வெற்றியோ அல்லது தோல்வியோ அவரது தந்தை லாலுவின் வலிமையைவிட பெரிய அளவில் தேஜஷ்வி தோன்றியதைக் குறிக்கும் ஒரு தேர்தல் ஆகும்.

பிரச்சாரத்தில் பெரும் கூட்டம்: சவாலாக உருவெடுத்த தேஜஸ்வி

முதல்வர் நிதிஷ்குமாரின் மூன்றாவது ஆட்சிகால வாய்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பை பலரும் அளித்துள்ளதால், இது அனைத்து சவால்களும் நிறைந்த கடுமையான தேர்தலாகக் கருதப்படுகிறது. ஆனால், தேஜஷ்வி பிரசாத் யாதவ் மற்றும் ஆர்.ஜே.டி-யைப் பொறுத்தவரை, இந்த தேர்தல் அவரது தந்தை லாலு பிரசாத்தைவிட வலிமையான ஒரு இளைஞன் தோன்றியதைக் குறிக்கும் ஒரு கருத்துக் கணிப்பு ஆகும்.

பொதுக்கூட்டங்களில் மக்கள் கூட்டம் கூடி தேர்தலில் வெற்றி பெற்றால் தேஜஸ்விதான் வெற்றியாளர். அவரது ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அவரைப் பின்தொடரும் பெரும் இளைஞர்கள் கூட்டம் கூடி அவர் பேசும்போது பெரிய அளவில் உற்சாகப்படுத்துகிறார்கள். மேலும், 10 லட்சம் அரசு வேலைகள் குறித்த தனது தொடர்ச்சியான வாக்குறுதியைப் பற்றி அவர் பேசும்போது, ​​கூட்டம் ஏறக்குறைய மயங்கிப்போகிறது. தேஜஷ்வியின் கீழ், ஆர்.ஜே.டி 2017-ம் ஆண்டு காந்தி மைதான பொதுக்கூட்டத்தில் கூடிய மக்கள் கூட்டத்தை அதிகப்படுத்தி காட்டும் வகையில் போலியாக சித்தரித்த அந்த நாட்களில் இருந்து வெகுதொலைவு தெளிவாக பயணித்துள்ளது.

தேஜஷ்வி இப்போது மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் அது எப்போதும் தெளிவாக இல்லை. இந்த கூட்டணியின் தொடக்கத்தில் காங்கிரஸ், ஆர்.எல்.எஸ்.பி-யின் உபேந்திர குஷ்வாஹா மற்றும் எச்.ஏ.எம் (எஸ்) -இன் ஜிதன் ராம் மாஞ்ஜி ஆகியோர் எப்போதும் கூட்டுத் தலைமை பற்றி பேசினார்கள்.

ஆனால், குஷ்வாஹாவும் ஜிதன் ராம் மாஞ்ஜியும் கூட்டணியை விட்டு வெளியேறியவுடன், தேஜஷ்வி தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆனால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. காங்கிரஸ் அவரை கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொண்டது.

மகாகட்பந்தன் கூட்டணியின் ஒரு பகுதியான இடதுசாரி கட்சிகள் – சிபிஐ, சிபிஐ (எம்எல்) மற்றும் சிபிஐ (எம்) – தேஜஷ்வியை மையமாகக் கொள்ள அனுமதிப்பதில் மட்டுமே மகிழ்ச்சியடைகின்றன.

ஒரு கட்டத்தில், சிபிஐயின் கன்னையா குமார் இளைஞர்களின் வாக்குகளைப் பெறும் போட்டியாளராகக் காணப்பட்டார். முன்னாள் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கான அந்த இடமும் தேஜஷ்விக்கு கொடுத்தததால் பின்னுக்கு சென்றது.

இருப்பினும், தேஜஷ்வியின் புகழை அவரது விமர்சகர்கள் நிராகரித்தனர். பொதுக் கூட்டங்களில் கூடும் கூட்டம் ஒரு வெற்றியாளரை தீர்மானிக்க வழி இல்லை என்று கூறுகிறார்கள். பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், லாலு பிரசாத் 2010 தேர்தல்களில் பெரும் கூட்டத்தை ஈர்த்தார். ஆனால், ஆர்ஜேடி 23 இடங்களை மட்டுமே பெற்றதைக் மக்களுக்கு நினைவூட்டினார்.

ஆனாலும், இதில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் என்னவென்றால், ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் வாழ்வாதாரத்தை இழந்தபின், ஒரு மாநிலம் முதல் தேர்தலை சந்திக்கிறது. புலம்பெயர்ந்தோர் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோதும் பின்னர் அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லும்போதும் முதல்வர் அவர்களைத் தடுக்க கொஞ்சம்கூட எதுவும் செய்யவில்லை என்று நிதிஷின் மீதான ஏமாற்றத்தைக் குறிப்பிட்டு விமர்சிப்பதன் மூலம் தேஜஷ்வி சரியான விஷயத்தை தாக்கியுள்ளார்.

இந்த கட்டத்தில்தான் அவர் முதலமைச்சராக கையெழுத்திடும் நாளில் அவர் அரசு வேலைகள் குறித்த உறுதிமொழியில் கையெழுத்திடுவேன் என்று ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார். அவர் இதை திடீரென அளித்த வாக்குறுதி அல்ல என்று ஆர்.ஜே.டி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். “பீகார் அரசாங்கத்தில் 4.5 லட்சம் காலி பணியிடங்கள் நிலுவையில் இருப்பதைக் கண்டறிந்தபோது, ​​தேசிய சராசரிக்கு நிகராக மேலும் 5.5 லட்சம் காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், 10 லட்சம் வேலைகள் என்ற யோசனையை நாங்கள் கொண்டு வந்தோம். இப்போது பாஜக எங்களை நகலெடுக்க முயற்சிக்கிறது” என்று ஆர்.ஜே.டி தலைவர்களில் ஒருவர் கூறினார்.

தேஜாஷ்வியைப் பார்ப்பவர்கள் அவர் வேகமாக கற்கிறார்கள் என்று கூறுகிறார்கள். உதாரணமாக, லாலுவின் குடும்ப அளவு குறித்து நிதிஷ் விமர்சனங்களை வைத்தபோது, “அவர்களுக்கு எட்டு-ஒன்பது குழந்தைகள் உள்ளனர்,” லாலு பிரசாத் – ராப்ரி தேவிக்கு 9 குழந்தைகள் அதில் எட்டாவது தேஜஷ்வி என்றார். இதற்கு முதல்வர் நிதிஷ் ஐந்து உடன்பிறப்புகளைக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியைக் கூட அவமதித்துள்ளார் என்று அவர் பதிலளித்தார்.

“மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி என்ற தனது தந்தையின் முழக்கம் மண்டல் கமிஷனுக்கு பின், பாபர் மசூதிக்குப் பின் வந்த தலைமுறையினரை உற்சாகப்படுத்தவில்லை என்பதையும், அவர்களுக்கு ஒரு புதிய முழக்கம் தேவை என்பதையும் அவர் வேகமாக தெரிந்து கொண்டார். அதற்கு அவர் வெகு தொலைவில் எங்கும் பார்க்கவில்லை – அவர் நிதிஷின் முகாமில் இருந்து வளர்ச்சி என்ற கருப்பொருளை எடுத்து சரியான மக்கள் கூட்டத்தில் கலந்தார்.

அரசு வேலைகள் வழங்கப்படுவதைத் தவிர, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய சமத்துவத்தை அளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாகவும் தேஜஷ்வி உறுதியளித்துள்ளார்.

இந்த குழுவே அவரது பொதுக் கூட்டங்களில் அவரை உற்சாகப்படுத்துகிறது என்று முங்கரைச் சார்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் கிஷோர் ஜெய்ஸ்வால் கூறுகிறார். “அவரது முஸ்லீம்-யாதவ் வாக்குத் தளத்தைத் தவிர, அவரது பொதுக்கூட்டங்களில் வேலைகள் விரும்பும் இளைஞர்கள் மற்றும் அவரது தேர்தல் வாக்குறுதிகளின் வருங்கால பயனாளிகளும் உள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.

இப்போதைக்கு, தேஜஷ்வியும் தனது குடும்பத்தினுள் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். அவருடைய மூத்த உடன்பிறப்பு மிசா பாரதி ஒரு ராஜ்யசபா இடத்தைக் கொண்டுள்ளார். அவர்களின் குடும்பம் மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவை 2019 மக்களவைத் தேர்தலில் கிளர்ச்சியாளராக மாறியபொது செய்ததைவிட இப்போது மிகவும் இராஜதந்திர ரீதியாக கையாள முடிந்துள்ளது.

இவை அனைத்தும் தேஜஷ்வியை மறுக்கமுடியாத போட்டியாளராக தோற்றமளிக்கச் செய்திருக்கும் அதே வேளையில், அவரது விமர்சகர்கள் அவரது உயர்வு அவரது வரவுக்குக் குறைவு என்று கூறுகின்றனர். மேலும், எல்.ஜே.பி வெளிநடப்பு செய்ததோடு, பாஜகவும் ஜே.டி.யு-வும் சிறந்த உறவுகளைப் பகிர்ந்து கொள்ளாத நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சீர்குலைவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.

மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்ல, பாட்னா 2019ம் ஆண்டில் மிக மோசமான வெள்ளத்தைக் கண்டபோது, ​​தேஜஷ்வி நடவடிக்கையில் காணவில்லை என்று விமர்சிக்கப்பட்டார். பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் கூட, புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளுக்கு நடக்க ஆரம்பித்தபோது, ​​தேஜஷ்வி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், என்.டி.ஏ-வில் சலசலப்பு அதிகரித்தபோது, ​​தேஜஷ்வி-க்கு கால் ஊன்றுவதற்கு இடம் கிடைத்தது. எல்.ஜே.பி இப்போது 143 இடங்களில் போட்டியிடுகிறது. அவற்றில் பெரும்பாலான இடங்கள் ஜே.டி.யுவுக்கு எதிராக உள்ளன. இது ஜே.டி.யு வாக்குகளை குறைக்க முடிந்தால், ஆர்.ஜே.டி பல இடங்களில் போட்டி வாய்ப்பைவிட அதிகமாகும்.

“சிராக் பாஸ்வான் ஜே.டி.யுவை மட்டுமல்ல, பாஜகவையும் பாதிக்கிறார். அவர் ஆர்.ஜே.டி வெற்றிக்கு உதவுவார்” என்று சசாரம் வாக்காளர் அலோக் குமார் கூறுகிறார்.

ஆனாலும், நிதிஷை கவிழ்ப்பது ஆர்ஜேடிக்கு போதுமானதா? அவர் அதைச் செய்ய, கட்சியின் முக்கிய வாக்குகளைவிட அவர் மேலும் அதிகம் வாக்குகளைப் பெறுவார்.

சமூக அறிவியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் சஞ்சய் குமார் கூறுகையில், “அவரது முக்கிய வாக்குகளைத் தவிர, அவர் இளைஞர்கள் மற்றும் ஈபிசி வாக்குகள் மற்றும் என்டிஏவின் முக்கிய தொகுதிகளில் இருந்து சில பிளவு வாக்குகளைப் பெறலாம். ஆனால், 2005 சட்டமன்றத் தேர்தலில் 25 சதவீத வாக்குகளைப் பெற்றபோது அதன் சிறந்த செயல்திறன் இருந்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன், அது 34-35 சதவீதத்தைத் தொடக்கூடும். ஆனால், என்.டி.ஏ இன்னும் 37-38 சதவீதத்தை நிர்வகித்தால் என்ன செய்வது? சமூக கணக்குகளின் அடிப்படையில் மட்டும் கணிப்பது மிகவும் கடினம். இது மிகவும் சிக்கலான தேர்தல்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Tejashwi yadav challenger rjd cm candidate in bihar elections 2020