Advertisment

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய தாய்லாந்து: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே

தத்தெடுப்பு, வாரிசுரிமை மற்றும் வரிச் சலுகைகள் போன்ற பகுதிகளில் ஹெட்ரோ பாலின தம்பதியிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Thailand

Thailand

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தாய்லாந்தின் தேசிய சட்டமன்றத்தின் மேலவையான தாய் செனட், செவ்வாயன்று (ஜூன் 18) திருமண சமத்துவ மசோதாவை நிறைவேற்றியது, அதற்கு ஆதரவாக 130 செனட்டர்கள் வாக்களித்தனர், 18 பேர் வாக்களிக்கவில்லை, நான்கு பேர் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.

Advertisment

இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் முதல் நாடாகவும், ஆசியாவில் நேபாளம் மற்றும் தைவானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாகவும் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. தாய்லாந்து மன்னர் X ராமாவின் முறையான ஒப்புதலுக்காக இந்த மசோதா காத்திருக்கிறது.

415 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேர் மட்டுமே எதிராக வாக்களித்த நிலையில், தேசிய சட்டமன்றத்தின் கீழ் அவை மார்ச் 26 அன்று கிட்டத்தட்ட ஒருமனதாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

மசோதா

புதிய சட்டம் தாய்லாந்து திருமணச் சட்டங்களில் உள்ள "கணவன்" மற்றும் "மனைவி" பற்றிய குறிப்புகளை "துணை" போன்ற பாலின-நடுநிலை சொற்களாக மாற்றுகிறது. இதன் பொருள் இருவரும் தங்கள் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளலாம்.

தத்தெடுப்பு, வாரிசுரிமை மற்றும் வரிச் சலுகைகள் போன்ற பகுதிகளில் ஹெட்ரோ பாலின தம்பதியிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு இது வழங்குகிறது.

வங்கிக் கணக்குகளை அணுகுவது முதல் மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புதல் அளிப்பது வரை, ஹெட்ரோசெக்ஸூவல் தம்பதிக்கு வழங்கப்படும் அதே சட்ட அதிகாரங்களை LGBTQ+ தம்பதிகள் திறம்பட பெற்றுள்ளனர்.

வரவேற்பு

மசோதாவுக்கு கிடைத்த ஆதரவு LGBTQ+ மக்கள்தொகைக்கு ஒரு பெரிய வெற்றி. இது அவர்களின் உரிமைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை திருமணம் பற்றிய தாய் சமூகத்தின் நேர்மறையான கருத்துக்களை பிரதிபலிக்கிறது.

தாய்லாந்தின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷன் நடத்திய 2022 வாக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 91% பேர் LGTBQ+ குடும்ப உறுப்பினர்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருப்பதாகவும், 80% ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறினர்.

உண்மையில், LGBTQ+ தனிநபர்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகள் இல்லாவிட்டாலும், தாய்லாந்து பாலினம் மற்றும் பாலியல் பன்முகத்தன்மையின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. சட்டப்பூர்வ அங்கீகாரத்தை நோக்கிய சமீபத்திய உந்துதல், அதிகரித்த ஊடக பிரதிநிதித்துவம், செயல்பாடு மற்றும் நீதிமன்ற முயற்சிகள் காரணமாக இருக்கலாம், இது பிரச்சினைக்கு அரசியல் ஆதரவை உருவாக்கியுள்ளது.

செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, LGBTQ சமூகம் மற்றும் திருமண சமத்துவத்திற்கு குரல் கொடுக்கும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், தனது உத்தியோகபூர்வ இல்லத்தை ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு கொண்டாட்டங்களுக்காக திறப்பதாக கூறினார்.

உலகில், மற்ற ஆசிய நாடுகளில் நிலைமை

தாய்லாந்து, தைவான் மற்றும் நேபாளம் தவிர, மற்ற ஆசிய நாடுகள் திருமண சமத்துவம் மற்றும் LGBTQ+ உரிமைகள் விஷயத்தில் நன்றாக இல்லை.

கடந்த அக்டோபரில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட  அமர்வு ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்காக 1954 இன் சிறப்பு திருமணச் சட்டத்தை (SMA) மாற்ற மறுத்தது, மேலும் திருமணச் சமத்துவத்தை சட்டமாக்குவதற்கான பொறுப்பை நாடாளுமன்றத்தின் மீது சுமத்தியது.

உண்மையில், ஆப்கானிஸ்தான், புருனே, ஈரான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யேமன் ஆகிய நாடுகளுடன் குறைந்தபட்சம் 20 ஆசிய நாடுகள் ஒரினச் சேர்க்கை செயல்பாடுகளை தடை செய்கின்றன. மரண தண்டனையை கூட பரிந்துரைக்கின்றன.

இந்தியாவில், 2018 இல் ஒரு முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, சம்மதமுள்ள வயது வந்தவர்களுக்கிடையேயான ஒரே பாலின உறவுகள் குற்றமற்றவை.

தற்போது, ​​உலகளவில் 36 நாடுகளில் (தாய்லாந்து உட்பட) ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக உள்ளது: அவை, அன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, தைவான், யுனைடெட் கிங்டம், அமெரிக்கா மற்றும் உருகுவே ஆகும்.

Read in English: Thailand to become third Asian country to legalise same-sex marriage: All you need to know

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Thailand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment