குடமுழுக்கு சர்ச்சை: தஞ்சை கோயில் மூலமாக ஆரிய-திராவிட விவாதங்கள்?
தமிழ்,சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்ற தீர்ப்பு, பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளது.
தமிழ்,சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்ற தீர்ப்பு, பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளது.
புதன்கிழமை காலை தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சாவூரில் திரண்டனர். இந்த மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
Advertisment
பெருவுடையார் கோயில் தஞ்சாவூரில் உள்ள பல கோயில்களில் மிகவும் பிரபலமானது. இந்த கோயில் கி.பி 1003-1010 க்கு இடையில் ஆண்ட சோழ பேரரசர் ராஜா ராஜா I (கி.பி. 985-1014) என்பவரால் கட்டப்பட்டது.
புதன்கிழமை நிகழ்வில், ஆலய வளாகத்தில் உள்ள யாக சாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், தங்கமுலாம் பூசப்பட்ட கலசத்தில் ஊற்றப்பட்டது. கோயில் கருவறையின் 216 அடிக்கு மேல் இந்த கலசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
2010 ஆம் ஆண்டில் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது கோயிலின் 1,000 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
குடமுழுக்கும், உயர் நீதிமன்றமும்:
குடமுழுக்கு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தஞ்சை பெரியக் கோவில் கும்பாபிஷேகத்தில் கூறபப்டும் மந்திரங்கள் எந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி சென்னை உயர்நீதிமன்றத்திடம் வந்தது . வழக்கின் முடிவில், தங்கை குடமுழுக்கில் தமிழ்/சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியிலும் நடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தமிழ் மரபுகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர், குடமுழுக்கை தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தானர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆதரவும் இந்த உரிமை மீட்புக் குழுவினருக்கு இருந்தது.
இருப்பினும், கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் கூறியதாவது “குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் செய்யப்படும். தமிழ் குழுக்களிடமிருந்து நாங்கள் கோரிக்கையைப் பெற்ற பின்னர், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக ஒரு கருத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு இணக்கமான தீர்வைக் காண்பார்கள்,” என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் எழுப்பட்ட வாதங்கள் : தற்போது அளிக்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு, பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிநாதத்தை பின்பற்றியுள்ளது. அப்போதைய நீதிபதிகள் கோயில் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை ஏற்க மறுத்துவிட்டனர்.
“கடவுளால் தேவங்கிரி மொழியை மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும், தமிழ்மொழி அந்த மொழியுடன் இணையாக நிற்க முடியாது" என்ற வாதத்தை பழமைவாத மதகுருமார்கள் முன்வைத்தனர்.
நீதிபதிகள் எலிப் தர்ம ராவ், கே.சந்த்ரு தலைமயிலான அமர்வு (வி.எஸ் சிவகுமார் Vs ஸ்டேட் ஆஃப் தமிழ்நாடு, மார்ச் 19, 2008) இந்த வாதத்தை ஏற்க மறுத்தது. மத நூல்களை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மதகுருமார்களின் வாதத்திற்கு எந்த அடிப்படை ஆதராமும் இல்லை என்றும் தெரிவித்தது.
அரசியலமைப்பு பிரிவு 25-ன் கீழ், கோவிலில் பாரம்பரிய சடங்குகளில் அரசாங்கம் தலையிடுவதை நீதிமன்றம் தடுக்க வேண்டும் என்று ஆலயப் பாதுகாப்புக் குழு தனது மனுவில் கூறியிருந்தது.
தஞ்சை பெருவுடையார் கோயிலில், தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட மத உரிமைகள் பாதிக்கபப்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த நீதிமன்றம், ஆகம நூல்களும் (அ) வேறு எந்த மத எழுத்துக்களும் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோயில்களில் தமிழ் மந்திரங்களை உச்சரிப்பதை தடைசெய்ய வில்லை என்று தீர்ப்பு அளித்தனர்.
பெரிய அரசியல் போர் : வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு பெருவுடையார் குடமுழுக்கு குறித்த விவாதத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், நீண்டகால உணர்ச்சிபூர்வமான சிக்கல்களை தீர்க்கவில்லை.
கடவுளர்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரே மொழி சமஸ்கிருதம் தான், சமஸ்கிருதத்தில் மந்திரங்களை உச்சரிப்பது இந்து மத நடைமுறையின் இன்றியமையாத பகுதி என்று கூறும் ஆர்ய பாரம்பியத்திற்கும் ,திராவிட பாரம்பத்தியத்திற்கும் நடக்கும் இடையே நடக்கும் கருத்து வேறுபாடு தான் பிரச்சனையின் அடிப்படை சாராம்சம்.
திராவிட பாரம்பரியம், தஞ்சை பெருவுடையார் குடமுழுக்கு தொடர்பாக தேவரம் மற்றும் திருவாசகம் பக்தி சைவ நூல்களை மேற்கோள் காட்டுகிறது. இந்த நூல்கள் சிவனை சாமானியர்களின் தெய்வமாக சித்தரிக்கின்றன.
ஆரிய-திராவிட மோதல்களின் பின்புலனில் தான் உயர் சாதி இந்து குழுக்களுக்கும், இந்துத்துவ அமைப்புகளுக்கும் (சமிபத்தில் உருவாகும் ) எதிராக தமிழ் தேசியவாத அமைப்புகள் உருவாகுகின்றன.
நாம் தமிழர், காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழ் தேசிய பேரியக்கம், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் ஆகியவை பெருவுடையார் கோவில் குடமுழுக்கில் தமிழில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியவர்களில் முக்கியமானவர்கள்.
தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நல சங்கம் என்ற அமைப்பு சமஸ்கிருதத்தில் மட்டுமே தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.