Explained: What is the 2/3rds rule in anti-defection law?: மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடி, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தவிர்க்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சட்டம் மற்றும் விதிவிலக்கு
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தங்கள் அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து விட்டுக் கொடுத்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்; மற்றும் அவர்/அவள் தங்கள் கட்சியால் (அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நபர் அல்லது அதிகாரத்தால்) வழங்கப்பட்ட எந்தவொரு வழிகாட்டுதலுக்கும் மாறாக சபையில் வாக்களித்தால் அல்லது வாக்களிக்காமல் இருந்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இதையும் படியுங்கள்:
அத்தகைய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்க ஒரு விதி உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். 2003 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 91வது திருத்தத்தின் கீழ், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனிக் குழுவை (திருத்தத்திற்கு முந்தைய விதி) அமைத்தால் தகுதி நீக்கம் செய்வதிலிருந்து விலக்கு அளிப்பது நீக்கப்பட்டது.
நீதிமன்றங்கள் எப்படி தீர்ப்பளித்துள்ளன?
இந்த ஆண்டு பிப்ரவரியில், கோவாவில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றம், 2019 இல் பா.ஜ.க.,வுக்குத் தாவிய 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் இரண்டு எம்.ஜி.பி எம்.எல்.ஏ.,க்களுக்கு தகுதி நீக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் இணைப்பு பா.ஜ.க.,வுடன் அசல் அரசியல் கட்சியின் இணைப்பாகக் “கருதப்படுகிறது” என்று தீர்ப்பளித்தது (கிரிஷ் சோடங்கர் v சபாநாயகர், கோவா சட்டமன்றம்).
ராஜேந்திர சிங் ராணா எதிர் சுவாமி பிரசாத் மௌரியா (2007) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், "ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து விட்டுக் கொடுப்பது" என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்தது, மேலும் "ஒரு நபர் தானாக முன்வந்து அவரது கட்சியின் உறுப்பினர் பதவியை, விட்டுவிட்டதாகக் கூறினால், அவர் அல்லது அவள் சார்ந்துள்ள அசல் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டாலும், அவர் உறுப்பினர் பதவியை விட்டுவிட்டதாகக் கருதலாம்,” மற்றும் உறுப்பினரின் நடத்தையிலிருந்து ஒரு அனுமானத்தை எடுக்க முடியும்.
மூன்றில் இரண்டு பங்கு விதி
மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றாலும், அவர்கள் வேறொரு கட்சியுடன் இணைந்தால் அல்லது சட்டமன்றத்தில் தனிக் குழுவாக மாறினால் மட்டுமே அவர்கள் தகுதிநீக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சிவசேனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குழு வேறு கட்சியுடன் இணையும் வரை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் அவர்களுக்குப் பொருந்தும் என்று கூறினார். ரவி நாயக் வழக்கு (1994) உள்ளிட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இந்தக் கருத்தைக் கொண்டதாக அவர் கூறினார்.
மகாராஷ்டிராவின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீஹரி அனே, கட்சித்தாவல் தடைச் சட்டம் குறித்து விவாதத்திற்குரிய நிலைப்பாடுகள் உள்ளன என்றார். "பல்வேறு நீதிமன்றங்கள் வழக்கின் குறிப்பிட்ட பிரச்சனைகளின்படி தீர்ப்புகளை வழங்கியுள்ளன, மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கைத் தாண்டிவிட்டது, எனவே இந்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் உட்படுத்தப்பட முடியாது மற்றும் அவர்கள் கட்சித் தாவல் சட்டத்திற்கு எதிராக பாதுகாக்கப்படுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஒரு தனிக் குழுவாகவோ அல்லது சபையில் ஒரு 'தனிப் பிரிவாகவோ' அடையாளம் காணப்படுவதற்கும், நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.
தகுதி நீக்க அறிவிப்புகள்
16 கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் சட்டத்தின் ஆய்வுக்கு நிற்குமா என்பது மற்றொரு பிரச்சினை. மகாராஷ்டிரா சட்டப் பேரவை (மாறுதலால் தகுதி நீக்கம்) விதிகள் மற்றும் பிற நிபந்தனைகளின்படி, துணை சபாநாயகரின் முடிவை உறுதிப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
“என்னுடைய கருத்துப்படி, சில எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் நோட்டீஸ் செல்லாது. இந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பங்கேற்கவில்லை மற்றும் கொறடா உத்தரவைக் கடைபிடிக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த உத்தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கொறடா என்பது சட்டமன்றத்தின் அலுவல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது... இங்கே உத்தரவு என்பது அவர்களின் தலைவர் உத்தவ் தாக்கரேவால் அழைக்கப்பட்ட கூட்டத்திற்காக இருந்தது” என்று அனே கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.