சனிக்கிழமை (நவம்பர் 21), உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்-ல் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் காந்திநகர் நகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (எஃப்எஸ்எல்) வந்து சேர்ந்தது.
நான்கு பேரிடமும் மூளை பிங்கர்பிரிண்டிங் சோதனை நடத்தப்படுகிறது. கடந்த திங்களன்று, பிஇஒஎஸ்பி (BEOSP) என்ற சொல்லப்படக் கூடிய இந்த சோதனைக்கு, குற்றம் சாட்டப்பட்ட நன்கு பேரும் தகுதியானவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பிஇஒஎஸ்பி சோதனை என்றால் என்ன?
மூளை பிங்கர்பிரிண்டிங் என்றும் அழைக்கப்படும் (BEOSP) என்பது ஒரு நரம்பு உளவியல் விசாரணை முறையாகும், இதில்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிக்கும் போது அவர்கள் மூளையில் ஏற்படும் தாக்கங்கள் ஆராயப்படுகிறது. எலக்ட்ரோஎன்செபலோகிராம்' (இஇஜி) செயல்முறையின் மூலம், மனித மூளைகளின் மின் அலைகளின் சிக்னல்களை அறிந்து கொள்ளலாம்
இந்த சோதனையின் கீழ், மின்வாயிகள் (electrode) பொறுத்தப்பட்ட தொப்பிகளை விசாரணை கைதிகளிடம் அணிய வைக்கப்படுகிறார்கள். பின்னர், குற்றம் சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் போடப்படும். மூளை அலைகளை உருவாக்கும் நியூரான்கள் ஏதேனும் தூண்டப்படுகிறதா என்று சோதிக்கப்படும். சோதனை முடிவுகள் பின்னர் ஆய்வு செய்யப்பட்டு, குற்ற சம்பவத்தோடு இவர் தொடர்புயைடைவரா என்பது தீர்மானிக்கப்படும்.
குஜராத் தடயவியல் இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், “ குற்றத்தைப் பற்றிய 'அறிவு’, ‘அனுபவம்’ ஆகிய இரண்டின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்படும். தனிநபரின் மூளையில் குற்றத்தை பற்றியும் அதில் இருந்து விடுபடுவதற்கான அறிவும் இருக்கலாம். ஆனால் குற்றத்தில் பங்கெடுத்ததன் ‘அனுபவம்’ மட்டுமே அவர்களின் குற்றத்தை தீர்மானிக்கிறது.” என்று தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
சோதனை முடிவுகள் வழக்கில் ஆதாரமாக ஒப்புக்கொள்ளப்படுமா?
2010 ஆம் ஆண்டில், செல்வி vs கர்நாடக மாநிலம் என்ற வழக்கில், உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ சோதனை), மூளை வரைபட சோதனை மற்றும் பாலிகிராப் சோதனைகள் தனிநபரின் அனுமதியுமின்றி கட்டாயப்படுத்த முடியாது என்றும், சோதனை முடிவுகளை மட்டுமே ஆதாரமாக ஒப்புக்கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது. எவ்வாறாயினும், சோதனைகளின் போது கண்டறியப்பட்ட எந்தவொரு தகவலும் அல்லது பொருளும் வழக்கின் ஆதாரங்களின் ஒரு பகுதியாக கருதப்படலாம் என்றும் அமர்வு தெரிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.