Bharat Gaurav scheme launched by Railways : சுற்றுலா வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை அன்று பாரத் கவுரவ் ரயில்களை அறிமுகம் செய்தது. இது தனியார் நிறுவனங்களால் தீம் அடிப்படையில் சுற்றுலா பயணங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ஆபரேட்டர்களுக்கு அதன் ரேக்குகள் மற்றும் உள்கட்டமைப்பின் “பயன்பாட்டு உரிமையை” வழங்கும் இந்தக் கொள்கையின் மூலம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் ஒரு பகுதியை ரயில்வே தாராளமயமாக்கி எளிமைப்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் உட்பட எந்த ஒரு நிறுவனமும் இந்த ரயில்களை இயக்க முடியும் என்றாலும், இந்தக் கொள்கையானது சுற்றுலா நடத்துபவர்களை இலக்காகக் கொண்டது என்று மறைமுகமாகச் சொல்லப்படுகிறது.
பாரத் கவுரவ் பாலிசி என்றால் என்ன?
பாரத் கவுரவ் பாலிசி என்பது எந்த ஒரு ஆப்பரேட்டரும், சேவை வழங்குநரும் (அதாவது யார் வேண்டுமானாலும்) ஒரு ரயிலை இந்திய ரயில்வேயிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து ஒரு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பாக ஒரு தீம் அடிப்படையிலான சர்க்யூட்டில் இயக்க முடியும். இதன் குறைந்தபட்ச குத்தகை காலம் 2 வருடங்கள். அதிகபட்சமாக பெட்டியின் கோடல் லைஃப் வரும் வரை இயக்க இயலும். வழிகள், தேவைப்படும் நிறுத்தங்கள், சேவைகள், கட்டணம் போன்றவற்றை தீர்மானிக்கும் சுதந்திரம் ஆப்பரேட்டர்களுக்கு உண்டு.
இது போன்று ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு ஐ.ஆர்.சி.டி.சியும் கூட ரயில்களை இயக்குகிறது. உதாரணம் ராமாயணா எக்ஸ்பிரஸ். ராமருடன் தொடர்புள்ள சில முக்கிய இடங்களை இணைத்து சுற்றுலா சேவைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற பயணங்களில் பயணிகள் ஒரு இடத்தில் இறங்கி ஹோட்டல்களில் தங்கி அங்கே இருக்கும் பகுதிகளை சுற்றிப்பார்த்து பல செயல்பாடுகளில் ஈடுபடுவார். இவை அனைத்தும் டூர் ஆப்பரேட்டர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பாரத் ஆப்பரேட்டர் இதே போன்ற ஒரு வணிக முன்மாதிரியை முன்மொழிய வேண்டும். ரயில்களை இயக்குவதுடன் உள்ளூர் போக்குவரத்து, சுற்றிப் பார்ப்பது, உணவு, உள்ளூர் தங்குமிடங்கள் போன்றவற்றைக் கவனித்துக்கொள்ளும். இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட 3033 கன்வென்ஷனல் இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி-டிசைன் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க ரயில்வேயை யார் வேண்டுமானாலும் அணுகலாம். உண்மையில், ஆபரேட்டர் அதைச் சாத்தியமானதாகக் கண்டால், அது இந்திய இரயில்வே உற்பத்திப் பிரிவுகளில் இருந்து ரேக்குகளை வாங்கி இயக்கலாம்.
ஒவ்வொரு ரயிலிலும் 14 முதல் 20 கோச்சுகள் ((இரண்டு காவலர் பெட்டிகள் அல்லது எஸ்எல்ஆர் உட்பட). இருப்பினும் ஹோட்டல்களில் தங்குதல் உள்ளூர் சுற்றுலா போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் ஆப்பரேட்டர் விரிவாக கவனித்துக் கொள்ள வேண்டும். பயணம் ஆரம்பமாகும் இடம் மற்றும் முடியும் இடம் என்று மற்ற ரயில் சேவைகளைப் போன்று இந்த ரயில் சேவையை பயன்படுத்த இயலாது.
இத்தகைய விண்ணப்பங்களை எப்படி ரயில்வே செயல்படுத்தும்?
ஒவ்வொரு மண்டல இரயில்வேயிலும் அத்தகைய விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும், விண்ணப்பதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், ஆப்பரேட்டர்களுக்கான செயல்பாட்டு தேவைகள் என்னென்ன என்பதைக் காணவும் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும். இந்த யூனிட்டுகள் , பயணத்திட்டங்களை உருவாக்குதல், பொதுமக்களை அணுகுதல், தேவையான அனுமதிகளை மேற்கொள்வது போன்றவற்றில் ஆபரேட்டர்களுக்கு உதவும். ஆபரேட்டர்கள் ரயில்வேயுடன் தொடர்பு கொள்ளும்போது அவர்களின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒற்றைச் சாளரம் போல செல்ல ஒரு இடத்தை இவை வழங்கும்.
ஒப்பந்தத்தில் ஆப்பரேட்டர்கள் என்ன செய்ய இயலும்?
ஆபரேட்டர், பாதுகாப்பு விதிமுறைகளுக்குள் விரும்பினால், ரயில்களின் உட்புறங்களில் அதன் சொந்த அலங்காரங்களை மேற்கொள்ளலாம். அது எந்த வகையான உட்புறங்கள் அல்லது பெர்த் நிறங்களை விரும்புகிறது என்பதை தீர்மானிக்க முடியும். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பெட்டிகளின் முக்கிய பகுதிகளை நீக்கவோ டிங்கரிங்க் செய்யவோ முடியாது.
ரயில் மற்றும் பயணத்திற்கான பெயரை ஆப்பரேட்டர்கள் தேர்வு செய்யலாம். மேலும் விளம்பரங்கள் செய்ய ஸ்பேஸ் தரலாம். இது ரயிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பிராண்டிங் செய்ய முடியும். இது வணிக மேம்பாடு மற்றும் தளவாடங்கள் போன்றவற்றிற்காக ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்திருக்கலாம். பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை தர விரும்பும் பட்சத்தில் உணவு மற்றும் பொழுதுபோக்கினை இணைக்கலாம்.
ஆனால், ரயில்வே சட்டங்களால் தடை செய்யப்பட்ட பொருட்களை எக்காரணம் கொண்டும் ரயில்களில் கொண்டு செல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக ஆப்பரேட்டர் பயணிகளுக்கு மதுவை வழங்க முடியாது.
அசைவ உணவு அனுமதிக்கப்படுமா என்பது குறித்து கொள்கை மௌனமாக உள்ளது, ஆனால் இந்திய ரயில்வே ரயில்களில் அனுமதிக்கப்படுவதால் எந்த தடையும் இருக்கக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வணிகத்தை நடத்துவதற்கு ஆபரேட்டர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதும், இந்திய ரயில்வே இரயில்களை மட்டுமே இயக்குவதும், அவற்றைப் பராமரித்தல் மற்றும் கட்டணம் வசூலிப்பது போன்ற வணிக மாதிரியை உருவாக்குவதும் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
எந்த வகையான கோச்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?
வழக்கமான ஏசி வகுப்புகள்-I, II, III மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்சுகள், ஏசி நாற்காலி கார்கள் மற்றும் பேண்ட்ரி கார்கள் இந்தக் கொள்கையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆபரேட்டருக்கு அது இலக்கு வைக்கும் வாடிக்கையாளர்களின் வகையைப் பொறுத்து ரயிலை உருவாக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 15 வயது முதல் 20 வருடங்கள் மற்றும் 20 முதல் 25 வருடங்களான கோச்கள் இந்த ரயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 35 வருடங்களுக்கு மேற்பட்ட கோச்கள் வழங்கமாக ஓய்வு பெறுகின்றன. கோச் அல்லது ரேக்கின் கோடல் ஆயுட்காலம் எஞ்சியிருக்கும் போது ஒப்பந்தக் காலம் முடிவடைந்தால், பரஸ்பர ஒப்புதலின் பேரில் ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியும். எதிர்கால தேவை இருந்தால் Linke Hoffmann Busch கோச்கள் அல்லது வந்தே பாரத் அல்லது விஸ்டா டோம் கோச்களையும் சேர்க்கலாம், ஆனால் விலை வித்தியாசமாக இருக்கும்.
இந்திய ரயில்வே என்ன செய்யும்?
ரயில்களை இயக்க பணியாளர்களை வழங்கும். மேலும் கார்டுகள், பராமரிப்பு பணியாளர்கள் ஆகியோரையும் வழங்கும். ஆப்பரேட்டர்கள் ஹவுஸ்கீப்பிங் மற்றும் கேட்டரிங் சேவைகளுக்கு பணியாளார்களை நியமித்துக் கொள்ளலாம். அதன் நெட்வொர்க்கில் ரயிலை பாதுகாப்பாகவும் திறமையாகவும் ஹோஸ்ட் செய்ய அதன் முழு உள்கட்டமைப்பும் உள்ளதை உறுதி செய்யும். ராஜ்தானிகள் மற்றும் பிரீமியம் ரயில்கள் போன்ற அதன் பாதைகளில் இது முன்னுரிமை அளிக்கும், இதனால் வழக்கமான ரயில்களுக்கு வழி கொடுக்கும் வகையில் இந்த ரயில்கள் நிறுத்தப்படாமலோ அல்லது ஓரங்கட்டப்படாமலோ இருக்கும்.
ஆப்பரேட்டருக்கு எவ்வளவு செலவாகும்?
பதிவுக் கட்டணம், ரேக்கிற்கான பாதுகாப்பு வைப்புத் தொகை, “பயன்பாட்டு உரிமை” கட்டணங்கள், இழுத்துச் செல்வதற்கான கட்டணம் மற்றும் ஸ்டேபிளிங் கட்டணங்கள் என ஆபரேட்டர் ரயில்வேக்கு செலுத்த வேண்டிய தொகையாக இருப்பதால் இந்தப் பணம் கணிசமானதாக இருக்கும். எரிபொருள், மனிதவளம், தேய்மானம், பராமரிப்பு, குத்தகை, போன்ற இரயில்வே வளங்களின் பல்வேறு கூறுகளைப் பயன்படுத்துவதற்கு இந்தக் கட்டணங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
தொடங்குவதற்கு, விண்ணப்பதாரரிடமிருந்து ஒரு முறை ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.1 லட்சத்தை ரயில்வே பெறும். சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வே விண்ணப்பத்தை 10 நாட்களுக்குள் பரிசீலித்த பிறகு மாற்றியமைக்கும். ரேக் ஒதுக்கப்பட்ட பிறகு, ரேக்கின் அளவைப் பொருட்படுத்தாமல், ஒரு ரேக்கிற்கு ரூ. 1 கோடி பாதுகாப்பு வைப்புத்தொகை ஆப்பரேட்டரிடம் இருந்து குத்தகை காலம் முழுவதற்கும் பெறப்படும்.
பயன்படுத்தும் உரிமை கட்டணம்
பெறப்பட்டுள்ள கோச் மற்றும் காலத்தின் அடிப்படையில் வருடாந்திர ரைட் ஆஃப் யூஸ் கட்டணங்கள் பெறப்படும். பாரத் கவுரவ் திட்டத்தில் முதல் ஆண்டில் இந்த கட்டணத்தை முன் கூட்டியே கட்ட வேண்டும். இரண்டாம் ஆண்டுக்கான கட்டணத்தை முதலாம் ஆண்டு கட்டணம் முடிவடைவதற்கு 15 நாட்களுக்கு முன்பு கட்ட வேண்டும். பணம் செலுத்த தாமதமானால் அதற்கு அபராதம் கட்ட வேண்டும். வங்கியின் நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்திற்கு சமமான அபராதம் மற்றும் நிர்வாகக் கட்டணமாக 3 சதவீதம் விதிக்கப்படும். 30 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், பயன்பாட்டு உரிமை நிறுத்தப்படலாம்.
ஒரு ஏசி பெட்டிக்கான வருடாந்திர பயன்பாட்டு உரிமைக் கட்டணம் வகுப்பு மற்றும் வயதைப் பொறுத்து ரூ 3.5 முதல் 1.4 லட்சம் வரை மாறுபடும். ஒரு பேண்ட்ரி காரின் ரைட் ஆப் யூஸ் கட்டணம், வயது மற்றும் வகையைப் பொறுத்து ரூ.2 லட்சம் முதல் ரூ.65,000 வரை இருக்கும். ஏசி இல்லாத ஸ்லீப்பர் கோச்சின் விலை ரூ.1.8 லட்சம் முதல் ரூ.96,000 வரை. இந்தக் கட்டணங்கள் ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் அவை திருத்தப்படலாம். பெட்டிகள் ஆபரேட்டருக்கு சொந்தமானதாக இருந்தால் அல்லது ரயில்வே தொழிற்சாலைகளால் நேரடியாக வாங்கப்பட்டால், பயன்பாட்டு உரிமைக் கட்டணங்கள் பொருந்தாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil