அமெரிக்காவில் செயல்முறை பயிற்சி திட்டம் ரத்து மசோதா - சர்வதேச மாணவர்களை பாதிக்குமா?

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் செயல்முறை அனுபவத்துக்காக தற்காலிகமாக மூன்று ஆண்டுகள் வரை பணிபுரிய வகை செய்யும் திட்டத்தை நீக்க புதிய மசோதாவை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் செயல்முறை அனுபவத்துக்காக தற்காலிகமாக மூன்று ஆண்டுகள் வரை பணிபுரிய வகை செய்யும் திட்டத்தை நீக்க புதிய மசோதாவை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optional Practical Training program

அமெரிக்காவில் செயல்முறை பயிற்சி திட்டம் ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? - சர்வதேச மாணவர்களை பாதிக்குமா?

அமெரிக்கர்களிடம் இருந்து வேலைகள் பறிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அரிசோனா குடியரசுக் கட்சி எம்.பி. பால் கோசர், மார்ச் 25 அன்று திறமையான அமெரிக்கர்களுக்கான நியாயமான சட்டம் 2025-ஐ அறிமுகப்படுத்தினார். இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் எச் -1 பி விசாக்களை விமர்சித்த டிரம்ப் ஆதரவாளர்கள், வேலைவாய்ப்பில் சர்வதேச மாணவர்களுக்கு ஓ.பி.டி திட்டம் சாதகமாக உள்ளது என்றும் வாதிட்டனர்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

ஓ.பி.டி. (Optional Practical Training) திட்டம் என்றால் என்ன?

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடிந்த பின்னும் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி செயல்முறை பயிற்சி (Optional Practical Training) என்ற பெயரில் வேலை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

Advertisment
Advertisements

இத்திட்டத்தில் இந்திய மாணவர்களே அதிகம் பயன் அடைகின்றனர். 2023-24 கல்வியாண்டில் 97,556 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்துள்ளனர். பட்டப்படிப்புக்கு பெற்ற லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கடனை தற்காலிக பணி செய்தே பலரும் அடைக்கின்றனர்.

OPT திட்டம் மாணவர்கள் (F1 விசாக்களில் அமெரிக்காவில் இருப்பவர்கள்) தங்கள் படிப்பு தொடர்பான துறையில் 12 மாதங்கள் வரை வேலை செய்ய அனுமதிக்கிறது. மாணவர் தங்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பு (அ)  பின்பு OPT ஆக இருக்கலாம். இது மாணவர் பட்டம் பெற்ற பிறகு வேலை செய்ய அனுமதிக்கிறது. இதற்கு சர்வதேச மாணவர்கள் குறைந்தது ஒரு கல்வியாண்டாவது அமெரிக்காவில் முழுநேர படிப்பில் சேர வேண்டும். STEM துறைகளில் உள்ள மாணவர்கள் மேலும் 24 மாதங்கள் வரை தங்கி பணிபுரியலாம். பட்டப்படிப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை செய்யலாம்.

ஓ.பி.டி திட்டம் பிரபலமானது ஏன்?

ஓபன்டோர்ஸின் தரவுகளின்படி, 2023-24ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள 1,126,690 சர்வதேச மாணவர்களில், 2.43 லட்சம் பேர் OPT-ல் இருந்தனர். இது 2022-23ம் ஆண்டில் 1.99 லட்சம் மாணவர்களிடமிருந்து அதிகரித்துள்ளது மற்றும் (2013-14) OPT-ல் 1.06 லட்சம் மாணவர்களை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள 3,31,602 இந்திய மாணவர்களில் சுமார் 29% பேர் 2023-24ம் ஆண்டில் OPT-ல் இருந்தனர். முதுகலை படிப்பில் சேர்ந்த ஒரு இந்திய மாணவர் STEM OPT-ன் கீழ் நீட்டிப்புக்கு விண்ணப்பித்தார். இது சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கடன்களை சம்பாதிக்கவும் செலுத்தவும் ஒரு வழியை வழங்குகிறது என்று கூறினார்.

STEM படிப்புகள் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களிடையே அதிக சேர்க்கையைக் காண்பதால் STEM OPT-யும் மிக விரும்படுகிறது. அமெரிக்காவில் உள்ள மொத்த சர்வதேச மாணவர்களில், கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில் அதிக சேர்க்கை உள்ளது. இதைத் தொடர்ந்து 2.10 லட்சம் பேர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அமெரிக்காவில் 42.9% இந்திய மாணவர்கள் 2023-24 ஆம் ஆண்டில் இந்தத் துறைகளில் சேர்ந்தனர்.

மசோதா என்ன சொல்கிறது?

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் செயல்முறை அனுபவத்துக்காக 3 ஆண்டுகள் வரை பணிபுரிய வகை செய்யும் திட்டத்தை நீக்க புதிய மசோதாவை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது. அமெரிக்காவில் முழு நேர படிப்பில் சேராதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

காங்கிரஸ் உறுப்பினர் கோசர் ஒரு அறிக்கையில், "எஃப் 1 மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது அமெரிக்காவில் வேலை செய்வதை தடை செய்யவில்லை" என்று கூறினார். இந்த மசோதா "எஃப் 1 மாணவர்கள் தங்கள் கல்வி முடிந்த பின்னர் 3 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் அங்கீகரிக்கப்படாத மற்றும் நியாயமற்ற திட்டத்தை வெறுமனே நிறுத்துகிறது" என்று கூறினார்.

"OPT திட்டத்தின் மூலம் மாணவர் பயிற்சி என்ற போர்வையில், மலிவான வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதால், திறமையான அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி பட்டதாரிகளை முற்றிலும் பலவீனப்படுத்துகிறது என்றார். வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்டிருப்பது FICA (ஃபெடரல் இன்சூரன்ஸ் பங்களிப்பு சட்டம்) மற்றும் மெடிகேர் ஊதிய வரிகள் போன்ற சில விதிமுறைகளுக்கு இணங்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

கோசர் 2019-ல் அதே பெயர் மற்றும் நோக்கத்துடன் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார். ஆனால் நிறைவேற்றப்படவில்லை. இது துணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. ட்ரம்ப் அவரது தேர்தல் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக, இந்த திட்டங்கள் அமெரிக்க தொழிலாளர்களுக்கு நியாயமற்றவை என்ற உணர்வை வெற்றிகரமாக ஊக்குவித்துள்ளார். அதே நேரத்தில், ஒப்பீட்டளவில் குறைந்த சம்பளத்தில் இந்த தொழிலாளர்கள் கொண்டு வரும் திறன்களிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் பயனடைகின்றன.

இந்த மசோதா குறித்து, குடியேற்ற வழக்குகளைக் கையாளும் டெக்சாஸின் கன்சாஸில் உள்ள ஒரு வழக்கறிஞரான ரேகா சர்மா-கிராஃபோர்ட்: "அமெரிக்கா எப்போதும் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியுள்ளது, இது நிறைவேற்றப்பட்டால், பொது மற்றும் தனியார் துறை இரண்டிலிருந்தும் ஒரு மகத்தான கூக்குரல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."

Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: