மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலிக் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
தலைமறைவாகவுள்ள அண்டர்வேர்ல்டு உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கருடன் மாலிக் செய்த சொத்து பேரம் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை குர்லாவில் எல்பிஎஸ் மார்க்கில் உள்ள கோவாலா காம்பவுண்டில் 3 ஏக்கர் நிலத்தை ரூ.85 லட்சத்திற்கு மாலிக் வாங்கியதாகவும், அதில் ரூ.30 லட்சத்தை விற்பனை ஒப்பந்தத்தில் காட்டி, மீதியை பணமாக செலுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
சொத்துக்களின் பதிவு செய்யப்பட்ட மதிப்பு, நடைமுறையில் உள்ள சந்தை விகிதத்தை விட மிகவும் குறைவாக இருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை கூற்றுப்படி, பார்கர் 2005 இல் மாலிக்கின் நன்மைக்காக சலீம் படேல் சொத்தின் மீதான ஆர்வத்தை மாற்றியுள்ளார். இதில், அண்டர்வேர்ல்டு உலக தாதாவுடன் தொடர்பு வைத்திருக்கும் சர்தார் ஷாவாலி கான் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சமர்பித்த மனுவில், இந்த நிலம் முதலில் முனிரா பிளம்பர் என்பவருக்குச் சொந்தமானது. அவரிடமிருந்து பார்கர் மற்றும் அவரது தலைவரான முகமது சலீம் இஷாக் கான் என்ற சலீம் படேல் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். சலீம் படேலுக்கு அண்டர்வேர்ல்டு உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதால், அதனை பயன்படுத்தி ஏமாற்றி சொத்துக்கான பவர் ஆப் அட்டார்னியை பெற்றுள்ளார். அது, பிளம்பர் நிலத்தை விற்க பட்டேலுக்கு உரிமை வழங்கியது.
முனிரா பிளம்பர் நிலத்தை விற்பனை செய்திட மாலிக்கை அணுகவில்லை என்றும், கடந்தாண்டு ஊடக அறிக்கைகள் மூலமே இதைப் பற்றி அறிந்ததாக அமலாக்கத் துறையிடம் தெரிவித்துள்ளார். விற்பனை ஒப்பந்தத்தில் நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தின் பதிவேடு மதிப்பைக் குறைப்பதற்காக மாலிக் "போலி குத்தகைதாரர்களை" அறிமுகப்படுத்தியதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டர்வேர்ல்டு உலக தாதாக்களுடன் தொடர்புடைய இந்த இருவர் யார்?
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஷாவாலி கான் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர், தலைமறைவான டைகர் மேமனால் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட குழுவில் இருந்ததாகவும், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பி.எம்.சி.யில் வெடிகுண்டு எங்கு வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் பணியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஜூன் 2007 இல் கடுமையான சிறைதண்டனை வழங்கப்பட்டு, அவுரங்காபாத் சிறையில் உள்ளார். செப்டம்பர் 2005ல் சொத்து பேரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அண்டர்வேர்ல்டு உலக தாதாக்களுடன் தொடர்புடைய மற்றொரு நபர், சலீம் படேல் ஆகும். இவர் பார்கரின் பாதுகாவலராகவும், ஓட்டுநராகவும் இருந்தார்.
மாலிக் சொல்வது என்ன?
மாலிக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், மாலிக்கும் “கும்பலுக்கும்” (தாவூத் கும்பல்) எந்த தொடர்பும் இல்லை. பிஎம்எல்ஏ (பணமோசடி தடுப்புச் சட்டம், 2002) நடைமுறையில் இல்லாத 1999 ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்து பரிவர்த்தனையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநதி தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்ற தோற்றத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
சொத்தின் மீது உரிமை இல்லாத ஒருவர் அதை தனக்கு விற்றதால் மாலிக் தானே பாதிக்கப்பட்டுள்ளார். பிளம்பர், பவர் ஆப் அட்டார்னியை தவறாக பயன்படுத்தியதாக பட்டேலை தான் குற்றச்சாட்டுகிறார். இதில், மாலிக் எங்கிருந்து வந்தார் என கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரம் குறித்து மாலிக் கூறுகையில், எனது சொலிடஸ் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட், குர்லாவில் உள்ள நிலத்தை பிளம்பரிடமிருந்து குத்தகைக்கு எடுத்தது. அவர் எங்களை அணுகி, நிலத்தை எங்களுக்கு விற்க விரும்புவதாகக் கூறினார். பவர் ஆப் அட்டார்னி வைத்திருந்த சலீம் மூலம், நாங்கள் நிலத்தின் உரிமையைப் பெற்றோம்.
கானின் தந்தை இந்த வளாகத்தில் காவலாளியாக இருந்தார், மேலும் 300 மீட்டர் நிலத்திற்கு உரிமை கோரும் சொத்துப் பதிவுகளில் குடும்பம் தங்கள் பெயர்களைப் பெற முடிந்தது. இது எங்களுக்குத் தெரிந்ததும், அவர்களின் உரிமைகளை ஒப்படைக்க பணம் கொடுத்தோம் என்றார்.
சாலிடஸ் முதலீடு - மாலிக் என்ன தொடர்பு?
1973 இல் நிறுவப்பட்ட Solidus Investments Pvt Ltd நிறுவனத்தின் இயக்குநர்களாக மாலிக்கின் மகன் அமீர் நவாப் மாலிக், அவரது மனைவி மெஹ்ஜ்பீன் நவாப் மாலிக் ஆகியோர் பட்டியலிப்பட்டுள்ளனர்.
அமலாக்கத் துறை ரிமாண்ட் விண்ணப்பத்தின்படி, 2002-03 வரை கனுபாய் எம் படேலுக்குச் சொந்தமான சொலிடஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், பிளம்பரின் குர்லா நிலத்தில் குத்தகைதாரர்களில் ஒருவராக இருந்தது.
அப்போது மகாராஷ்டிராவின் வருவாய் அமைச்சராக இருந்த மாலிக், முன்மொழியப்பட்ட சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் 360 குடும்பங்களின் மறுவாழ்வுக்காக தனது நிறுவனம் வைத்திருந்த குத்தகை உரிமையை விற்க படேலை அணுகினார்.
பின்னர், படேல் நவாப் மாலிக்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் Solidus-ஐ 1 ரூபாய்க்கு விற்க ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, மாலிக்கின் குடும்பம் சாலிடஸின் உரிமையாளராகி, குத்தகைதாரராக இருந்து வந்தது. மாலிக் 2019 இல் அமைச்சராகும் வரை சாலிடஸ் குழுவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.