எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கப் பின்னணியில் சாதி அரசியல்!

Karnataka Cabinet expansion: கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஜகவுக்கு உதவிய 17 காங்கிரஸ் - ம.ஜ.த அதிருப்தியாளர்களில் பலரை பி எஸ் எடியூரப்பா சேர்க்க ஆர்வமாக...

ஜான்சன் டி ஏ, கட்டுரையாளர்

Karnataka Cabinet expansion: கடந்த ஜூலை 26 ஆம் தேதி ஆட்சிக்கு வந்த பின்னர் கர்நாடகாவில் அதன் முதல் அமைச்சரவை விரிவாக்கத்தில், பாஜக 17 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைக் குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதில் பெரும்பாலும் பாஜகவைச் சேர்ந்த நம்பகமான மூத்த உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க உதவிய ஒரு சில புதியவர்கள் அடங்கியுள்ளனர்.

முதலமைச்சர் எடியூரப்பாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைச்சரவையில் 7 அமைச்சர்கள் எடியூரப்பா சார்ந்த ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சரவையில் 3 உறுப்பினர்கள் மற்றொரு ஆதிக்க சமூகமான வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 பட்டியல் சாதி உறுப்பினர்கள், இரண்டு பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு பிராமணர் மற்றும் ஒரு பழங்குடியினரைச் சேர்ந்த உறுப்பினர் என அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்த 7 லிங்காயத் அமைச்சர்களில் சசிகலா ஜோல்லே என்ற பெண் அமைச்சர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

அமைச்சரவையில் 4 எம்.எல்.ஏ.-க்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்களும் மற்றவர்கள் பாஜக மற்றும் லிங்காயத்துகளின் பெரிய ஆதரவு தளங்களைக் கொண்ட வடக்கு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளனர்.

பாஜக அடுத்து ஒரு பெரிய மாநிலத்தின் கடலோரப் பகுதியை அமைச்சரவையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள, எம்.எல்.சி கோட்டா சீனிவாஸ் பூஜாரி மிக பின்தங்கிய பில்லவா சமூகத்தைச் சேர்ந்தவர்.

கடந்த மாதம் கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்த கட்சிக்கு உதவிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக வெகுமதி அளிக்கும் விதமாக, அதிருப்தி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனத தளம் எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்த வொக்கலிகா சமுகத்தைச் சேர்ந்த இளம் பெங்களூரு எம்.எல்.ஏ டாக்டர் சி.என்.அஸ்வத்நாராயனுக்கு அமைச்சரவையில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.

கோலார் முல்பகலைச் சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ எச்.நாகேஷ் இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கூட்டணி அரசாங்கத்தில் தனக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டதால் விலகியவர் பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டார், வி.சோமன்னா, சி.சி.பாட்டீல், லக்ஷ்மன் சவாடி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

பாஜகவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிக்கு வழிநடத்த சட்டமன்றத்தில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் ஜே.சி.மதுசாமி லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் அமைச்சரவையில் உள்ளார்.

தலித் தலைவர் கோவிந்த் கர்ஜோல், பிற்படுத்தப்பட்ட சாதியான குருபா தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா, வொக்கலிக்கா சாதியைச் சேர்ந்தவர்களான ஆர்.அசோகா மற்றும் சி.டி.ரவி, பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார், பழங்குடியினரில் இருந்து பெல்லாரியைச் சேர்ந்த பி.ஸ்ரீராமுலு மற்றும் இதர பாஜகவினர் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சர் சசிகலா ஜோல்லே உடன் ஒரு தலித் எம்.எல்.ஏ.வான பிரபு சவான் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த 17 உறுப்பினர்கள் அமைச்சராக இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றனர்.

கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஜகவுக்கு உதவிய 15 காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிருப்தியாளர்களில் பலரைச் சேர்ப்பதில் எடியூரப்பா ஆர்வமாக உள்ளார். மேலும், அமைச்சரவையில் 17 அமைச்சர் பதிவிகளை காலியாக விட்டுள்ளார். கடந்த மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close