Advertisment

தொற்றுநோய் போது விமானத்தில் கொரோனா பரவும் அபாயம் என்ன? புதிய ஆராய்ச்சி

ஒரு விமானத்தில் யாராவது கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன? மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறிஞர்கள் தலைமையிலான புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
New Update
covid 19

தொற்றுநோய் போது மாஸ்க் மற்றும் ஷீல்டு அணிந்தபடி விமானத்தில் பயணிகள். (File Photo)

விமானத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன? மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வு, ஜூன் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலக்கட்டத்தில் - அமெரிக்க உள்நாட்டு விமானங்களில் பயணித்தவர்களின் - ஒரு கணக்கீட்டை வழங்கியது. விமானத்தில் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மதிப்பிட்டது.

Advertisment
  • 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜனவரியில், தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது, இரண்டு மணிநேரம் பயணிக்கும் விமானத்தில் 1,000 இல் ஒருவருக்கு மேல்
  • 2020 கோடையில், தொற்றுநோய் சற்று குறைவாக இருந்தபோது, இரண்டு மணி நேர விமானத்தில் சுமார் 6,000 பேரில் ஒருவர்
  • ஜூன் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை 2,000 பேரில் ஒருவர்

தற்போதைய நிலைமைகள் ஆய்விலிருந்து வேறுபடுகின்றன என்பதை MIT ஒப்புக்கொண்டது. அமெரிக்க உள்நாட்டு பயணிகளுக்கு இனி மாஸ்க் தேவையில்லை; ஆய்வின் காலப்பகுதியில், விமான நிறுவனங்கள் பொதுவாக நடுத்தர இருக்கைகளை நிரப்பவில்லை, அதை அவை இனி செய்யாது; புதிய கொரோனா மாறுபாடு, ஆய்வுக் காலத்தில் இருந்த வைரஸை விட அதிகமாகத் தொற்றக்கூடியவை.

அந்த காரணிகள் தற்போதைய ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்றாலும், பிப்ரவரி 2021 முதல் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர், இது இன்றைய ஆபத்தைக் குறைக்க உதவும் என்று வெளியீடு கூறியது.

"இருப்பினும், கொரோனா பரவுதல் தொடர்பான விமானப் பயணப் பாதுகாப்பு பற்றிய பொதுவான மதிப்பீட்டையும், எதிர்கால ஆய்வுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையையும் இந்த ஆய்வு வழங்குகிறது" என்று அது கூறியது.

கொரோனா பரவல் பற்றிய பொது சுகாதார புள்ளிவிவரங்கள், கொரோனா தொற்று வழிமுறைகள் பற்றிய சக ஆய்வுகளின் தரவு, பொதுவாக விமான நிறுவனங்களில் வைரஸ்கள் பரவுவது- சர்வதேச விமான நிறுவனங்களில் கொரோனா பரவுவது பற்றிய தரவு மற்றும் அமெரிக்க உள்நாட்டு ஜெட் விமானங்களில் இருக்கை-ஆக்கிரமிப்பு விகிதங்கள் பற்றிய சில கிடைக்கக்கூடிய தொழில்துறை தரவுகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.  அவர்கள் பின்னர் விரிவான மாதிரியாக்கம் மூலம் அமெரிக்க உள்நாட்டு விமானங்களில் பரவல் அபாயங்களை மதிப்பிட்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் தங்களின் மதிப்பீடுகளுக்கு இரண்டு மணி நேர விமானத்தைப் பயன்படுத்தினர், ஏனெனில் இது அமெரிக்காவில் உள்நாட்டு விமானத்தின் சராசரி கால அளவாகும். சிங்கிள் ஏசில் (aisle), இருபுறமும் மூன்று இருக்கைகள் மற்றும் சுமார் 175 பயணிகளுக்கான வழக்கமான கேபசிட்டியுடன் போயிங் 737 மற்றும் ஏர்பஸ் A320 விமான அமைப்புகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்,

இதுபோன்ற பெரும்பாலான விமானங்கள் உயர் செயல்பாட்டு HEPA காற்று-சுத்திகரிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன, அவை காற்றில் பரவும் நோய்களின் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் சயின்ஸ் இதழில், ‘Covid-19 infection risk on U.S. domestic airlines’ என்ற கட்டுரை இந்த மாதம் வெளிவந்தது.

Source: MIT

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment