Advertisment

இந்தியாவில் ரஷ்யாவைப் பற்றி பேசிய ஜெர்மனி கப்பற்படை தளபதி; வீட்டுக்கு அனுப்பிய அந்நாட்டு அரசு

2014ம் ஆண்டு மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட க்ரீமியன் தீபகற்பத்தை ஒரு போதும் உக்ரைனால் பெற இயலாது என்று கூறியது தற்போது நிலவி வரும் சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
removal of Germany’s navy chief

ஜனவரி 21ம் தேதி அன்று மனோகர் பரிக்கர் ராணுவ கல்வி நிறுவனத்தில் சிறப்புரையாற்றிய ஜெர்மனி நாட்டின் கப்பற்படை தலைவர் வைஸ் - அட்மிரல் காய் அச்சிம் ஸ்கோன்பாக் ( Kay-Achim Schonbach) (Twitter/@IDSAIndia)

removal of Germany’s navy chief : ஜெர்மனி நாட்டின் கப்பற்படை தலைவர் வைஸ் அட்மிரல் காய் அசிம் ஸ்கோன்பாக் (Kay-Achim Schönbach) ஜனவரி 22ம் தேதி அன்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவில் அவர் பேசிய சிறப்புரையில் இடம் பெற்றிருந்த சில கருத்துகள் ஜெர்மனியில் விமர்சனத்தை ஏற்படுத்தியதோடு, உக்ரைனில் ஒரு அரசியல் குழப்பங்களையும் தூண்டியது.

Advertisment

நடந்தது என்ன?

வைஸ் அட்மிரல் ஸ்கோன்பாக், புது டெல்லியில் அமைக்கப்பட்டிருக்கும் மனோகர் பரிக்கர் இன்ஸ்டிட்யூட் ஃபார் டிபென்ஸ் ஸ்டடிஸ் அண்ட் அனலைசிஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மரியாதைக்கு உரியவர். 2014ம் ஆண்டு மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட க்ரீமியன் தீபகற்பத்தை ஒரு போதும் உக்ரைனால் பெற இயலாது என்று கூறியுள்ளார்.

ஆயிரக் கணக்கான ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டு எல்லையில் நிலை கொண்இருக்கும் போது இத்தகைய கருத்துகள் வெளியாகியுள்ளது. நாட்டோ உடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரம் புடினின் ராணுவத்தினர் உக்ரைன் நாட்டிற்குள் கால்பதிப்பார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கணித்துள்ளார்.

ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விவகாரம் தொடர்பாக கப்பற்படை தளபதியிடம் விளக்கம் கேட்டது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை ஸ்கோன்பாக் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் இந்தியாவில் பேசப்பட்ட பாதுகாப்பு கொள்கை தொடர்பான கருத்துகள் அனைத்தும் அந்த நேரத்தில் பேசப்பட்ட தன்னுடைய சொந்த கருத்துகள் என்று பதிவு செய்திருந்தார். மேலும் அக்கறையின்றி அந்த சூழலை தவறாக புரிந்து கொண்டேன். அவ்வாறு தான் செய்திருக்க கூடாது. இது கட்டாயமாக ஒரு தவறு தான் என்று ஜெர்மன் மொழியில் ட்வீட் செய்திருந்தார். மன்னிப்பு கேட்டதோடு மட்டுமின்றி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் க்றிஸ்டைன் லாம்ப்ரெச்ட்டிடம் பணியில் இருந்து என்னை உடனே விடுவிக்கம்படியும் கூறியதாக ராய்ட்டர்ஸ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளது. தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஏற்றுக் கொண்டார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்கோன்பாக் நிகழ்வின் போது கூறியது என்ன?

உக்ரைனை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்னவென்றால் ஸ்கோன்பாக் க்ரீமியாவை பற்றி கூறியது தான். சட்டத்திற்கு புறம்பாகவே அந்த தீபகற்பம் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது என்று மேற்கத்திய நாடுகள் கருதுகின்ற நிலையில் அவருடைய கருத்து, க்ரீமியாவை முழுமையாக உக்ரைன் இழந்துவிட்டது என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“க்ரீமியன் தீபகற்பம் போய்விட்டது. இனி நிச்சயமாக திரும்ப கிடைக்காது. இது தான் உண்மை. உக்ரைன் மண்ணில் இருக்கும் மிகச்சிறிய இந்த இடத்தின் மீது ரஷ்யா ஆர்வம் காட்டுகிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை. இது முட்டாள் தனமானது. புடின் அழுத்தம் தருகிறார். ஏன் என்றால் அது அவரால் முடியும். அவர் ஐரோப்பிய யூனியனை பிரிக்கிறார் என்று அவருக்கு தெரியும். புடினுக்கு மரியாதை தான் தேவைப்படுகிறது. அதை வழங்குவது எளிமையான ஒன்று மட்டும் இல்லை. மாறாக அதிபருக்கு தகுதியான ஒன்றும் கூட.

தான் ஒரு ரோமன் காத்தலிக் என்றும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர் என்றும் கூறிய அவர், சீனாவுக்கு எதிராக மேற்குலகின் பக்கம் ரஷ்யா இருப்பது முக்கியம் என்று கூறினார்.

அங்கும் எங்களுக்கு ஒரு கிறித்துவ நாடு உள்ளது. புடினும் கூட கிறித்துவர் தான். அவர் நாத்திகர் என்றாலும் அது ஒரு பொருட்டல்ல. ஜனநாயக நாடாக இல்லை என்றாலும், இப்படி ஒரு நாட்டை எங்கள் பக்கம் வைத்திருப்பது ஒருவேளை ரஷ்யாவை சீனாவிலிருந்து விலக்கி வைக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

உக்ரைன் - ரஷ்யா கள நிலவரம் என்ன?

மேற்கு நாடுகளை பொறுத்தமட்டில் ரஷ்யா - உக்ரைனுக்கு இடையே ஒரு யுத்தம் ஏற்படுவதற்கான சூழல் நிலவி வருகிறாது. ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. நாட்டை கைப்பற்றும் முயற்சியில் இறங்கும் என்பது தெளிவாகிறது. உக்ரைன் தலைநகர் கியேவ்வில் (Kyiv) ரஷ்யாவுக்கு ஆதரவை வழங்கும் தலைமையை நிலை நிறுத்த புடின் விரும்புவதாக ப்ரிட்டிஷ் அதிகாரிகள் சனிக்கிழமை கூறினார்கள்.

ஜனவரி 19 அன்று, ஜனாதிபதி பைடன் தற்போதைய நிலைமையின் கடுமையான முன்கணிப்பை வழங்கினார்.

“மேற்கத்திய நாடுகளைச் சோதிப்பார், அமெரிக்காவையும் நேட்டோவையும் அவரால் முடிந்தவரை கணிசமாகச் சோதிப்பார் என்று நான் நினைக்கிறேனா? என்று கேட்டால் ஆம் என்று தான் கூறுவேன். ஆனால், அதற்கு அவர் ஒரு தீவிரமான மற்றும் கடுமையான விலையை கொடுப்பார். இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன, அவருக்கு ஏற்படும் இழப்பு என்பதை அவர் இன்னும் கணிக்கவில்லை. ஆனால் இந்த முடிவை நினைத்து அவர் நிச்சயம் வருந்துவார்” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டால் புடினுக்கு இப்போது ஏதாவது செய்ய வேண்டும். எனவே அவர் கட்டாயமாக முன்னேறிச் செல்வார் என்று கூறினார்.

உக்ரைன் மீதான உடனடிப் படையெடுப்பு என்று மேற்குலகம் கருதுவதைத் தடுக்கும் முயற்சியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி வி. லாவ்ரோவை ஜெனீவாவில் சந்தித்து பேசினார்.

நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வதை நிறுத்துமாறும், முன்னாள் சோவியத் நாடுகளில் ராணுவ தளங்களை நிறுவ வேண்டாம் என்றும் அல்லது அவர்களுடன் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை உருவாக்க வேண்டாம் என்றும் ரஷ்யா அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்யா முன்னாள் சோவியத் நாடுகளை தனது சொந்த செல்வாக்கு மண்டலமாக கருதுகிறது.

இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையானது மற்றும் கணிசமானவை என்று ப்ளின்கென் கூற ஆக்கப்பூர்வமானதும் பயனுள்ளதுமாக அமைந்தது என்று லாவ்ரோவ் கூறியுள்ளார். நெருக்கடியைத் தணிப்பதற்கான இறுதி முயற்சியாக பிடனுக்கும் புடினுக்கும் இடையே உச்சிமாநாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது. ஆனால் நேட்டாவில் இணைய உக்ரைன் மற்றும் இதர நாடுகளுக்கான உரிமை குறித்து பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என்றும் ப்ளின்கென் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் ஜெர்மனியின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் தங்களை பாதுகாக்க ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. கியேவில் இருந்து உதவிகள் வேண்டி கோரிக்கைகள் வந்த போதும் ஜெர்மனி இதுவரை ஏதும் செய்யவில்லை.

ஞாயிறு நாளிதழான Welt am Sonntag க்கு அளித்த பேட்டியில் ஜெர்மனியின் நிலைப்பாட்டை விளக்க முயன்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்றிஸ்டைன். "நாங்கள் க்யேவிற்கு ஆதரவை அளிக்கின்றோம். அங்கே நிலவி வரும் தீவிரத்தை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம். இதற்கு ஆயுதங்களை அனுப்புதல் உதவியாக இருக்காது. இது தொடர்பான உடன்படிக்கை ஜெர்மன் அரசாங்கத்தில் உள்ளது.

அதிபர் ஒலாஃப் ஸ்கோல்ச்ஷ் கடந்த வாரம், எல்லைகளை வலுக்கட்டாயமாக நகர்த்தக் கூடாது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்குப் பிறகு, அமைதியாக இருப்பது ஒரு விவேகமான முடிவல்ல என்று குறிப்பிட்டார்.

ஸ்கோன்பாக்கின் கருத்திற்கு உக்ரைனின் பதில் எப்படி இருந்தது?

க்யேவ் இந்த கருத்தால் உடைந்தது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் தூதுவர் அங்கா ஃபெலெதுசென் ஸ்கோன்பாக்கின் ஏற்றுக்கொள்ள முடியாத தன்மை கொண்ட கருத்துகளை திரும்பப் பெற அழைக்கப்பட்டார். ஜெர்மனியர்கள் ஷான்பாக்கின் அறிக்கைகளை பகிரங்கமாக மறுக்க வேண்டும் என்றும் உக்ரேனியர்கள் கோரினர்.

சனிக்கிழமையன்று, உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தனது நாட்டின் நிலைப்பாட்டை ட்வீட் செய்தார். அதில் ஸ்கோன்பாக்கின் கருத்துகளை குறிப்பிடவில்லை.

உக்ரைனுக்கு ஆயுதங்களை மாற்றுவது சாத்தியமற்றது குறிப்பாக மூன்றாம் தரப்பினருக்கு அனுமதி வழங்குவது, க்ரிமியாவை திரும்பப் பெற இயலாத தன்மை, SWIFT இலிருந்து ரஷ்யாவைத் துண்டிக்க தயக்கம் போன்ற ஜெர்மனியின் சமீபத்திய அறிக்கைகள் தங்கள் நாட்டின் உறவு நிலைக்கும், தற்போதைய பாதுகாப்பிற்கும் பொருந்தவில்லை என்று கூறினார், மேலும் தன்னுடைய இரண்டு ட்வீட்களில் ரஷ்யாவுடனான மேற்கு நாடுகளின் ஒற்றுமை முன்னெப்போதையும் விட முக்கியமானது. அதை அடையவும் ரஷ்ய கூட்டமைப்பைத் தடுக்கவும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். ஜெர்மனி கூட்டாளிகள் இது போன்ற வார்த்தைகளை வெளியிடுவதையும், ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும், உக்ரைன் மீது புதிய தாக்குதல் நடத்த புடினை தூண்டுவதையும் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக ஜெர்மனி அளித்த ஆதரவிற்கு குலேபா நன்றி தெரிவித்தார் 2014 ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியின் ஆதரவிற்கும், ரஷ்ய-உக்ரேனிய ஆயுத மோதலைத் தீர்ப்பதற்கான அதன் இராஜதந்திர முயற்சிகளுக்கும் உக்ரைன் நன்றி தெரிவிக்கிறது. ஆனால் ஜெர்மனியின் தற்போதைய அறிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், இதுநாள் வரை ஆதரவு மற்றும் முயற்சிக்கு எதிராகவும் தற்போதைய அறிக்கைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா - உக்ரைன் விவகாரங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டு பேசினாரா ஸ்கோன்பாக்?

இல்லை.MP-IDSA கூட்டத்தில் அவர் ஜெர்மனியின் இந்தோ பசிபிக் உறவுகள் குறித்து மட்டுமே பேசினார். சீனா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் உரையாடினார். இந்த பிராந்தியத்தில் இந்தியா முக்கிய கூட்டாளியாக செயல்படுகிறது என்று பேசிய அவர் இரண்டு நாடுகளும் கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மூலோபாய ஈடுபாட்டை மேம்படுத்தவும் இரு நாடுகளும் வழிகளை ஆராய வேண்டும் என்றார். சீனாவை பற்றி பேசிய அவர் இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு பெய்ஜிங் ஒரு முக்கிய கூட்டாளியாக உள்ளது என்று கூறினார். ஆனால் சர்வதேச எல்லைகளில் அதன் பிடிவாதமான நடத்தை மூலம் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவும் ஜெர்மனியும் இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையாக போராட வேண்டும் என்று கூறினார். கொடுங்கோல்காரர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் சீனா பணத்தை கொடுத்து அந்நாட்டு வளங்களை கைப்பற்றும் உரிமையை பெறுகிறது என்று குறிப்பிட்டார்.

முன்னாள் கடற்படைத் தலைவரின் புது டில்லி வருகை, கடற்படைக் கப்பலான பேயர்ன் மும்பையில் நிறுத்தப்பட்டதை ஒட்டி அமைந்தது. தனது இந்திய சகாக்களுடன் உயர்மட்ட ஆலோசனைக்காக அவர் டெல்லிக்கு வருகை புரிந்தார். பல இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களையும் ஸ்கோன்பாக் சந்தித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Ukraine Russia Germany
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment