scorecardresearch

New research: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஓமிக்ரான் மாறுபாடு தான் காரணமா?

ஓமிக்ரான்’ அதன் முன்னோடிகளைப் போலல்லாமல், மற்ற அனைத்து மாறுபாடுகளாலும் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளைத் தவிர்க்கும் திறன் கொண்டதாக இருந்தது.

Covid 19
The current wave of Covid 19 highlights a high risk of reinfection by the Omicron variant

கொரோனா வைரஸின் தற்போதைய அலையானது, SARS-CoV-2 இன் ஓமிக்ரான் மாறுபாட்டால் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது. இது எதனால்?

அசல் SARS-CoV-2 அல்லது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஸீட்டா அல்லது ஓமிக்ரான் (துணை மாறுபாடு BA.1) மாறுபாடுகளால் பாதிக்கப்பட்ட 120 பேரின் ஆன்டிபாடி நியூட்ரலைசேஷன் திறனை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஓமிக்ரான்’ அதன் முன்னோடிகளைப் போலல்லாமல், மற்ற அனைத்து மாறுபாடுகளாலும் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளைத் தவிர்க்கும் திறன் கொண்டதாக இருந்தது என்று ஜெனீவா பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் வைரஸ் நோய்களுக்கான மையம் (the University’s Centre for Emerging Viral Diseases) மற்றும் ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை நேச்சர் இதழில் வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களில், நடுநிலைப்படுத்தும் திறன் (neutralisation capacity) குறைந்தாலும், அது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை விட மிக உயர்ந்ததாகவே உள்ளது. தடுப்பூசிக்கு பிறகான, நோய்த்தொற்றுகளின் நிகர அதிகரிப்பு, அதேநேரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவுக்கு ஓமிக்ரான் ஏன் காரணம், என்பதை இது விளக்குகிறது.

தடுப்பூசி போடுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ, தடுப்பூசி போடாத, அல்லது தடுப்பூசி போட்ட மற்றும் வெவ்வேறு மாறுபாடுகளில் ஒன்றால் பாதிக்கப்பட்ட 120 தன்னார்வலர்களிடமிருந்து ஆராய்ச்சிக் குழு, இரத்த மாதிரிகளை எடுத்தது.

முதல் நோய்த்தொற்றின் போது உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள் SARS-CoV-2 இன் வெவ்வேறு மாறுபாடுகளை, எவ்வாறு நடுநிலையாக்க முடிந்தது என்பதை தீர்மானிப்பதே இதன் நோக்கமாகும்.

ஒமிக்ரான்’ ஏற்கெனவே இருக்கும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்ப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று ஆய்வாளர் பெஞ்சமின் மேயர் கூறியதாக அந்த வெளியீடு குறிப்பிட்டுள்ளது.

உண்மையில், தடுப்பூசி போட்ட மக்களில், SARS-CoV-2 க்கு எதிரான ஆன்டிபாடி அளவுகள், நோய்த்தொற்றுக்குப் பிந்தைய நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே உருவாக்கியவர்களை விட, தோராயமாக 10 மடங்கு அதிகம். மேலும், ஹைப்ரிட் இம்யூனிட்டி எனப்படும் இரண்டின் கலவையானது, இன்னும் அதிக ஆன்டிபாடி அளவை பராமரிப்பதாக தெரிகிறது.

எனவே, ஓமிக்ரான் தற்போதுள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்த்து, தொற்றுநோயை ஏற்படுத்தும், ஆனால் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு, ஓமிக்ரானுடன் இருந்தாலும், தடுப்பூசிக்குப் பிறகும் குறைக்கப்படுகிறது. ஆயினும்கூட, SARS-CoV-2 மாற்றமடையும் ஒரு வியக்கத்தக்க திறனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது… குறிப்பாக BA.5 தோன்றியதில் இருந்து தொற்றுநோய் கடுமையாக உயர்ந்து வருவதால், இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் இசபெல்லா எக்கர்லே கூறியதாக வெளியீடு தெரிவிக்கிறது.

(Source: University of Geneva)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: The current wave of covid 19 highlights a high risk of reinfection by the omicron variant