Aashish Aryan
The dominance of big tech : புதன்கிழமை, அமெரிக்க பிரதிநிதிகள் சபை அமேசான், ஆப்பிள், கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட இரு தரப்பு விசாரணையின் அறிக்கையை சமர்ப்பித்தது. 449 பக்க அறிக்கை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரிக்க வேண்டும் என்றும் “எதிர்கால இணைப்புகள் மற்றும் ஆதிக்க மேடையில் கையகப்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிரான ஊக தடை” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதிகள் சபை ஏன் விசாரித்தது?
நிறைய நிறுவனங்கள் பல்வேறு நாடுகளின் அரசியல் ரேடார்களில், பெரிய முதலீட்டார்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள். அவர்கள் போட்டிகளில் முதலிடம் பிடிக்க, போட்டியாளர்களை வாங்குகிறார்கள் அல்லது போட்டியாளர்களுடன் விற்பனையாளர்கள் பணியாற்றக் கூடாது என்பதை உறுதி செய்கிறார்கள். உதாரணத்திற்கு, அமெரிக்க காங்கிரஸ் ஆப்பிளிடம் விசாரித்தது. குழந்தைகளின் திரை நேரத்தை பெற்றோர்கள் ஒழுங்கு செய்வதற்கான ஒரு செயலியை ப்ரோமோட் செய்தவதற்காக, போட்டியாளர்களின் செயலியை பாதுகாப்பு இல்லை என்று கூறியதா என்று கேட்டது அமெரிக்க காங்கிரஸ்.
ஆன்லைனில் போட்டியின் நிலையை மறுஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக, ஜூன் 2019 முதல் யு.எஸ். சபை ஆப்பிள், அமேசான், கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை ஆராய்ந்தது, தங்களுக்கான தரவுகளின் ஓட்டத்தையும் அவற்றின் போட்டிகளையும் எவ்வாறு கட்டுப்படுத்தின என்பதையும் ஆராய்ந்தது. இது தொடர்பாக 1.3 மில்லியன் ஆவணங்களை சேகரித்தது, இந்த நிறுவனங்களில் உள்ள பல ஊழியர்களிடமிருந்து ரகசிய சாட்சியங்களைக் கேட்டது, மேலும் நிறுவனத்தின் தலைவர்களான ஜெஃப் பெசோஸ் (அமேசான்), டிம் குக் (ஆப்பிள்), மார்க் ஜுக்கர்பெர்க் (பேஸ்புக்) மற்றும் சுந்தர் பிட்ட்சி (கூகிள்) ஆகியோரை விசாரணை செய்தது. இந்நிறுவனங்கள் டிஜிட்டல் சந்தைகள் மீது தங்கள் சக்தியை போட்டி எதிர்ப்பினை தவிர்த்து தவறான வழிகளில் எவ்வாறு வேரூன்றியது என்று கேள்வி எழுப்பியது அமெரிக்க சபை.
விசாரணை முடிவுகள்
இந்த குழு பெசாஸ், குக், மார்க் மற்றும் பிச்சை ஆகியோர்களின் பதில்களை கவனித்தது. அவை பெரும்பாலும், தவிர்க்கப்பட்டவை அல்லது பதிலளிக்காதவை. இந்த பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களால் கருதப்படும் அதிகாரங்கள் குறித்தும், அவர்கள் தங்களை ஜனநாயக மேற்பார்வைக்கு அப்பாற்பட்டவர்களாக கருதிக் கொண்டார்களா என்றும் புதிய கேள்விகளை எழுப்பியது.
இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இப்போது ஒரு முக்கிய விநியோகத்தின் நுழைவாயில் காவலராக செயல்படுகின்றன, இதன் பொருள் அந்தந்த பிரிவுகளில் என்ன நடக்கிறது என்பதை கட்டுப்படுத்த அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. சந்தைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்த நிறுவனங்கள் நமது பொருளாதாரத்தில் வெற்றியாளர்களையும் தோல்வியுற்றவர்களையும் கண்டடையலாம்.
அவர்கள் மிகப்பெரிய சக்தியைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதிகப்படியான கட்டணங்களை வசூலிப்பதன் மூலமும், அடக்குமுறை ஒப்பந்த விதிமுறைகளை விதிப்பதன் மூலமும், அவர்களை நம்பியுள்ள மக்களிடமிருந்தும் வணிகங்களிடமிருந்தும் மதிப்புமிக்க தரவைப் பெறுவதன் மூலமும் அதை துஷ்பிரயோகம் செய்கிறார்கள், ”என்று சபாநாயகர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஒரு வகையில், இந்த நிறுவனங்கள் அந்தந்த தளங்களுக்காக சந்தையை இயக்குகிறது, அதே நேரத்தில் அதில் போட்டியும் இடுகிறார்கள். அவர்கள் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, நிறுவனங்கள் “சுய விருப்பம், கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம் ” ஆகியவற்றை மீட்டெடுத்துள்ளன.
to read this article in English
குழு என்ன பரிந்துரைத்துள்ளது?
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் “கட்டமைப்பு பிரிவுகளுக்கு” அழுத்தம் கொடுப்பது ஒரு பரிந்துரை. இதன் அடிப்படை என்னவென்றால், இந்த நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களாக உடைக்கப்பட வேண்டும், எனவே தற்போது டிஜிட்டல் சந்தையில் இந்நிறுவனங்கள் செலுத்தும் அதிக செல்வாக்கைக் அப்போது கொண்டிருக்க முடியாது என்பதை உறுதிசெய்கின்றன.
மற்றொரு பரிந்துரையாக இந்நிறுவனங்கள் வணிகத்திற்கு அருகே இருக்கும் பாதையில் பயணிக்க தடை விதிப்பதாகும்.
மூன்றாவது, முன் கூட்டியே தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்துதல் அல்லது இணைத்தல் ஆகியவற்றிற்கான ஊகத்தடை இருக்க வேண்டும். மார்க்கின் நிறுவனம் இன்ஸ்டாகிராமையும், வாட்ஸைப்பையும் வாங்கியது. பணத்தை பயன்படுத்தி போட்டியாளர்களை வாங்குதல் மற்றும் மற்ற போட்டியாளர்களை ஆக்ரோஷமாக விரட்டுதல் போன்ற காரணங்களுக்காக மார்க் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தியாவில் இந்த பெரிய நிறுவனங்களின் செல்வாக்கு குறித்து விசாரணை என்ன கண்டுபிடித்தது?
இந்தியாவில் போட்டியைத் தடுப்பதில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு அமெரிக்க குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் கூகிளுக்கு எதிராக நடக்கும் பல்வேறு நம்பிக்கையற்ற ஆய்வுகளை குறிக்கிறது. கூகுள் ஒழுங்குநிலை ரன் – இன்களை கொண்டுள்ளது. குறிப்பாக காம்பெட்டிசன் கமிசன் ஆஃப் இந்தியா. கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுளின் கமர்சியல் ஃப்ளைட் சர்ச் ஆப்சன், தேடுபொறியில் இருக்கும் ஆதிக்க நிலை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஸ்மார்ட் டிவி சந்தையில் இருக்கும் நிலைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது சி.சி.ஐ.
மொபைல் ஆண்ட்ராய்டு சந்தையில் கூகிள் தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதிற்காக இந்தியாவின் ஆண்ட்டி ட்ரஸ்ட் குழு கூகுளை குற்றவாளியாக அறிவித்தது. சாதனங்களை உருவாக்கும் நிறுவனத்தினர், பிற இயங்கு தளங்களில் இயங்கும் போன்களை பயன்படுத்த நியாயமற்ற நிபந்தனைகளை போட்டது.
தன்னுடைய 14 பக்க அறிக்கையில், மொபைல் போன்களை உருவாக்குபவர்களிடம் மொத்த கூகுள் மொபை சேவை பேக்கினை முன்பே – இன்ஸ்டால் செய்ய கூறுவது நியாயமற்றது என்று கூறியது. மேலும் கூகுள் பட்டியலிடப்பட்ட செயலிகளை உயர் மற்றும் நியாயமற்ற கமிஷன் வழிமுறையைப் பின்பற்றுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை அமெரிக்க சபை கவனம் செலுத்துவதால், இந்நிறுவனங்கள் இந்தியாவில் சி.சி.ஐ உள்ளிட்ட கட்டுப்பாட்டாளர்களின் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில், தனிப்பட்ட மற்றும் தனிநபர் அல்லாத தரவின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதால், இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் பயனர்களிடமிருந்து சேகரிக்கும் தரவை எவ்வாறு நிர்வகிக்கின்றன மற்றும் பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆய்வை எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய இருக்கும் அமேசான் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை விலை நிர்ணயிக்கும் விதம் மற்றும் அவர்கள் போட்டிக்கு அவர்கள் கொடுக்கும் / மறுக்கும் இடம் ஆகியவை கண்காணிக்கப்படும்.
அமெரிக்க குழு பரிந்துரைகள் என்ன உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?
சபையின் பரிந்துரைகள் அமெரிக்க அரசாங்கத்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ சட்டபூர்வமாக பிணைக்கப்படவில்லை என்றாலும், அது அதிக கட்டுப்பாடுகளின் திசையில் செல்லலாம்.
எடுத்துக்காட்டாக, ஏகபோக மற்றும் போட்டி எதிர்ப்பு சட்டங்களை மீறுவதாகத் தோன்றும் நிறுவனங்களிடம் கடுமையான கேள்விகளைக் கேட்டு விசாரிக்கும் கலாச்சாரத்தை காங்கிரஸ் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று குழு கூறியுள்ளது. இணைப்புகள் மற்றும் சட்டத்தில் உள்ள சிக்கலான முன்மாதிரிகளை மீறுவது குறித்த சட்டத்திற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இந்த பரிந்துரைகள் இப்போது எந்தவொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களையும் நேரடியாக பாதிக்காது, ஆனால் உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் ஆய்வை அதிகரிக்கக்கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil