ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் பாதுகாப்பான இரகசிய வீட்டில் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் உயிரை இழந்தார் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜஹாகிரி.
இந்தச் சம்பவம் கடந்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி நடந்தது. அல் கொய்தா தலைவரான அய்மான் அல்-ஜஹாகிரியின் தலைக்கு அமெரிக்க 25 மில்லியன் (2.5 கோடி டாலர்) விலை நிர்ணயித்திருந்தது. எகிப்து நாட்டைச் சேர்ந்த மருத்துவரான அய்மான் அல் ஜவாஹிரி 2001 செப்.11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.
ஹெல்ஃபயர் ஆர்9எக்ஸ் ஏவுகணை
இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத்தில் மட்டும் அதிமுக்கியமான இரகசிய நடவடிக்கைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணையை கொண்டு இலக்கை எளிதில் அடைய முடியும். அதேநேரம் சேதாரமும் அதிக அளவில் இருக்காது.
இந்த ஏவுகணையை நிஞ்ஜா ஏவுகணை என்று அழைப்பார்கள். இது இலக்கை மிக துல்லியமாக எட்டும். ஏன் அருகில் உள்ள கட்டடங்களுக்கு கூட பாதிப்பு வராது.
இந்த ஏவுகணை அமெரிக்க படையில் நுழைந்தது எப்போது?
ஹெல்ஃபயர் ஆர்9எக்ஸ் ஏவுகணைகள் 2017ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவப் படையில் இணைக்கப்பட்டது. எனினும் இது குறித்து எந்தத் தகவலும் பொதுமக்களுக்கு தெரியாது.
இது தொடர்பான தகவல்கள் 2019ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு தெரியவந்தன. இந்த ஏவுகணைகள் ஹெல்ஃபயர் வகையை சேர்ந்தது ஆகும். இவைகளை சிறிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தரையில் உள்ள வாகனங்கள் மூலமாகவும் ஏவலாம். இவைகள் ஆளில்லா வான்வெளித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஹெல்ஃபயர் ஏவுகணைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன?
இந்த ஏவுகணைகள் 2017ஆம் ஆண்டு அப்போதைய அல்கொய்தா தலைவர் அ புகைர் அல் மஸ்ரியை கொல்ல பயன்படுத்தியதாக தகவல் வெளியானது.
மேலும் சிரியாவில் அல்கொய்தாவின் மற்ற தலைவர்களை கொல்ல பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.
ஹெல்ஃபயர் ஏவுகணைகள்
ஹெல்ஃபயர் என்பது ஹெலிபோர்ன் லேசர் ஃபயர் அண்ட் ஃபர்கெட் ஏவுகணை என்பதன் சுருக்கமாகும். இது ஆரம்ப காலக்கட்டத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்து டாங்கிகளை குறி வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
பின்னர் தரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் இலக்குகளை தாக்க ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) போன்று வடிவமைக்கப்பட்டன. இந்த ஏவுகணைகள் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் நார்த்ரோப் க்ரம்மன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
இந்த ஏவுகணைகளில் நிஞ்;ஜா ஏவுகணைகள் தவிர லாப்போ மற்றும் ரோமியா உள்ளிட்ட வகைகளும் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil