ஸ்மிதா நாயர், கட்டுரையாளர்
The evolution of razor wire: காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல இடங்களில், பாதுகாப்புப் படையினர் சுருள் கம்பிகளை சாலைகளில் வைத்து போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
கன்செர்ட்டினா என்கிற சுருள் கம்பி வேலிகள் பிராந்திய எல்லைகளிலும், உலகெங்கிலும் உள்ள மோதல் களங்களிலும், போராளிகள், பயங்கரவாதிகள் அல்லது அகதிகளை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
எப்படி இந்த பெயர் வந்தது
முள் அல்லது ரேஸர் கம்பி விரிவாக்கக்கூடிய சுருள் என்ற பெயரில் இருந்து ‘கன்செர்ட்டினா’ சுருள் கம்பிகள் என்ற பெயர் வந்தது. இது விரிவடைந்து சுருங்கும் அக்கார்டியன் என்ற ஒரு கையால் இயக்கக்கூடிய இசைக்கருவியை போன்றது. முதலாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட முள்வேலி தடைகளின் மேம்படுத்தப்பட்டதே இந்த கன்செர்ட்டினா என்கிற கம்பி சுருள் வேலிகள். இது இடைப்பட்ட முள்கள் அல்லது கூர்மையான சில்லுகள் கொண்ட தட்டையான, மடக்கக்கூடிய கம்பி சுருள்கள் காலாட்படையினரால் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டது. மேலும் இது எதிரிகளின் இயக்கத்தைத் தடுக்க அல்லது மெதுவாக்க போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன.
முள்கம்பி வேலியின் தொடக்க கால வடிவம்
ஆங்கிலேயரான ரிச்சர்ட் நியூட்டன் 1845 ஆம் ஆண்டில் முதல் முள்வேலியை உருவாக்கிய பெருமைக்குரியவர். பிரான்சின் லூயிஸ் பிரான்கோய்ஸ் ஜானினுக்கு "வைர வடிவ முள்கம்பிகள் கூடிய இரட்டை கம்பிக்கான முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் லூசியன் பி ஸ்மித் ஜூன் 25, 1867 அன்று தீ தடுப்பு இரும்பு கம்பியால் செய்யப்பட்ட புல்வெளி வேலிக்காக முதல் காப்புரிமை கோரி பதிவு செய்தார். அமெரிக்க தொழிலதிபர் ஜோசப் எஃப் கிளிடன் நவீன முள்வேலியின் தந்தை என்று கருதப்படுகிறார். சீரான இடைவெளியில் கூர்மையான முனைகளைக் கொண்டு பின்னப்பட்ட இரண்டு இழை கம்பி என்ற அவரது வடிவமைப்பு, 1874 இல் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக குறியீடுக்கு எதிராக ஒரு பிரபலமான சட்ட வெற்றியைப் பெற்றது.
ராணுவம் அல்லாத பயன்பாடுகளில் முள்கம்பி வேலி
முள்கம்பிவேலி ஆரம்பத்தில் ஒரு விவசாய நிலத்துக்கான வேலி கண்டுபிடிப்பாக இருந்தது. இது கால்நடைகளையும் ஆடுகளையும் அடைத்து வைப்பதை நோக்கமாகக் கொண்டது. இது மரம் வெட்டுதல் போலல்லாமல், பெரும்பாலும் தீ மற்றும் மோசமான வானிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இது மர வேலிகளைப் போலல்லாமல் தீ மற்றும் மோசமான வானிலையில் தாக்குப்பிடித்து இருந்தது.
அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தில், “ஏன் முள்கம்பி வேலிகள் மற்ற வேலிகளை விட சிறந்தது என்ற தலைப்பில், அது சிதைவதில்லை; அதன் வழியாகவோ மேலோ சிறுவர்கள் வர முடியாது. நாய்களோ பூனைகளோ அல்லது வேறு எந்த விலங்குகளும் உள்ளே வர முடியாது. அது உள்ளே, வெளியே மேலே, கீழே என பார்த்துக்கொண்டிருகிறது. அது வெளியே இருந்து உள்ளே செல்வதையும் உள்ளே இருந்து வெளியே செல்வதையும் தடுக்கிறது. அது முற்பகலில், நண்பகலில் சூரிய அஸ்தமனம் மற்றும் இரவு முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கிறது..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முள் கம்பி விரைவாகவே அதிகாரம் மற்றும் சொத்தின் குறியிடாக மாறியது. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் சமூக அரசியல் மற்றும் பொருளாதார நிலப்பரப்பை மாற்றியது. வரையறை செய்யப்படாத புல்வெளிகளை தனியார் சொத்துகளாக மாறியது. மேலும், குதிரையின் மீது ரோமிங் செல்லும் கவ்பாய்களை தேவைக்கதிகமாக பெருக்கியது.
முள் கம்பி வேலிகளின் பரிணாமம்
1898 ஆம் ஆண்டில் ஸ்பானிய-அமெரிக்கப் போரின்போது சாண்டியாகோ முற்றுகையிலும், 1899-1902 ஆம் ஆண்டு இரண்டாம் போயர் போரில் ஆங்கிலேயர்களால் ஆபிரிக்க மொழி பேசும் போயர் போராளிகளின் குடும்பங்களை அடைத்து வைப்பதற்காகவும் முள்வேலி இராணுவ பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டது.
முதலாம் உலகப் போரில் முள்வேலி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது - மற்றும் போர்க்களத்தில் ஆரம்பகால முள்கம்பி சுருள்களை மேம்படுத்திய பெருமை ஜெர்மன் இராணுவ பொறியாளர்களுக்கு உண்டு. மேற்கு முன்னணியில் உள்ள ஹிண்டன்பர்க் கோடு வழியாக நேச நாட்டு படையினரால் அமைக்கப்பட்ட முள்வேலியை அவர்கள் வட்டமாக சுற்றி அமைத்தனர். இது காலாட்படை தாக்குதலுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இரு தரப்பினரும் இறுதியில் கான்செர்டினா முள்கம்பி சுருளைப் பயன்படுத்தினர், இது பாரம்பரிய முள்வேலியைப் போலல்லாமல், உள்கட்டமைப்புக்கு அதிக அதரவு தேவைப்பட்டது. போர்க்களத்தில் எளிதாக பரப்புவதற்கும் முடிந்தது.
பயங்கரவாத ஊடுருவல்களைத் தடுப்பதற்காக கட்டுப்பாட்டு எல்லையில் இந்தியா அமைத்துள்ள வேலி இரும்பு கோணங்களுடன் கான்செர்டினா கம்பி சுருள்கள் வரிசையாக இருக்கும். ள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவின் போது கான்செர்டினா சுருள்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகின்றன. அவை இப்போது பொதுவாக இந்தியாவின் பிற இடங்களிலும் காணப்படுகின்றன, மேலும் அவை தனியார் சொத்துக்களையும் பாதுகாக்கப் பயன்படுகின்றன.