கச்சா எண்ணெயின் விலை, 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய்க்கு 139 டாலர் உயர்வை கண்ட இரண்டு வார காலத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை ஒரு பீப்பாய் விலை 100 டாலருக்கும் கீழே சரிந்தது. பிரெண்ட் கச்சா புதன்கிழமை ஒரு பீப்பாய்க்கு 102.7 டாலரை எட்டியது. இது ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பீப்பாய்க்கு 78.11 டாலரில் இருந்து 32 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏன் குறைவாக இருக்கிறது?
கச்சா எண்ணெய்யின் மிகப்பெரிய இறக்குமதியாளரான சீனாவில் கோவிட் -19 தொற்றுகளின் அதிகரிப்பு மற்றும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகலால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளை ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி காரணமாக குறைய உதவியுள்ளன.
கோவிட் -19 தொற்றுகள் பரவுவதைத் தடுக்க சீனா புதிய பொதுமுடக்கங்களை அறிவித்துள்ளது. தொற்று பரவல் அந்நாட்டில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் சீனாவின் எழுச்சியின் தாக்கம் குறித்த கவலைகள் விலை குறைவதற்கு உதவியுள்ளது.
2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஈரான் இடையே தனித்தனியாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்ற செய்திகளும் உலக சந்தையில் விநியோக கவலைகளை குறைத்துள்ளன. ஈரான், 2015ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தடைகளின் தளர்வுகளுக்கு ஈடாக அதன் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. அந்நாட்டின் மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஈரானுடனான பொருளாதார உறவுகளை பாதிக்காது என்பதற்கு உத்தரவாதம் கோரி ரஷ்யாவுடனான பேச்சுக்கள் நிறுத்தப்பட்டன.
இருப்பினும், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாய்க்கிழமை, இந்த ஒப்பந்தத்தின் கீழ் தனது பணியை தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ரஷ்யா எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் பெற்றுள்ளது என்று கூறினார். எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகள் நீக்கப்பட்டால், ஈரான் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை சில மாதங்களில் நாளொன்றுக்கு சுமார் 1.5 மில்லியன் பீப்பாய்கள் அதிகரிக்க முடியும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் அதன் தாக்கம் என்ன?
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. மேலும், அதிக கச்சா எண்ணெய் விலை பொதுவாக பம்பில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறது. இருப்பினும், நவம்பர் 4ம் தேதியில் இருந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 27 சதவிகிதம் உயர்ந்தாலும், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிலையானதாக வைத்திருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களுக்கான சர்வதேச விலைக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. “தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வளவு எண்ணெய் கிடைக்கிறது போன்ற பல சிக்கல்கள் உள்ளன” என்று பூரி நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஸ்விஃப்ட் (SWIFT) நிதி பரிவர்த்தனை செய்தி வெளியிடும் அமைப்பிலிருந்து ஏழு ரஷ்ய வங்கிகளை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்ததிலிருந்து ரஷ்யா கச்சா எண்ணெய் சரக்குகளை தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இதனால், ரஷ்ய எண்ணெய் சரக்குகள் வாங்குபவர்களைக் கண்டறிவது கடினம். உக்ரைன் மீது படையெடுக்கும்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதால் ஏற்படும் நற்பெயருக்கு சேதம் ஏற்படக்கூடும் என்பதால், சில கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்கு எதிராக முடிவு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.