Advertisment

வாரத்திற்கு 4 நாள் வேலைத் திட்டம்: எப்படி வரவேற்பு பெறுகிறது?

வாடகை, மின்சார பில்கள் மற்றும் பிற செலவுகளை குறைத்து முதலாளிகளின் சுமையை குறைக்கிறது.

author-image
WebDesk
New Update
The four-day work week model gaining ground amid the pandemic

 Rahel Philipose 

Advertisment

The four-day work week model gaining ground amid the pandemic :  கொரோனா தொற்று இயல்பு வாழ்க்கையை தலைகீழாய் மாற்றி, வேலையில்லா திண்டாட்டத்தை உயர்த்தி வரும் நேரத்தில், உலகெங்கிலும் உள்ள முதலாளிகள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, செலவை குறைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு பணியிட மாதிரிகளை முயன்று வருகின்றனர்.

வீட்டில் இருந்து வேலை பார்த்து வருவது கூட தற்போது புதிய இயல்பு வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில், சிலர் நான்கு நாள் வேலை வாரம் (Four-day work week) போன்ற தீவிரமான மற்றும் நீண்ட கால விருப்பங்களை பரிசீலித்து வருகின்றனர். பல உலகத் தலைவர்களும் தொழிற்சங்கங்களும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க நான்கு நாள் வேலை வாரத்தை முன்மொழிந்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்டில், ஜெர்மனியின் மிகப்பெரிய தொழிற்சங்கமான ஐ.ஜி. மெட்டல் வெகுஜன பணிநீக்கங்கள் மற்றும் சம்பள குறைப்புகளை தடுக்க நான்கு நாள் வேலை வாரத்திற்கு அழுத்தம் கொடுத்தது.

நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாற வேண்டும் என்று கூறி வரும் உலக தலைவர்களில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடெர்ன் மற்றும் ரஷ்ய பிரதமர் ட்மிட்ரி மெத்வதேவ் ஆகியோரும் அடங்குவர். சுருக்கப்பட்ட பணி அட்டவணைகள் பல ஆய்வுகளுக்கு உட்பட்டவை, அவை உற்பத்தித்திறன் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை இரண்டும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நான்கு நாள் வேலை வாரம் என்றால் என்ன?

ஐந்து நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளை நான்கு நாளில் செய்து முடிக்க வேண்டும் என்பது இந்த நான்கு நாள் வேலை வாரம் கிடையாது. அதற்கு பதிலாக, வேலை நாட்களும், வேலை நேரங்களும் (முழு நேர ஊழியர்களுக்கு) குறைக்கப்படும் என்பது தான். மிகவும் வளர்ச்சி அடைந்த வடிவத்தில், ஒவ்வொரு வாரமும் குறைவான நேரம் அவர் வேலை செய்தாலும் அவருக்கு அதே அளாவு சம்பளம் வழங்கப்படும். வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, பல ஆய்வுகள் பணியிட உற்பத்தித்திறன் மற்றும் பணியாளர் திருப்தி ஆகிய இரண்டையும் இந்த திட்டம் கணிசமாக உயர்த்தியுள்ளன. கூகிள் இணை நிறுவனர் லாரி பேஜ் உட்பட பல உயர் அதிகாரிகள் நான்கு நாள் வேலை வாரத்திற்கு ஆதரவாக உள்ளனர்.

தொற்று நோய் காலத்தில் இது ஏன் பிரபலம் அடைந்துள்ளது?

நான்கு நாள் வேலை வாரம் மாதிரி, முறையான வருகைப் பதிவை கையாளுதல் மற்றும் அலுவலகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விசயங்களில் சிக்கல்கள் இருப்பதால் வளர்ந்து வருகிறது. வேலையில்லா நிலை அதிகம் வளர்ந்து வருவதால், குறைவான வேலை வாரம் நிறைய நபர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். வாடகை, மின்சார பில்கள் மற்றும் பிற செலவுகளை குறைத்து முதலாளிகளின் சுமையை குறைக்கிறது.

இது புது நிகழ்வா?

இல்லை. வேலை வாரத்தை குறைப்பது புதுமையானது அல்ல. ஆனால் 40 மணி நேரம், ஐந்து நாள் வேலை என்பது சமீபத்திய கருத்து. இது 1930 களின் பெரும் மந்தநிலைக்கு முந்தையது, வாரத்தில் வேலை நேரங்களைக் குறைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைகளை பாதுகாக்கும் ஒரு வழியாகும். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், இதேபோன்ற சூழ்நிலையை நாம் மீண்டும் எதிர்கொள்கிறோம்.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உற்பத்தித்திறன் அதிகரித்ததால் மொத்த வேலை நேரங்கள் படிப்படியாக குறையும் என்று அறிஞர்கள் கணித்துள்ளனர். 1928 ஆம் ஆண்டில் பொருளாதார வல்லுந்ர் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் ( John Maynard Keynes) , வேலை வாரத்தை ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் 15 மணி நேரமாகக் குறைக்க முடியும் என்று கூறினார்.

1920 மற்றும் 30 காலகட்டங்களில், ஹென்றி ஃபோர்ட் போன்ற தொழிலதிபர்கள் வேலை நேரத்தை குறைத்தனர். அப்போது சராசரியாகா நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை என்பது செயல்திறனை அதிகப்படுத்தியது என்பதை கண்டறிந்தனர். மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச நேரம் என்பது, நிறைய பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் காரணமாக இருந்தது என்றும் அவர் அறிந்தார். 1926 ஆம் ஆண்டில் வேர்ல்ட்ஸ் ஒர்க் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஃபோர்டு, “வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையில் ஓய்வு என்பது ஒரு இன்றியமையாத மூலப்பொருள், ஏனெனில் உழைக்கும் மக்களுக்கு ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட நுகர்வோர் தயாரிப்புகளுக்கான பயன்பாடுகளைக் கண்டுபிடிக்க போதுமான இலவச நேரம் தேவை.” என்று கூறியிருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 இல் உலகளாவிய நிதி நெருக்கடியின் மத்தியில், ஜெர்மனி ‘குசர்பீட்’ (Kuzarbeit) என்ற குறுகிய கால வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக அவர்களின் வேலை நேரங்களைக் குறைத்தது. இதன் கீழ், தொழிலாளர்கள் வேலை செய்யாத மணிநேரங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 60 சதவீதத்தைப் பெற்றனர், அதே நேரத்தில் அவர்கள் வேலை செய்த மணிநேரங்களுக்கு முழு ஊதியத்தையும் பெற்றனர்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தலின் போது, தொழிற்கட்சி 10 ஆண்டுகளுக்குள் ஊதிய இழப்பு இல்லாமல் நான்கு நாள், 32 மணி நேர வேலை வாரத்தை அறிமுகப்படுத்த முடியும் என்று கூறியது. இந்த நடவடிக்கையை கன்செர்வேட்டிவ் கட்சியினர் கடுமையாக் எதிர்த்தனர். இது நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

மிக சமீபத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜப்பானில் உள்ள தனது அலுவலகங்களில் நான்கு நாள் வேலை வாரம் மாதிரியை சோதனை செய்தது. அதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக மட்டுமல்லாமல் கணிசமாக அதிக உற்பத்தி திறனையும் அளித்துள்ளனர் என்று கண்டறிந்தது. ‘ஒர்க்-லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் சம்மர் 2019’ இன் ஒரு பகுதியாக, அந்நிறுவனத்தின் 2,300 பணியாளர்களுக்கு சம்பளத்தைக் குறைக்காமல் தொடர்ச்சியாக ஐந்து வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டது.  அதிகரித்த உற்பத்தித்திறனைத் தவிர, ஊழியர்கள் 25 சதவீதம் குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டதாகவும், மின்சார பயன்பாடும் 23 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மொத்த பணியாளர்களில் குறைந்தது 92 சதவீதம் பேர் குறுகிய வாரத்தை வரவேற்றனர் என்று கூறியது.

நான்கு நாள் வேலை வார மாதிரியை வரவேற்கும் தலைவர்கள் யார்?

மே மாதம், முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடெர்ன், நான்கு நாள் வேலை மாதிரிகளை நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தின்னார். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, தொற்றுநோய் காலத்தில் நிறுவனங்கள் மீண்டு வர உதவவும் இதனை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

”நீங்கள் ஒரு முதலாளியாக இந்த நான்கு நாள் வேலை வாரத்தை நிறைவேற்றும் நிலையில் இருந்தால் அதைப் பற்றி சிந்திக்க நான் ஊக்குவிக்கிறேன்," என்று அவர் கூறினார் .

அயர்லாந்தில், தொழிற்சங்கங்கள், ஆர்வலர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கூட்டாக இணைந்து நான்கு நாள் வேலை வாரத்தை உறுதி செய்யும் பிரச்சாரத்தில், வேலை செய்வதற்கான புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயும், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியும் புதிய மாடலுக்கு செல்ல, மிகவும் சந்தர்ப்பமான நேரத்தை வழங்குகிறது என்று அந்த கூட்டமைப்பு நம்புகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், நான்கில் மூன்று பேர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ரஷ்யாவின் பிரதமர் மெத்வதெவ், நான்கு நாள் வேலை வாரம் தொழிலாளர்கள் நாட்பட்ட சோர்வவினையும் பர்ன் அவுட் சின்ரோமையும் சமாளிக்க உதவும் என்று பரிந்துரை செய்ததாக மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment