பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட கோல்கீப்பர் விருது

The Global Goalkeepers Award to PM Narendra Modi: அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு...

ஓம் மராதே, சப் எடிட்டர், இந்தியன் எக்ஸ்பிரஸ்,
சட்டம், வெளியுறவுக்  கொள்கையில் ஆர்வம் உள்ளவர்
The Global Goalkeepers Award given to PM Narendra Modi:
 நியூயார்க்கில் பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய கோல்கீப்பர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும், அந்த நிகழ்வில், குழந்தை திருமணத்துக்கு எதிராக பணியாற்றியதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த பயல் ஜாங்கிட் என்ற 16 வயது சிறுமிக்கு மாற்றத்தை உருவாக்குபவர் (Changemakers) விருது வழங்கப்பட்டது.

ஐ.நா.பொதுச்சபை 2015 ஆம் ஆண்டில் 2030 ஆம் ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதை நோக்கி உலகம் முழுவது மாற்றங்களை உருவாக்குபவர்களின் பங்களிப்புகளுக்காக இந்த கோல்கீப்பர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கோல்கீப்பர் விழாவில் இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வு 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.

ஐ.நா-வின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் கோல்கீப்பர் விருது என்றால் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் வலைதளம், நிலையான அபிவிருத்தி இலக்குகள் (எஸ்.டி.ஜி.) என்பதை “அனைவருக்கும் சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தை அடைவதற்கான வரைபடம்” என்று விவரிக்கிறது.

இதில் 17 இலக்குகள் உள்ளன. அவை 2015 ஆம் ஆண்டில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், நிலையாண அபிவிருத்திக்கான 2030 ஆண்டு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்த இலக்குகள் உலகளவில் பொருந்தக்கூடியவை. வறுமை, சமத்துவமின்மை, கால நிலை மாற்றம் போன்ற சிக்கலான பிரச்னைகளில் நாடுகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு வரிபடமாக அவை செயல்படுகின்றன.

2015-இல் ஐ.நா நிர்ணயித்த 17 இலக்குகள் (இலக்கு 1 முதல் 17 வரை):

வறுமை இன்மை, பட்டினி இன்மை, நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான தண்ணீர், சுகாதாரம், மலிவான மாசில்லாத ஆற்றல், கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி, தொழிற்சாலை, புதுமை, உள்கட்டமைப்பு, சமத்துவமின்மையை குறைத்தல், உறுதியான நகரங்கள் மற்றும் சமூகங்கள் பொருப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி, காலநிலை நடவடிக்கை, நீர்நிலைகள் சார்ந்த வாழ்க்கை, நிலப்பகுதிகள் சார்ந்த வாழ்க்கை, அமைதி, நீதி, வலிமையான நிறுவனங்கள், இலக்குகளுக்கான கூட்டு ஆகியமை ஆகும்.

கோல்கீப்பர் விருதுகள்

2017 ஆம் ஆண்டிலிருந்து பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிலையான அபிவிருத்து இலக்குகளின் உலகளாவிய முன்னேற்றத்தைக் கண்காணித்து ‘கோல்கீப்பர்ஸ்’ என்ற ஆண்டு அறிக்கை அட்டையை வெளியிட்டு வருகிறது.

இந்த பவுண்டேஷனின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த அறிக்கை அடையப்பட்ட முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்த சக்திவாய்ந்த செய்திகள், தரவு, கூட்டாண்மைகளைப் பயன்படுத்துதல், அரசாங்கங்களை பொறுப்புக்கூற வைத்தல் மற்றும் உலகின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள புதிய தலைமுறை தலைவர்களை ஒன்றிணைத்தல் மூலம் இந்த முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

சாதனையாளர்களை கௌரவிக்கும் செயல்பாட்டை கோல்கீப்பர்ஸ் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டின் நிகழ்வு ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வுடன் ஒத்துப்போனது. இது செப்டம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நியூயார்க் நகரில் நடைபெற்றது.

கோல்கிப்பர்ஸ் நிகழ்வில் ஐந்து வகையான விருதுகள் உள்ளன. முன்னேற்ற விருது (வயதுவரம்பு 16 – 30), மாற்றத்தை உருவாக்குபவர் விருது (வயது 16 – 30), பிரசார விருது (வயது 16 – 30) கோல்கீப்பர்ஸ் குரல் விருது (வயது வரம்பு இல்லை) கோல்கீப்பர் விருந்து (வயது வரம்பு இல்லை)

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உலகளாவிய கோல்கீப்பர் விருது, “தங்கள் நாட்டில் மற்றும் உலகளவில் பயனுள்ள வேலைகள் மூலம் உலகளாவிய இலக்குகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய ஒரு அரசியல் தலைவரைக் கொண்டாடுகிறது.”

கடந்த காலங்களில், கோல்கீப்பர்ஸ் நிகழ்வில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் மற்றும் நதியா முராத் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.

ஆங்கிலத்தில் படிப்பதற்கு
//indianexpress.com/article/explained/explained-what-is-the-global-goalkeepers-award-given-to-pm-modi-6031676/

தமிழில் – பாலாஜி எல்லப்பன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close