Advertisment

அமெரிக்காவின் அரசு, தொழிற்துறை நிறுவனங்களில் இந்திய வம்சாவளிகளின் வளர்ச்சி எத்தகையது?

2010ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக உயர்ந்தார். அமெரிக்க செனெட் சபைக்கு 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
அமெரிக்காவின் அரசு, தொழிற்துறை நிறுவனங்களில் இந்திய வம்சாவளிகளின் வளர்ச்சி எத்தகையது?

Nushaiba Iqbal

Advertisment

The growth of Indian Americans, in public office and industry :  இந்திய தாய்க்கு மகளாக பிறந்த கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் வாழும் இந்திய வம்சாவளிகளின் பிரதிநிதிவத்துவமாக அவர் பார்க்கப்படுகிறார்.

இமிக்கிரேசன் மற்றும் தேசிய சட்டம் 1965க்கு முன்பு நடைபெற்ற மக்கள் உரிமைகளுக்காக போராடிய போராட்டக்காரர்களுக்கு மகளாக பிறந்தார் ஹாரீஸ். இந்த சட்டம் வெளிநாட்டுகாரர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளுக்கு விலக்கு அளித்தது. அந்த சமயத்தில் அமெரிக்காவில் ஒரே ஒரு இந்திய அரசியல்வாதி இருந்தார். பஞ்சாபில் பிறந்த தலீப் சிங் சௌந்த் அவர். அவரும் கலிஃபோர்னியாவை சேர்ந்தவர்.

தலீப்பை போன்றே ஹாரிஸும் சட்டம் பயின்றார். அலமேடா பகுதியில் மாவட்ட வழக்கறிஞராக அவர் 1990களில் பணியாற்றினார். இந்தியர்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்காக 1994ம் ஆண்டு காங்கிரஸ்னல் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் இந்தியா மற்றும் அமெரிக்காவினருக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கான நலவாழ்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் இந்திய வம்சாவளியான நிமி மெக்கோனிஜ்லே வியோமிங் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க பாராளுமன்றத்தில் இடம் பெற்ற இரண்டாவது இந்திய வம்சாவளி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செனெட் இந்தியா காகஸ் 2004ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் ஹாரிஸ் சான் ஃபிரான்ஸிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்டார். 2010ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக உயர்ந்தார். அமெரிக்க செனெட் சபைக்கு 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு நான்கு இந்திய வம்சாவளியினர் ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசெண்டேட்டிவ்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் பல இந்திய வம்சாவளியினர் செண்ட் சபைக்கும் மற்ற மாகாணங்களில் காங்கிரஸ் சபைக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

லூசியானாவின் கவர்னராக பாபி ஜிண்டாலும், தெற்கு கரோலினாவில் நிக்கி ஹாலேவும் கவர்னராக பணியாற்றினார்கள். முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் முக்கிய பொறுப்புகள் வகிக்கின்றனர். எவ்வாறாயினும், கடந்த சில தசாப்தங்களாக இந்திய புலம்பெயர்ந்தோர் செல்வாக்கைப் பெற்ற ஒரே ஒரு கோளமாக அரசியல் இல்லை.

1980 முதல் 2010 வரை அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகளின் மக்கள் தொகை 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியர்களை ஒரு தனித்துவமான இனமாக எண்ணும் முதல் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடைபெற்றது.

இந்தியர்கள் அமெரிக்காவில் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் தொடர்பான வேலைகலை செய்தனர். குஜராத்தின் படேல் சமூகத்தினர் இங்கு ஹோட்டல் துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மற்றவர்கள் 1980களுக்கு பிறகு ஏற்பட்ட டிஜிட்டல் புரட்சிக்கு பின்பு சிலிக்கான் வேலியில் பணியாற்றுகிறார்கள். 1997ம் ஆண்டு ரமணி ஐயர், பார்ச்சூன் 500 நிதி நிறுவனமான தி ஹார்ட்ஃபோர்டின் தலைமை நிர்வாக அதிகாரியானார். அமெரிக்க வணிகங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்விகர் சிங், சஞ்சோய் சக்ரவர்த்தி மற்றும் தேவேஷ் கபூர் ஆகியோர் கூறுகையில், தி அதர் ஒன் பெர்சண்ட்: இந்தியன்ஸ் இன் அமெரிக்கா என்ற புத்தகத்தின் தரவு படி அமெரிக்க மக்கள் தொகையில் 1% இடம் பிடித்திருக்கும் இந்தியர்கள், சிலிக்கான் வேலியில் துவங்கப்பட்டிருக்கும் தொழில்களில் மூன்றின் ஒரு பங்கு இந்திய வம்சாவளியினரால் உருவாக்கப்பட்டது. உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் 8% இந்திய வம்சாவளியினரால் உருவாக்கப்பட்டது.

மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், அடோப், ஐபிஎம் மற்றும் மாஸ்டர்கார்டு உள்ளிட்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களில் 2% இந்திய வம்சாவளிகளில் வழிநடத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள 7 மருத்துவர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்பின் சுகாதாரத்துறை ஆலோசகர் சீமா வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இயங்கும் பாதிக்கும் மேற்பட்ட மோட்டல்கள் இந்திய வம்சாவளியினரால் நடத்தப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் பலர் அரசியல் ஆர்வலர்கள், ஹாலிவுட், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் காமெடியன்களாகவும் வலம் வருகின்றனர். நீண்ட காலமாக, தொலைக்காட்சியில் அதிகம் காணக்கூடிய இந்தியர் சிம்ப்சன்ஸ் கதாபாத்திரத்தில் வந்த அப்பு. இப்போது, இந்திய அமெரிக்க நடிகர்களான கல்பென் சுரேஷ் மோடி அல்லது கார் பென், அஜீஸ் அன்சாரி மற்றும் மிண்டி கலிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்,

அவர்களில் பெரும்பான்மையானோர் லாபகரமாக இயங்கும் தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால் அவர்களின் சராசரி குடும்ப வருமானம் என்பது 1990களில் 44,696 டாலர்களாகும். அன்றைய காலகட்டத்தில் அனைத்து ஆசிய கம்யூனிட்டிகளை காட்டிலும் கூடுதலாக வருமானம் ஈட்டினார்கள் இந்தியர்கள். இன்று அந்த வருமானம் 90,711 அமெரிக்க டாலர்கள். சராசரி ஆசிய - அமெரிக்கர்களின் வருமானமான 67022 அமெரிக்க டாலர்களை காட்டிலும் இவை அதிகம். இந்திய மாணவர்கள் மற்றும் திறமையான துறைசார் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்ட விசா திட்டங்கள் மூலமாகவே பல இந்தியர்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kamala Harris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment